ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, July 4, 2009


தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் இந்தியா


சிறிலங்காவின் அண்மைய செயற்பாடுகள் இந்தியாவின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கின்றது. இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் ஏகோபித்த "பிஸ்தா" கனவு கலைந்து போனதில் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது. அனல்விட்டு எரிந்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி அள்ளிக்கொடுத்தாலும் வாங்கும் வரை வாங்கிவிட்டு இந்தியாவிற்கு"பெப்பே" காட்டிக்கொண்டிருக்கின்றது சிறிலங்கா.

சீனாவே சிறிலங்காவின் வாழ்நாள் நண்பன். எனவேதான் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நான் இங்கு வந்துள்ளேன் என சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

ஐந்து நாள் பயணமாக சீனா சென்றுள்ள அவர், சீனா ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெய்ஜிங்கிற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் போகொல்லாகம, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையுடன் ஏற்கனவே துரிதமாக வளர்ச்சி கண்டுவரும் கேந்திர உறவுகளை சீனா மேலும் விரிவுபடுத்த வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளதாக "இந்து' பத்திரிகை கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.


கேந்திர ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு விரிவடைந்துள்ள நிலையில், சீனாவுக்கு அமைச்சர் போகொல்லாகம விஜயம் மேற்கொண்டுள்ளார். இது புதுடில்லியின் கவலையை அதிகரித்துள்ளதாக "இந்து' பத்திரிகை கூறுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் யுத்தத்துக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை சீனா குறிப்பிடத்தக்க அளவுக்கு வழங்கியிருந்தது. அத்துடன், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு சுமார் 1 பில்லியன் டொலர்களை சீனா முதலீடு செய்துள்ளது.


அம்பாந்தோட்டையில் பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த துறைமுகம் சீனாவின் கடற்படை கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் மையங்களாக தொழிற்படலாம்.

சீனாவின் தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிபொருட்கள் இந்த பாதையினால் தான் கொண்டுவரப்படுவது உண்டு. அதற்கு பாதுகாப்பாக சீனாவின் கடற்படை செயற்பட்டு வருகின்றது. இந்த கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் துறைமுகமாக அம்பாந்தோட்டை வருங்காலத்தில் செயற்படும்.

இதன் பொருள் என்னவெனில் அம்பாந்தோட்டை ஒருநாள் சீனாவின் கடற்படை தளமாக மாற்றமடையலாம். சிலர் அவ்வாறு இருக்காது என எண்ணலாம். ஆனால், அதுதான் உண்மை, சீனாவின் படைத்துறை திட்டமிடல் அதிகாரிகள் தொலைநோக்கு பார்வை உடையவர்கள்.

தாய்வானுடன் மோதல் ஏற்படும் சமயத்தில் அது சீனாவின் கடற்பாதைகளில் தடையை ஏற்படுத்துமா? அவ்வாறான பாதகமான நிலமைகளை தான் சீனாவின் திட்டமிடல் அதிகாரிகள் தமது மனதில் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் சீனாவுக்கு தூரமான இடங்களில் நண்பர்கள் தேவை. எனவேதான் அவ்வாறான உறவுகளை சிறிலங்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் அது ஏற்படுத்தி வருகின்றது. பாகிஸ்தானில் ஹெடார் துறைமுகத்தையும் சீனா நிர்மாணித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- ‘த ரைம்ஸ்’ நாளிதழ்


இந்த நடவடிக்கை முற்றுமுழுதாக வர்த்தக ரீதியானது என்று சீனா விபரித்திருக்கிறது. ஆனால், சீனக்கடற்படை இதனை உபயோகிக்கும் சாத்தியம் உள்ளதாக இந்திய, அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

சீனாவுக்கும் கொழும்புக்கும் இடையிலான பிணைப்புகள் அதிகரித்து வருவது பற்றி கடந்த ஏப்ரலில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார்.

குழம்பிய குட்டையில் சீனா மீன்பிடிப்பதாகவும் தெளிவான நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

3 comments:

வெத்து வேட்டு said...

இப்படியெல்லாம் ஏதோ எழுதி எழுதி ..அடிச்ச ஆப்பை மறக்க முயற்சிக்க வேண்டியது தான் :) :)

Anonymous said...

கிராமத்தான்

பழமொழியை தலைப்பாக வைத்தது சரிதான். ஆனால் " தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதை" என்பதுதன் சரியானது.
பழமொழியை மாற்ற வேண்டாம்

இட்டாலி வடை said...

வாங்க கிராமத்தான்!
சரி மாத்தியாச்சு

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil