ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, July 14, 2009


சீமானும் கோட்சேயும் சில பதிவுகளும்


சமூகப் பொறுப்பு என்பது என்ன? தனக்குத்தனக்கு அளவான தொப்பியைத் தலையில் போட்டுக்கொண்டு நடப்பதா? அப்படித் தான் படுகின்றது. அப்படி இருப்பவர்கள் தான் சமூகப் பொறுப்போடு சிந்திப்பதாக காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். சமூகப் பொறுப்பு என்பது நீதி நியாயங்களை உடைத்துச் செல்வது தானா?

அண்மையில் சீமான் ஈழப்பிரச்சினை பற்றி ஒரு இதழில் பிரஸ்தாபித்திருந்தார். பேச்சின் இடையில் "தமிழ் ஈழத்தை காந்தி எதிர்த்தால் அவரையும் எதிர்ப்போம். ஈழத்தை கோட்சே ஆதரித்தால் அவரை அதரிப்போம்". கோட்சேயை ஆதரிப்பது பற்றி கேள்விகள் இருக்கலாம்.அதே போல ஈழத்தை நேசிக்கும் ஒருவன் அதை எதிர்ப்பவர்களை எதிரியாய்ப் பார்ப்பதிலும் தவறொன்றுமில்லை தானே.

பெரும் இழப்பு பெரும் கோபத்தைக் கொண்டுவரும். அதே இழப்பு அநீதியால் விளையும் போது அதீத கோபம் வரும். அநீதியாளர்களை எதிர்க்க வீதியில் இறங்க வைக்கும். இங்கும் அது தான் நடந்திருக்கின்றது. மகாத்மா காந்தியின் பெயரால் ஆட்சியைப் பிடித்தவர்கள் "காந்தி"யின் பெயரால் ஆட்சி செய்யும் போது இழைக்கப்படும் அநீதியின் மேல் உண்டாகும் கோபம் இரட்டிப்பாகும்.

கோட்சேயை ஆதரிப்பதை மனதளவில், ஏற்றுக் கொள்ள முடியாத சமூகப் பொறுப்பாக எடுத்துக்கொண்டாலும் அந்தக் கோபத்தின் நியாயத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக்கழிப்பது எவ்வாறு சரியாகும். வார்த்தைகளுடன் விளையாடுவதை விட உயிர்களுடன் விளையாடுவது எவ்வளவு வலி மிகுந்தது. இதை ஏன் இந்தச் சமூகப்பொறுப்பாளர்களால் புரிந்து கொள்ள முடியாது போகின்றது. அங்கு இழைக்கப்படும் அநீதி அவர்கள் கண்ணிற்குத் தெரிவதில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாத பாவனையா?

ஈழ மக்களிற்கு எதிராக நடந்தேறிய அநீதியான யுத்தத்தில் இந்தியாவின் அழுக்கு முகத்தை அறியாதவர் யார்? இந்தியா உருவாவதற்கு காரணமாய் இருந்த அஹிம்சை, காருண்யம், நேர்மை எல்லாவற்றிலிருந்தும் விலகி எங்கேயோ போய் விட்டது.

ஈழத்தமிழர்களுடன் எதுவித பகமையும் இல்லாமலே அவர்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்ததன் மூலம் வரலாற்றில் திருத்த முடியாத தவறை இந்தியா செய்திருக்கின்றது.

அண்மையில் டெலிகிராப் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் றிச்சாட் டிக்ஸன்
"Nation of India has unfortunately deviated from its principles and core values, it was originally built upon. India might build rockets to the moon and giant monuments reaching to the skies but India will not succeed if it corrupts its own soul by aiding Genocide in other countries"அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார்.தன் தேசம் என்பதால் நேர்மை என்பதன் வேலிகளை மாற்றிப் போட முடியாது. நியாயம் என்ற தராசின் தட்டுகளை உயர்த்தி தாழ்த்த முடியாது.

இதனால் இவ்வாறு விளைந்தது என்ற காரணங்களையும் கூடவே அலசிப்பார்ப்பது தான் சமூகப் பொறுப்பாய் இருக்க முடியும். அரை குறையான எண்ணங்களுடன் எதைப்பற்றி பேசப் புறப்பட்டாலும் அது சரியாய் இருக்காது.

இந்தியா பலஸ்தீனத்தில் குண்டு போடாத காரணத்தாலேயே பலஸ்தீனியர்களுக்காக கவிதை எழுதுவது உங்களுக்கு உறுத்தவில்லை.ஈராக்கில் பீரங்கிகளால் உழுது தள்ளாத படியால் மனித நேசம் பற்றி பேச முடிகின்றது.இஸ்ரேலையும் அமெரிக்காவையும் திட்டித் தீர்க்க முடிகின்றது. ஆனால் ஈழத்தில் இந்தியாவின் விசக் கரங்கள விரிந்து செல்வதனாலா உறுத்தும் மனச்சாட்சியை அடக்க இந்திய இறையாண்மையை இறுக்கிப் பிடிக்கின்றீர்கள்.கோட்சேயும் மஹாத்மா காந்தியும் அவர்களாகவே இருக்கின்றார்கள். நாங்கள் தான் மாறிக்கொண்டிருக்கின்றோம். மஹாத்மாகாந்தியின் வழியில் தோன்றிய இந்தியா இன்று கோட்சேயிடம் சென்று சேர்ந்து விட்டது.

"கோட்சேயை ஆதரிக்கலாமா? " என்ற கேள்வியைக் கேட்பது போலவே ஹிட்லரை ஆதரிப்பவரை வக்காலத்து வாங்கலாமா? என்ற கேள்வியையும் சமமாகப் பொருத்திப் பார்க்கும் போது தான் சமூகப் பொறுப்பு துளிர்க்கும். அவ்வாறில்லாவிட்டால் தன் தனக்கு பொருத்தமான தொப்பிகளுடன் அலையும் வெறும் மனிதர்களைத் தான் காணமுடியும்.

//இழப்பின் வேதனைகள், தன்னிடம் இருப்பது மட்டுமே நியாயம் என்று வரையறையை உருவாக்கி விடுகிறது. அதே வேதனை கொண்ட மற்றவர்கள் கொஞ்சம் நிதானமாக இருப்பதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத கோபம் வருகிறது. வேறு கருத்துக்கள் இருக்கவே கூடாது என ஆணையிடுகிறது. அவர்களையும் துரோகிகள் என எந்த யோசனையுமின்றி பட்டம் கட்டிவிடுகிறது. இந்த கொந்தளிப்பான மனநிலை ஒருவித அடையாள அரசியலுக்குள் மனிதர்களை அரவமில்லாமல் நகர்த்திவிடுகிறது.//

இழப்பின் வேதனைகள் மட்டுமல்ல அநீதியை எதிர்க்கும் மனமும் துயரப்படும் மனிதர்களைத் தேடித் தோள் கொடுக்கும் பண்பும் தான் மனிதர்களை நிலைநிறுத்துகின்றது. வெறுங்கதை பேசுபவர்களைத் தூக்கிப் போடுகின்றது.

2 comments:

சுதந்திரன் said...

ஈழப் பிரச்சனையில் உலகமே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் போது உணர்வுள்ள எவனுமே அப்படித்தான் பேசுவான்! கவிதைகளும், அறிக்கைகளும் விட்டுகொண்டிருக்கும் கழைக் கூத்தாடி அரசியல் வியாதிகளுக்கு மத்தியில் உணர்வோடு இருக்கும் சீமானை மதிப்போம்.

ttpian said...

மஞல் துண்டு செத்தால்தான் தமிழ்நாடு உருப்படும்!

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil