ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, July 21, 2009


மொக்கை எழுதுவது ரொம்ப சுலபம்


அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருக்காப்பல... தன்னாலதான் மொக்கை போட முடியும்னு பீலா விட்டிருக்காக... மொக்கப்பதிவு போடுவது ஒன்னும் கஷ்டமில்லேங்கிறேன்..

மொக்கைன்னா என்னா? ன்னு பாத்திடுவோம். அது கூடத் தெரியாம எப்டி மொக்கை போடுரது.
மொக்கைன்னா என்னா..? மொக்கைன்னா சக்கை..வெறும் சக்கை..(அட என்னா ஒரு ..எதுகை மோனை..கவிதையால்லே..

மொக்கை..சக்கை
சாறில்லாத பீரு (சாரு அல்ல சாறு.. அட அவரும் அப்பிடித்தாங்கிறீங்களா.. அந்த அரசியலுக்கு நா வரலீங்க..)

பீரு எப்டி சாறில்லாம போகும்னு பாக்கிரீங்களா .. பீரு குடிச்ச ஒடனே வாஷ்ரூம் போரோம்லே சாறிருந்தா ஒடம்பிலே தங்கிடும்லே.. தங்காம போயிடுதே..ஒரு முறை நம்ம தங்கமணிகூட சொன்னாகா... நீரு இப்டி அடிக்கடி எழும்பி போறதிற்கு பதிலா அதை அப்டியே கொண்டே வாஷ்ரூம்ல ஊத்திடுங்கன்னு ..அவ்வளவிற்கு அவங்க பீல் பண்ணிட்டாங்க... என் அவஸ்தையைப் பாத்து...

சரி ...

மொக்கை..சக்கை
சாறில்லாத பீரு

அதேதான்... இல்லாததை இருப்பதாக பாவனை செய்வது .. வலை போட்டு தேடினாலும் ஒரு கூனி இறாலு நெத்தலி எதுவும் அகப்படாது... சொற்கள் என்ற பாசிகள் தான் நெறைஞ்சிருக்கும்...

நம்ம பசங்க செய்யிறதுதான்... பக்கத்தில் இல்லாத நமீதாவை படுக்கையிலில்லாத சகீலாவை வைச்சு .. ஆனந்தப்படவில்லையா? அதே தான் மொக்கை...ஒண்ணும் இல்லாததை பிரமாண்டப்படுத்துவது...

அரிச்சுப் பார்த்தா ..சொற்கள் என்ற பாசிதான் வழுக்கிக்கிட்டிருக்கும்...

இப்ப பாருங்க நம்ம உஷா நக்கரு (சாரிங்க உஷா நாயகரு அப்பிடின்னு தான் எழுத வந்தேங்க .. அச்சு..அடச்சீ தட்டுப்பிழையாயிடிச்சிங்க ..அழிச்சு எழுத சோம்பலுங்க ..அதான் அப்படியே விட்டிட்டோம்கா)

டி.ராஜேந்தரு...

ஒரு பயிட்டு காட்சிலே (இதெல்லாம் ஜெயலலிதாவை குறி பார்த்து.. அடிச்சது... அவரு குறியையில்ல ..இவரு குறி பார்த்து அடிச்சதுங்க..எல்லாம் குப்பைக் கூடையில போனது வேற கதை)

வாடி என் மச்சி
வாழைக்காய் பஜ்ஜி....

ன்னு ..எடுத்து வுடுவாரு.. அவரு மச்சிக்கு (வாழைக்காய் எவ்வளவு முக்கியம்னு ) அவருக்குத் தானே தெரிஞ்சிருக்கணும்...

ஆனா இந்த .. வார்த்தைகள் தான் ..மொக்கைக்கே ஒரு பெரிய உதாரணம் எடுத்துக் காட்டு...

இந்த மச்சின்னது நம்ம சொந்தம்/நட்பு.... அந்த சொந்தம் சுவைத்துச் சாப்பிடும் வாழைக்காய் பஜ்ஜி போல சுவையாய் இருக்கணும்னு ஒரு தத்துவத்தை புதைத்து வைச்சிருக்காரேன்னு ..நாம நெனைக்கப்படாது/சொல்லப்படாது...

வாசகர்கள் ..தலையைச் சுத்தி கிறங்கடிக்க யோசிக்கனும்.. பாத்தீங்களா.. இதில பின்நவீனத்துவமும் கலந்திருக்கு அப்படீன்னு யாராச்சும் பைத்தியக்காரங்க கண்டுபிடிப்பாங்க...

வார்த்தை விளையாட்டா எடுத்துக்கிட்டாலும் ..இதிலே கொல செய்யப்படப்போவது யார் ? அல்லது கொலையாளி யார்னு? ஒரு கேள்வியைப் போட்டு வைச்சிடனும்...ரெண்டு தரம் வாசிங்கன்னு ..அடிக்குறிப்பு வரைஞ்சிடனும்... அப்புறம் ..அவங்க இஸ்டம் போல தலையைப் பிச்சிக்கிடலாம்...

இப்டீ ஏதாவது கிறுக்கிக் கிட்டே வந்தா ..பிரபல பதிவர்னு மா நக்கலுடன் போட்டுத்தாக்கலாம்...

பாத்தீங்களா..? மொக்கை எழுதுரது எவ்வளவு சுலபம்னு.. வளைகுடால்ல இருந்து பாலைவனக் காத்துப்பட்டு ..அண்ணாச்சி ரொம்பத்தான் காய்ஞ்சு போயிட்டாரு... அது தான் மொக்கை எழுதுவது...பாலை மணலை பவுடராக்கி மூஞ்சியை அழகு படுத்திரது போலன்னு ...அண்ணாச்சி வெடி கொழுத்திப் போடராரு...

அட நானும் ஒரு மொக்கை போட்டுட்டோம்ல... நல்ல இரிங்கடே..

குறிப்பு: 90 வீதம் படிச்சதில 10 வீதம் எழுதுங்கன்னு அய்யனார் சொல்லியிருக்காப்ல.. தற்போதைய பதிவுலகத்த படிச்சதில நம்மளால எழுத முடிஞ்ச 10 வீதம்...

5 comments:

பிரபல பதிவர் நாமக்கல் சிபி said...

ஸ்ஸப்பா! இப்பவெ கண்ணைக் கட்டுதே!

ஐய்யனார் கவிதை படிச்ச மாதிரியே இருக்கு!

இட்டாலி வடை said...

வாங்க சிபி சார்!
என்னா "சார்" என்னெல்லாம் ரொம்ப மரியாதன்னு கேக்க நெனைக்கிரீங்க.. கேக்கப்படாதுன்னு தன்னடக்கம் தடுக்கிதீங்களா.. அதாங்க ..நீங்க பிரபல பதிவர்ங்கிரதிற்கு அடையாளங்க..

ஏம்பா..பதிவரிங்களா.. நம்ம பதிவில ஒரு "பிரபல பதிவர்" கருத்துப் போட்டிருக்காருங்க.. சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்குங்க...

தண்டோரா said...

எலேய் அவ(ரா)னா நீயி...

இட்டாலி வடை said...

வாங்க தண்டோரா!
நீங்க ரா..ரா ..னா..னான்னு பாடிக்கிட்டிருந்தீங்கன்னா ..என்னா செய்யிரது..

ஆமாங்க உங்க பக்கத்து வூட்ல(அறையில) இருந்த பைத்தியக்காரன்னு..சொன்னா நம்ம பதிவர் பைத்தியக்காரன் பூக்கோ ..புடுங்கிக்கோன்னு கெளம்பிடுவாரு...

பதிவர் நர்சிம் கொலை கொலவெறின்னு கெளம்பிடுவாரு... ..இடையால குசும்பன் "இடையால வழிந்த ஜீரகத்தண்ணீர்"னு ..

இசகுபிசகாய் பதிவு போட்டிடுவாரு...

நமக்கு ஏம்பா வம்பு ... லூசில விட்டிர்ரேம்பா ..உங்க சந்தேகத்தை...

idalivadai said...

வாங்க பிரபல அனானி!

//Anonymous has left a new comment on your post "மொக்கை எழுதுவது ரொம்ப சுலபம்":

வெள்ளாள அகதி நாயே வெள்ளைகாரன் தட்டு + குண்டி கழுவுடா போடா பரதேசி//

இது நம்ம ஷோபா சக்தின்ன கழிசறை வாய்ஸ் போல இருக்கே....

அட பன்னாடை ..நா--.. நான் ...

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil