ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, July 13, 2009


மனநோயாளர்கள் பார்க்கும் மனநோய் மருத்துவம்


இது ஒரு சுவாரசியமான விடயம். மனநோயாளர்களுக்கு மனநோயாளர்களே வைத்தியம் பார்ப்பது என்பது சுவாரசியம் இல்லையா? மனநோயாளர்கள் அதிகரித்து விட்டார்களா? என்று ஒரு பதிவை பழமை பேசி போட்டிருக்கார். ஏன்? எதற்கு? என்று கேள்விகள் இல்லாமலே அங்கும் கும்மி.

என்ன? அவரே சொல்லியிருக்கார் தமிழ் மணத்திற்கு வருவதற்கே சங்கடமாகியிருக்கின்றது. ஏன்? மனநோயாளிகள் இங்கு தான் குவிந்திருக்கின்றார்கள் என்பது அவர் எண்ணம். கேள்வி கேட்டவர்கள் எல்லாம் எங்கிருந்து கேள்வி கேட்டார்கள்? தமிழ்மணத்திலிருந்து தான் புற்றீசல்களாகக் கிளம்பி கொட்டமடிக்கின்றார்கள்.

என்ன? அவர்களுக்கு மறந்து விட்டது. அல்லது உறைக்கவில்லை. மனநோயாளர்களாக இருக்கும் நிகழ் தகவு அவர்களுக்கும் இருக்கின்றது என்பதை. என்ன செய்வது? அவ்வளவு அப்பிராணிகளாக இருக்கின்றார்கள்.

தமிழ் மணத்தில் எழுதும் பத்திரிகையாளர்கள் அனைவரும் அல்லது அவர்களில் பலர் அல்லது ஒரு சிலர் மனநோயாளர்கள் என்பது பழமைபேசியின் முடிந்த முடிபு. அவரின் இடுகை சுட்டுவது அதைத் தான்.

சரி.. அந்தப்பதிவிற்கு பதில் போட்டவர்கள் எல்லாம் தாம் அப்படி ஒன்றும் மனநலம் கெட்டவர்கள் அல்ல என்று எண்ணிக்கொண்டாலும்.. அவரின் பின்னூட்டங்களின் பின்னணியில் நடந்து முடிந்த "அக்கப்போரில்" பின்னூட்டியவர்கள் , போராடியவர்கள் இவர்களைக் குறித்தே அவரின் "மனநலம் கெட்ட" கணிப்பு இருந்திருக்கின்றது.

அந்தப் பதிவுகளில் பின்னூட்டியவர்கள் அக்கப்போரில் முட்டிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இங்கும் வந்து பதிலிட்டபோது அவர் நிச்சயம் சுவரில் முட்டிக்கொண்டிருப்பார். அவ்வளவிற்கு விளக்கெண்ணைகளா? நம் பதிவர்கள் என்று எதாலோ சிரித்திருப்பார்.

இதில் தமிழ் மணத்திற்கு கொம்பு சீவல் வேறு. ஐயா பதிவுலகம் பத்திரிகை உலகம் அல்ல. இது ஒரு அடுக்களை சாம்பிராச்சியம் போல. மனதில் பூட்டி வைத்ததை துண்டு நோட்டில் கிறுக்கி வைத்ததை சொந்த டைரியில் வரைந்து வைத்ததை பகிர்ந்து கொள்ள விரும்புவதை வெளியிடுவது போன்ற சமாச்சாரம்.

"வாடி என் மச்சி வாழைக்காய் பஜ்ஜி" என்னுமாற் போல டி.ராஜேந்தர் போல கவிதை எழுதும் பாமரனும் ஆர்வமிகுதியால் ஒரு புளக்கை ஆரம்பித்து எழுதிக் கிறுக்கி அல்லது கிறுக்கி எழுதி கடை விரிக்கும் இடம் தான் பதிவர் உலகம். இங்கு வந்து கவி பாடத் தெரிந்த கம்பன் இதெல்லாம் கவிதையா? சுத்தக் கிறுக்குப் பயல்களாய் இருக்காங்களே? இவர்கள் மனநோயாளிகளா? என்று கேட்டால் என்ன செய்வது?

தொம்பர் குப்பத்தில் இருந்து வந்த சாருவால் மலம் அள்ளுவது பற்றி விலாவரியாக எழுதமுடியும். அக்ரகாரத்தில் பிறழ்ந்து உழன்ற கிட்டுமாமாவால் இதைச் சகிக்க முடியாதுதானே. அதற்காக பாவம் சாரு என்ன செய்வார்? அவரை மனநோயாளி என்று சொன்னால் என்ன நியாயம்?

இங்கு ஒரு செளகரியம் எல்லோரும் எல்லாம் எழுதலாம். ஆனால் ஒரு அசெளகரியம் இருக்கின்றது எல்லோராலும் எல்லாவற்றையும் இரசிக்க முடிவதில்லை. அதனால் என்ன? கடந்து போக முடிவதனால் கடந்து போகலாம். போக வேண்டும்.

எல்லோருக்கும் பிடித்த இரசிக்கக் கூடிய புத்தகம் ஒன்று இருக்குமென்றால் அது சரோஜாதேவி புத்தகம் தான். அதை விட வேறு எந்தப்புத்தகமும் நூறு வீதம் மக்களைக் கவரவே கவராது. இது அடிப்படை.

அதனால் மனநோயாளிகள் என்பதெல்லாம் ரூ மச். சொல்பவர்கள் சொல்கின்றார்கள். கேட்பவர்கள் மனநோயாளர்களாக கும்மி அடிக்கின்றார்கள். இது சுவாரசியமாக இருக்கின்றது.
இன்னும் இன்னும் சுயமரியாதை என்பது என்னவென்று தெரியாத அவலம் இது.

அவர் கேள்வியையே ஒத்துக்கொள்ள முடியவில்லை. இப்போது மனநோயாளர்கள் அதிகரிக்கின்றார்கள் என்றால் ஏற்கனவே மனநோயாளர்கள் இங்கு இருக்கின்றார்கள்? யார் அவர்கள் ..?

குறிப்பு: என் எதிர்ப்பிற்கு அடையாளமாக ஒரு நெகடிவ் குத்து போட்டிருக்கேன் அவர் பதிவில்

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil