ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, July 12, 2009


அபி அப்பாவின் அராஜகம்..ஆபாசம்


பதிவுலகம் சில காலம் சிண்டைப்பிடித்துக் கொண்டிருக்கின்றது .யார் சரி ..யார் பிழை என்றெல்லாம் நான் இங்கு கருத்துக் கூறவரவில்லை. ஒவ்வொருவரும் தமக்குள்ள சுதந்திரத்தில் கருத்துக் கூறுகின்றார்கள். ஏற்பவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள்... மற்றவர்கள் தங்கள் எதிர்க்கருத்தைப் பதிவு செய்கின்றார்கள்.

இதுவரை எல்லாம் சரியாகவே இருக்கின்றது...இருந்தது. கருத்துகள் ..எதிர்க்கருத்துகள்.. இது ஒவ்வொருவருக்கும் இருக்கக் கூடிய ஜனநாயக உரிமை. பதிவுலகம் அப்படியே இருக்கின்றது..இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இதனிடையில் இன்று அபி அப்பாவால் வெளியிடப்பட்ட "உங்களுக்கு இருக்குடீ ஆப்பு!!!" என்ற பதிவு கடைந்தெடுக்கப்பட்ட அயோக்கியத்தனம்... குண்டர் அரசியலின் மிரட்டல்.

சைபர் கிரைம் பிராஞ்ச்சின் மயிரால் சொரியப்போகின்றாராம். இது தான் தி.மு.க அடிபொடிகள் செய்யும் குண்டார் அரசியல். அதன் அடிப்பொடியான அபி அப்பாவிடம் இருந்து இப்படியான கருத்துகள் வெளிவருவது ஒன்றும் ஆச்சரியம் அல்ல.

இத்தனை நாள் அபி அப்பா போட்ட நல்ல வேஷம் கலைந்ததும் மிகவும் நல்லதே. அந்தப் பெண்கள் "நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்" என்று வேறு உரசிப்பார்க்கப் போகின்றாராம். முதலில் இவ்வாறு ஆணவத்துடன் எழுதும் நீங்கள் ..நல்ல மனிதன் தானா?

உங்களுக்கு இருக்கக் கூடிய கருப்பு கண்ணாடி கழட்டா கருணாநிதியின் ஆட்சி செல்வாக்கை வைத்து இப்படியொரு மிரட்டலை விட உங்களுக்கு வெட்கமாயில்லையா?

ஜனநாயக சக்திகள் போராட்ட சக்திகள் என்று பதிவுலகில் வளைய வருபவர்கள் இது பற்றி வாய் திறக்காது இருப்பதேன்? பெண்ணிய வாதிகள் என்று கூவித்திரிபவர்கள் "ஒரு பெண்ணின்" நல்ல தனத்தை ஏலம் போட முற்படும் அபி அப்பாவைக் கண்டனம் செய்யாதது ஏன்?

உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்.

நான் அவர் பதிவிலேயே என் கமெண்ட் கூறியிருக்கின்றேன். வெளிவிடுவதும் விடாததும் அவர் இஸ்டம். பதிவுலகையும் தி.மு.க ரெளடி அரசியலுக்கு பலியாகாமல் காப்போம்...

குறிப்பு: ஒரு பதிவரைப் பற்றி இப்படி எழுத நேர்ந்ததையிட்டு மிகவும் துன்பமாக இருக்கின்றது.

அபி அப்பாவின் பதிவு:http://abiappa.blogspot.com/2009/07/blog-post_12.html

21 comments:

Anonymous said...

இன்று அந்த பதிவை படித்தவுடன் என் மனதில் தோன்றிய அதே கருத்தை செறுப்பால் அடித்தது போல் பதிவு செய்தமைக்கு நன்றி...

இவர் காட்டும் பூச்சாடிகளுக்கு பயப்படும் அடிமைகள் இல்லை பதிவுலகம்.

சேகர்
சிங்கப்பூர்

அபி அப்பா said...

சந்தோஷம், என்னை திட்ட கலைஞரை இழுத்தது! உங்க பின்னூட்டம் தான் முதல்ல நான் வெளியிட்டது. அதுக்கு பதிலும் சொல்லியாச்சு. தவிர என் பெயரும் , ஊரும், அட்ரசும் உலகுக்கே தெரியும். நான் உன்னை மாதிரி முகமூடி போட்டு கொண்டது இல்லை!

நீ இதை வெளியிடுவியான்னு தெரியாது தம்பி!

இட்டாலி வடை said...

வாருங்கள் அனானி!

செருப்பால் ஒன்றும் அடிக்கவில்லை..தேவையும் இல்லை.
அபி அப்பா ..நல்ல மனிதன் தான் ஏன் இப்படி அத்துமீறுகின்றார் என்று தான் புரியவில்லை..

இனி விளங்கிக்கொள்வார்.. விளங்கிக் கொள்ள வேண்டும்...

இட்டாலி வடை said...

அபி அப்பா!

சின்னப்பிள்ளைத்தனமாயிருக்கு... கிரைம் பிராஞ்ச் பற்றித் தெரிந்த உங்களுக்கு ஒன் லைன் நெற் வேக் பற்றித் தெரியவில்லையென்றால் ஆச்சரியம் தான்...

முகமூடி என் எழுத்துகளுக்குத் தான் எனக்கல்ல...அதாவது நீங்கள் விரும்பும் பட்சத்தில் என் பெயர் ஊர் முகவரி ஓல் பயோ டேட்டா தருவதற்கு நான் தயார்...

மோதிக் கொள்ள இடத்தை நீங்கள் தெரிந்தெடுங்கள்...

அபி அப்பா said...

சைபர் கிரைம் என்பது பத்தி முதல்ல தெரிஞ்சுகுங்க. என் அட்ரஸ் எல்லார் கிட்டயும் இருக்கு. எங்க வேணா மோத தயார்!

இட்டாலி வடை said...

அபி அப்பா ! சைபர் கிரைம் போற அளவிற்கு அந்தப் பெண்கள் தவறு ஒன்றும் செய்யவில்லை என்பது என் கருத்து.. என் கருத்துத் தான்.. ஒவ்வொருவருடைய அளவீடும் மாறுப்டலாம்..

அதற்கு இப்படியான மிரட்டல் சரிவராது.. உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ள வேண்டியது தான்.. இப்படிப் பதிவாகப் போட்டு பூச்சாண்டி காட்டுவது..."நான் யார் காட்டுகின்றேன் பார்.." என்ற உங்கள் ஆணவம் ..மிதப்பு..

என் அரசியல் செல்வாக்கென்ன..என்ற ரெளடித்தனம்தான்..

சாதாரண நினைவுள்ள மனிதரென்றால் எதிர்ப் பதிவு மட்டுமே உங்கள் பிரதிபலிப்பாக இருக்கும்...

இது உங்கள் கட்டுப்பாட்டில் தான் பதிவுலகமே இருக்கின்றது என்ற போதை.. "அடுத்து குசும்பனும் அடிக்கின்றான்" என்ற பின்னூட்டம் உங்கள் அடிப்பொடி அரசியலின் தோரணை..

இதெல்லாம் வேண்டாமே..

குடிகாரன் said...

//.. "அடுத்து குசும்பனும் அடிக்கின்றான்"//

அது எனக்கு சொன்ன பதில்.

சொல்லவேண்டியதை நேரடியாகவே சொல்லலாம். நீங்களாகவே இடும் அனானி பின்னூட்டம் தேவையில்லாதது.

இட்டாலி வடை said...

வாருங்கள் குடிகாரன்!
அவர் பதிவில் உங்களுக்குச் சொன்னதைத்தான் குறிப்பிட்டிருக்கின்றேன்..என் பெயரில் .

இதில் அனானி எங்கே வந்தது...

அவருடைய மனதின் அகங்காரம் தான் அந்த வார்த்தைகள்..குசும்பன் மட்டுமல்ல..இன்னும் பலரை அவர் ஏவி விடக் கூடும்..

இப்படி நடந்தால் பதிவுலகம் அழிந்து போகும்.. சுயமான சுதந்திரமான கருத்துக்கள் வெளிவரமாட்டாது..சொல்லத் தயங்குவார்கள்..நமக்கேன் வம்பு என்று ஓடி ஒழிவார்கள்..இது அராஜகம் இல்லையா?

குடிகாரன் said...

//Anonymous said...
இன்று அந்த பதிவை படித்தவுடன் என் மனதில் தோன்றிய அதே கருத்தை செறுப்பால் அடித்தது போல் பதிவு செய்தமைக்கு நன்றி...

இவர் காட்டும் பூச்சாடிகளுக்கு பயப்படும் அடிமைகள் இல்லை பதிவுலகம். //

நான் சொன்னது இந்த அனானியைத்தான்.

//குசும்பன் மட்டுமல்ல..இன்னும் பலரை அவர் ஏவி விடக் கூடும்..//

யாருமே ஒருத்தவங்க சொன்னவுடனே தப்பா சரியான்னு பாக்காம பதிவு போடமாட்டாங்க.

//இப்படி நடந்தால் பதிவுலகம் அழிந்து போகும்.. சுயமான சுதந்திரமான கருத்துக்கள் வெளிவரமாட்டாது..சொல்லத் தயங்குவார்கள்..நமக்கேன் வம்பு என்று ஓடி ஒழிவார்கள்..இது அராஜகம் இல்லையா? //

சுயமான கருத்தை வெளியிட தயங்குபவர்களோ, ஓடி ஒளிபவர்களோ பதிவுலகத்துக்கு தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

இட்டாலி வடை said...

வாருங்கள் குடிகாரன்!

"..நீங்களாகவே இடும் அனானி பின்னூட்டம் தேவையில்லாதது.'

இப்போது தான் உங்கள் உள்குத்து விளங்குகின்றது..இதெல்லாம் நமக்கு வரவே வராது..

அப்படியிருந்தால் அபி அப்பா சொன்னதைப்போல விளக்கெண்ணையாக அவருக்கு ஒரு பதிவு போட்டிருக்க மாட்டேன்..

அது சரி குடிகாரன் நீங்க தெளிவாகத்தான் இருக்கின்றீர்களா?

Barari said...

INTHAA VADAI ARABATHTHIL IRUNTHE UNGALAI KAVANITHTHU VARUKIREN UNGALIN KALAIZAR ETHIRPPU.UMMAAL MUDIYUMAANAAL ABI APPAAVUDAN SAMARUKKU SELLAVUM THAIRIYAMIRUNTHAAL. THENNAI MARATHTHIL THEL KOTTINAAL PANAI MARATHTHUKKU NERIKATTUVATHU POL ANAAVASIYAMAAKA KALAIZARAI IZUTHTHAAL MARIYAATHAI KETTU VIDUM.

இட்டாலி வடை said...

வாருங்கள் பராரி!
கலைஞரின் அரசியலை பகிரங்கமாகவே எதிர்த்து வருகின்றேன் என்பதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை..

அபி அப்பாவுடன் சண்டை எதுவும் இல்லை.. அவர் கூறிய கருத்து தோரணை பிடிக்கவில்லை..அதற்கான எனது பதிவு தான் இது..

மற்றும், வேறு குடும்பப்பெண்களின் "நல்ல தனத்தை " சோதிக்கும் இவரின் ஆணவம் கடுமையான கண்டனத்திற்குரியது.

குடிகாரன் said...

//இட்டாலி வடை said...
வாருங்கள் குடிகாரன்!

"..நீங்களாகவே இடும் அனானி பின்னூட்டம் தேவையில்லாதது.'

இப்போது தான் உங்கள் உள்குத்து விளங்குகின்றது..//

புரிஞ்சா சரி.

//அது சரி குடிகாரன் நீங்க தெளிவாகத்தான் இருக்கின்றீர்களா? //

நாங்க தெளிவாத்தான் இருக்கோம்.

//இட்டாலி வடை said...

அபி அப்பா!
நீங்க என்ன கருணாநிதியின் உதிர்ந்து போன மயிரா?

-இட்டாலிவடை//

இதை எழுதும்போது உங்களுக்குத்தான் கொஞ்சம் ஓவராயிருச்சு போல.

சொல்ல வந்த அல்லது சொன்ன கருத்து உங்களுக்கு தவறாக தோன்றினால் அதை மட்டுமே எதிர்க்கும் உரிமை உங்களுக்கு உள்ளது.

எதை எழுதினாலும் Publish பண்ணுறதுக்கு முன்னாடி கொஞ்ச்ம் யோசிங்க.

நன்றி.

இட்டாலி வடை said...

குடிகாரன்!
கருணாநிதியே தமிழகத்துக்குத் தேவையில்லாத அரசியல் சாக்கடை என்று நான் சொல்வேன்..

//கொடி பிடிப்பதும் எங்களுக்கு அத்துப்படி அதே கொடியை திருப்பி பிடிச்சா எப்படி என்பதும் அத்துபடி!//

இது தான் தி.மு.க வின் அரசியல் ..ரெளடி அரசியல்..

குடிகாரன் said...

//இட்டாலி வடை said...
குடிகாரன்!
கருணாநிதியே தமிழகத்துக்குத் தேவையில்லாத அரசியல் சாக்கடை என்று நான் சொல்வேன்.. //


பதிவின் நோக்கம் வேறு புறம் திரும்புவதால்...........

இத்துடன் ...........

நன்றி

குசும்பன் said...

இட்டாலி வடை அவர் எழுதியதை எடுத்துவிட்டார், அந்த மாதிரியான வார்த்தைகள் தவறுதான். மன்னிக்கவும்! இந்த பதிவை தாங்கள் எடுத்துவிடமுடியுமா?

chittoor.S.Murugeshan said...

நல்லாவே கொம்பு சீவறிங்களே ! வாய் தவறி (அடச்சை கை தவறி) ஒரு வார்த்தை அதையடுத்து அடுத்த வார்த்தைனு வந்து விழுந்தாச்சு. வாபஸ் வாங்கிக்கப்பா என்றால் சரி.. கூவி கூவி கும்பல் சேர்க்கிற மாதிரி இருக்கு

இட்டாலி வடை said...

வாருங்கள் குசும்பன்!

நீங்கள் வருவீர்கள்... சைபர் கிரைம் என்பீர்கள்...

"நல்ல வீட்டுப்பெண்களா..? " விடு உரசிப் பார்ப்போம் என்பீர்கள்...

இதெல்லாம் டூ மச்...அதன் ஆழம் ..அவலம் உங்களுக்கு விளங்கவில்லையா? நாமெல்லாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்... "நாதாறிகள்" என்று அவர் இழித்துப் பழித்துரைத்த அந்தப் பெண்களிடம் ..
பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.. அது தான் அவர் நல்லதனத்திற்கு அடையாளம்..

மற்றும் படி எனக்கு அபி அப்பா மேல் எந்த பகையும் கிடையாது.

குசும்பன் said...

//இதெல்லாம் டூ மச்...அதன் ஆழம் ..அவலம் உங்களுக்கு விளங்கவில்லையா? நாமெல்லாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்... "நாதாறிகள்" என்று அவர் இழித்துப் பழித்துரைத்த அந்தப் பெண்களிடம் ..
பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்//

அய்யா கேட்க சொல்லிடலாம், அதற்குமுன் இன்னும் பலர் கண்ணில் படும் முன் இந்த பதிவை எடுத்துவிடுங்களேன்! உங்களிடம் கெஞ்சிக்கேட்டுக்கிறேன்!

இட்டாலி வடை said...

வாங்க சிற்றூர் முருகேசன்!

இதை நீங்க அபி அப்பாவிடம் சொல்லியிருக்கக் கூடாதா?

குசும்பன் said...

நண்பரே அவர் செய்தது தவறுதான் அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன்! தயவு செய்து இந்த பதிவை எடுத்துவிடுங்கள்!

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil