ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, July 12, 2009


கி.வீரமணி என்ற இடக்கு மணி


தமிழர் தலைவர் என்று வரிக்கு வரி போட்டுக்கொள்கின்றார் கி.வீரமணி தன் பெயரின் முன்னால்..தமிழினத் தலைவர் (அப்படிங்கிர) கருணாநிதிக்கே சவாலா? கோழி நொண்டியா இருந்தா என்ன? குழம்பு ருசியாத் தான் இருக்கும் என்ற கவுண்டமணி வசனம் போல கலைஞருக்கு வயசு போனா என்ன? (கிழட்டு) சிங்கம் சிங்கம்தான்.. அந்தச் சிங்கத்துக்கிட்டேயே மோதிரியே வீரமணி... அவர் சக்கர நாற்காலியில இருந்து சண்டை போட மாட்டாரின்ன துணிச்சலா..?

அவரு தான் இரண்டு ரெ(ள)டி மேட் இளவரசர்களை வளர்த்திருக்காலில்லே.. கடைசி கடைசி பெயரில் இருக்கும் வீரமும் காலிடுக்கில் இருக்கும் மணியும் நசுங்கிப் போகப் போகுதப்பா... வளர்த்த கடான்னு இதைத் தான் சொல்லுரது... முட்ட நெனைக்கரது கலைஞரை ...

கலைஞரே சொல்லிக் கொடுத்த "தமிழ்" விளையாட்டை கலைஞருக்கே சொல்லிக்கொடுக்க நினைக்கின்றது இந்த இடக்கு மணி.

//''கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்குக் கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களைக் கைதிகளாகக் கொண்டுவந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால் தட்டிக்கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை''//

என்று அனல் கக்கப் பேசி அரசியல் குளிர்காய்ந்த கருணாநிதி இன்று,

//''எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல் அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'//

என்று அந்தர் பல்டி அடித்து மெகா சீரியல் காட்டவில்லையா? அவரை மிஞ்சி விடுமா உங்கள் நடிப்பு.


//''இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய்-தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதை எல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? நாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியா வேறு... தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக்கொண்டு இருக்க நீங்கள் தமிழருக்குச் செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்றுவிடுகிறதே, என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா?''//

என்று அன்று இராஜீவ் காந்தியிடம் கனல் பறக்கக் கேட்ட கருணாநிதி //''மிசாவைக் காட்டி மிரட்டினால் தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்''//

என்ற அஞ்சாநெஞ்சன் கருணாநிதி அளவிற்கு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கின்றீர்களா? அப்படிப்பேசிய கருணா நிதியே இப்போது,

//''எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்... அது நல்லதல்ல! //

என்று பம்மிப் பணிந்து நிற்கும் போது நீங்கள் வார்த்தை மாறி வேடிக்கை காட்டுவது ஒன்றும் பெரிய விடயமேயில்லை.

//இவ்வளவு பேர் வீரம் பேசுகிறவர்கள் ஏன் கனடாவுக்குப் போயிருக்கிறீர்கள்? இவ்வளவு வீரம் பேசுகிறவர்கள் ஏன் வெளிநாட்டிற்குப் புலம் பெயர்ந்தீர்கள்

நீங்கள் தானே முதல் ஆளாகப் போயிருக்க வேண்டும் அங்கே. இப்பொழுதாவது அங்கே போகாமல் எங்களை முதலில் போகச் சொல்லுகிறீர்களே, முதலில் நீங்கள் போங்கள் நாங்கள் பின்னால் வருகிறோம்.//

என்று நீங்கள் கேட்பதை வைத்து உங்களைக் கோழை என்றெல்லாம் சொல்ல மாட்டோம். ஒரு பச்சைச் சந்தர்ப்பவாதியை, பணத்துக்காக நாக்கைத் தொங்கப்போட்டு அலையும் அரசியல் அயோக்கியத்தனத்தை அப்படியெல்லாம் சொல்லி கோழைகள் மீது சேறடிக்க மாட்டோம்.

//உனக்கே அவ்வளவு சிக்கல் இருக்கிறதென்றால், நேரடியாகப் பலன் பெறுகிறவர்கள் எங்களுக்கு எவ்வளவு சிக்கல்கள் இருக்கும்? எங்கள் நாட்டில் எங்கள் கொள்கைக்கு விரோதமாக இல்லாத ஓர் அரசாங்கம் வரவேண்டும் என்று பார்த்துக்கொண்டுதானய்யா ஆதரிக்க முடியும்.//

அடேங்கப்பா... என்ன ஒரு கொள்கை விளக்கம். நேரடியான பலன் பணமூட்டைகள் தானே? எதையா உன் கொள்கை. அநீதியைக் கண்டு போராடுவதா? அல்லது அடங்கிப் போய் ஐய்ந்துக்கும் பத்துக்கும் கை நீட்டுவதா?

உங்கள் கொள்கை எதுவென்றாவது சொல்லித் தொலைக்க வேண்டியது தானே? கருப்புச் சட்டைக்குள் இன்னும் எத்தனை கருமத்தை ஒழித்து வைத்திருக்கின்றாய்?

//இன்றைக்கு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருப்பதால் தானே எதையாவது சொல்ல முடிந்தது. நமது அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்ததை ஒட்டித் தானே சொல்ல முடிந்தது. அதற்குத் தெளிவாக நீங்கள் வாக்களித்த காரணத்தினால் தானே உரிமை கொண்டாட முடிந்தது.//

இத்தோடு சேர்த்து 50 ஆயிரம் ஈழத்தமிழர் உயிரையும் காக்க முடிந்தது என்று சொல்லியிருந்தால் சொல்லும் நிலையிருந்திருந்தால் நீ சொன்னதில் அர்த்தம் இருந்திருக்கும்.. அது தான் நடக்கவில்லையே.. நீ சொன்ன மந்திரிப் பதவிகளுக்குத்தானே அத்தனை உயிரும் பலிக்கடாவானது.

//எனவே அறிவு பூர்வமான சிந்தனை என்பது மிக முக் கியம்.
தி.மு.க., தி.க பணி உணர்ச்சி பூர்வமானது என்ன? உடனே தூக்கி எறிந்துவிட்டு வா என்பதா? நம்மோடு வந்து நிற்பது என்றால் நம்மோடு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாமே!//

நாங்கள் என்ன குட்டிச் சுவர் தேடும் கழுதைகளா உன்னோடு வந்து உரசிக்கொண்டு நிற்க...அல்லது தெருநாய்களா எச்சிலிலைக்காக வாலை ஆட்டிக்கொண்டு வர...

//அய்யா சொன்னார். ஓர் அடிமை இன்னொரு அடிமையை எப்படி காப்பாற்ற முடியும்ங்க? என்று கேட்டார். அதில் எல்லாமே அடங்கிப்போய் விட்டது.//

அப்புறம் ஏன்யா உனக்கு தமிழ்ப்பற்று, தமிழுணர்வு, அரசியல்வாதி வேடம் ,தோளில துண்டு, இடுப்பில வேட்டி...

அப்புறம் நீயெப்படி தமிழர் தலைவர்?

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil