ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, July 22, 2009


சூரிய கிரகணமும் இரண்டு கதைகளும்

சூரிய கிரகணத்தை இன்று இந்தியாவின் பல இடங்களிலும் பார்க்கக் கூடியதாய் இருந்தது. அதையிட்ட ஆய்வுகளிலும் விஞ்ஞானிகள் மும்முரமாய் ஈடு பட்டிருந்தனர். காலம் எவ்வளவுதான் முன்னோக்கிப் போய்க்கொண்டிருந்தாலும் நம்மவர்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாத மாஜாஜால உலகிலேயே வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.\

ஊழல் பெரிச்சாளிகளால் கோட்டையில் உட்கார்ந்து ஆட்சி செய்ய நம்ம இடத்தில் தான் முடியும். குறைந்த பட்ச மனித விழுமியங்களைக் கூட காப்பாற்ற முயலாத மக்கள் உண்டென்றால் அது நாமாகவே இருக்கும். இதோ இரண்டு கதைகள். உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றது. நாம் அடுப்பங்கரையைச் சுத்தியிருந்து இட்லி சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்கின்றோம்.
கதை1:இந்திய விமானப்படையுடன் இணைந்து, வானியல் இயற்பியலாளர்கள் குழு ஒன்று இன்று நடந்த சூரிய கிரகணத்தை விமானப்படை விமானம் மூலம் பறந்து சென்று ஆய்வு செய்துள்ளது.

இந்த ஆய்வுக்காக ஒரு போர் விமானம் மற்றும் ஒரு சாதாரண பயணிகள் விமானம் மூலம் ஆய்வு நடந்தது.

இந்த ஆய்வின்போது மிராஜ் 2000 ரக போர் விமானமும், ஏஎன் 32 ரக போக்குவரத்து விமானமும் பயன்படுத்தப்பட்டது.

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணத்தை அவர்கள் விமானத்தில் பயணித்தபடி படம் எடுத்துள்ளனர். மேலும் சில சோதனைகளையும் அவர்கள் விமானத்தில் பறந்தபடி செய்துள்ளனர்.

குவாலியரில் உள்ள விமானப்படைத் தளத்திலிரு்நது மிராஜ் விமானம் கிளம்பியது. பயணிகள் விமானம், ஆக்ராவிலிருந்து கிளம்பி கஜூராஹோ வரை சென்றது.

இந்த ஆய்வில் சுயேச்சை ஆய்வு அமைப்பான விக்யான் பிரசார் மற்றும் மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சூரிய கிரகணத்தைப் படம் பிடிக்கும் நிகழ்வில் விக்யான் பிரசார், உதய்ப்பூரைச் சேர்ந்த சோலார் அப்சர்வேட்டரி, பெங்களூரைச் சேர்ந்த இந்திய விண்வெளி இயற்பியல் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.கதை 2:கடந்த 7ம் தேதி சந்திர கிரகணம் நடந்தது. இன்று முழு சூரிய கிரகணம் நடந்தது. அடுத்த மாதம் 6ம் தேதி இன்னொரு சந்திர கிரகணம் வருகிறது.
கடந்த 7ம் தேதி சந்திர கிரகணம் நடந்தது. இன்று முழு சூரிய கிரகணம் நடந்தது. அடுத்த மாதம் 6ம் தேதி இன்னொரு சந்திர கிரகணம் வருகிறது.

இப்படி அடுத்தடுத்து கிரகணங்கள் நிகழ்வதால் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் சம்பவிக்கும் என ஜோசியக்காரர்கள் பீதியைக் கிளப்பி விட்டுள்ளனர்.

இதையடுத்து கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனம் என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஜோதிடர்களின் ஆலோசனையைக் கேட்டு, சென்னை மெரீனா கடற்கரையில் நவதானியங்களால் ஆன பிரமாண்ட இட்லியை வைத்து பூஜை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி இந்த பிரமாண்ட இட்லி தயாரிக்கப்பட்டு இன்று காரில் ஏற்றி கடற்கரைக்குக் கொண்டு வந்தனர்.

கலங்கரை விளக்கம் அருகே இட்லியை இறக்கி கடற்கரையில் வைத்து பூஜைகள் தொடங்கின.

இந்தப் பரிகார பூஜையில், தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேத மந்திரங்கள் முழங்க பூஜை அமர்க்களமாக நடந்தது. பின்னர் இட்லியை படகில் ஏற்றி கொண்டு போய் கரைத்தனர்.

பிரமாண்ட இட்லி என்பதால் வழக்கமான சட்டியில் வைத்து கேஸ் அடுப்பி்ல் வேக வைக்காமல், விறகு அடுப்பி்ல வைத்து அவித்தனராம்.

கிட்டத்தட்ட ஒரு மாத கஷ்டத்திற்குப் பின்னர் இந்த ராட்சத இட்லி உருவானதாம்.

இந்த இட்லியை உருவாக்கியவர் பெயர் இனியவன். இவர் கடந்த ஜனவரி மாதம் கிட்டத்தட்ட 90 கிலோ எடையுடன் கூடிய 3 இட்லிகளைத் தயாரித்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவராம்.

உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது, நாம் இன்னும் இட்லியிலேயே இருக்கிறோம்..

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil