ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Monday, July 27, 2009
இந்தியா என்பது முட்டாள்கள் மட்டுமே வாழும் உலகமா?
இந்தியா என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கருத்திருக்க முடியும்.ஆனால் இந்தியா என்பதன் "தார்மீக வலு" சமீப நாட்களாக உடைபட்டு வருகின்றது என்று தான் தோன்றுகின்றது. இந்தியா தோன்றி 62 ஆண்டுகளுள் அதன் "பிரமாண்டம்" அதிகம் சேதம் அடைந்திருக்கின்றது. இந்தியா என்பது அகிம்சையை அன்பை போதிக்கும் கருணையின் ஊற்றுக்களான மதத்தைத் தோற்றுவித்த மண் என்ற பெருமையில் மிதந்த ஒரு நாடு. அதுவே அதற்கிருந்த மதிப்பும் மரியாதையும். சோவியத்தைப்போல் வர்க்கப் புரட்சியாலோ அமெரிக்காவைப் போல பிரமாண்ட வலிமையாலோ அறியப்பட்டதல்ல.
இன்று இந்தியாவின் உள் அடக்கப்பட்டிருந்த பல வேற்றுமையின் "முகங்கள்" வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. அதன் வெளிப்பாடாக இந்தியாவின் முகம் குரூரத்தைப் போர்த்திக் கொள்ளத் துவங்கியிருக்கின்றது. கயர்லாஞ்சியில் பிரியங்கா போன்ற அடக்கப்பட்டவர்களை ஆதிக்க சாதி வெறியர்கள் செய்த பாலியல் வல்லுறவு, மணிப்பூரில் ‘ இந்திய இராணுவமே எங்களையும் பாலியல் பலாத்காரம் செய்’ என தாய்மார்கள் நடத்திய நிர்வாண போராட்டடங்கள்,காஷ்மீரில் தினம் தினம் கொல்லப்படும் குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் அப்பாவிகள், ஈழத்தில் உயிர்குடித்த இந்திய ஆயுதங்கள் என்று எங்கும் குரூரத்தின் இரத்தம் தெறிக்கின்றது.
இலஞ்சம் இலாவண்யம் மட்டுமே அறிந்த அரசியல்வாதிகளின் கைகளில் அகப்பட்டு இந்தியா சின்னாபின்னமாகின்றது என்றால் பக்தி என்ற பெயரில் முட்டாள் தனம் செய்யும் பக்தர்களின் கூட்டமும் அதன் ஆன்மாவைக் கொன்று போடுகின்றது.
அண்மையில் சூரியகிரகணப்போதில் பிரமாண்ட இட்லிகள் கடலில் பக்தியின் பெயரால் கரைக்கப்பட்டது என்றால் கொதிக்கும் எண்ணெய்ச்சட்டியில் வெறும் கைகளால் வடை சுட்ட கோமாளித் தனம் அரங்கேறியிருக்கின்றது.
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் "காட்டுமிராண்டித்தனம்" பேசப்பட்டு தாக்கப்பட்டதற்கு இது இன்னும் வலு சேர்க்கின்றது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பார்கள். பிளைற் ஏறி கடல் கடந்தால் மட்டும் இந்த"சாகச" மனநிலை மாறிவிடுமா? என்ன?
இந்தியா என்பது முரடர்களும் வாழும் பூமி என்பது தான் புதிய தெளிவு.
இனி நடந்தது என்ன?
போளூர் அருகே பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையால் வடை சுட்டனர். அதை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால், ஒரு வடை 1,500 ரூபாய்க்கு ஏலம் போனது. போளூர் அடுத்து துரிஞ்சிக்குப்பம் கிராமத்தின் கீழ் குளக்கரை ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், சிறப்பு பூஜையும் நடத்தினர். பலர் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தனர். 108 பால் குடங்களுடன் பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பக்தர்களின் மார்பு மீது உரலை வைத்து அதில் கொம்பு மஞ்சள் போட்டு இருவர் உலக்கையால் இடித்து தூளாக்கினர். முள்மீதும் நடந்து சென்றும் தங்கள் நேர்த்தி கடனை பக்தர்கள் செலுத்தினர்.
தொடர்ந்து கொதிக்கும் எண்ணெயில் வடை சுட்டு அதை மூன்று பக்தர்கள் தங்கள் கையால் எடுத்தனர். இந்த வடையை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால், வடை வாங்க பக்தர்கள் மத்தியில் பெரும் போட்டி உருவானது. அதையடுத்து, வடை ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக ஒரு வடை 1,500 ரூபாய் வரை ஏலம் போனது. போளூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நீங்கள் முட்டாள்களை மட்டுமே தேடினால் வெறும் முட்டாள்களே உங்கள் பார்வையில் சிக்குவார்கள். இந்தியாவில் நல்லவர்கள் இருக்கிறார்களா என்று தேடிப்பாருங்கள். கட்டாயம் உங்கள் கண்களுக்கு சில நல்லவர்களும் தென்படுவார்கள் நண்பரே. அழகோ அல்லது அசிங்கமோ, எதுவாக இருந்தாலும் அதயதை பார்த்து இரசிக்க தெரிந்த அல்லது வெறுக்க கற்றுக்கொண்டவர்களின் கண்களினுள்ளும் மனதினுள்ளும்தான் இருக்கின்றன. நீங்கள் தேடுவதுதான் உங்களுக்கு கிடைக்கிறது. தேடாதது எப்படி உங்களுக்கு கிடைக்கும்?
நன்றி
சமுதாயத்தின் ஒரு பகுதியினர் செய்யும் தவறுகளுக்கு ஒரு முழு சமுதாயத்தையும் சாபிப்பது நன்றன்று.
அந்த செய்தித் தாளில் உள்ளது என்ன செய்தி? புரியவில்லை...
Post a Comment