ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, July 21, 2009


"கைடு" பத்மநாதன்


"புலிகளின் தாகம் தமிழீழத் தாகம்" கேட்ட போதெல்லாம் மயிர்க்கால்கள் சிலிர்த்து சிலும்பி நின்ற எபக்ட்டை யாராலும் தந்திருக்க முடியாது. அப்படியொரு "கிரேஸ்". வன்னியில் புலிகளும் அப்படித்தான் போராடிக்கொண்டிருந்தார்கள் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இப்போது தான் தெரிகின்றது வழி தெரியாத ஒரு "போராட்டத்தில்" தான் மாய்ந்து போயிருக்கின்றார்கள் என்று.

அதனால் தான் இப்போது "கைடு" பத்மநாதன் வழி காட்ட வெளிக்கிட்டிருக்கின்றார். தேசம் கடந்த அரசாங்கம் சொதப்பிப்போன பின்பு சேர்த்து வைத்த சொத்துக்களை கொள்ளை கொண்டு போக ஒரு புது அவதாரம்.

செத்துப்போன 50 ஆயிரம் மக்களின் சாம்பல் மேட்டில் புதிய "வழிகாட்டி" உதயம். இன்னும் எத்தனை ஆயிரம் மனித உயிர்களைக் குடிக்க இந்த நாடகம். போகும் இடம் தெரியாத வழிப்போக்கர்கள்...

அடித்து வைத்த சொத்தைக் காபந்து பண்ண எடுக்கும் முயற்சிதான் இந்த "கைடு" வேலை என்றே தோன்றுகின்றது. யாராவது "கொள்கை"யுள்ளவர்கள் கேள்வி கேட்க சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது.

"கைடு" பத்மநாதன் நமக்கும் ஒரு பொட்டலம் அனுப்பி வைக்கின்றது... நமக்குத் தான்..நம்மையல்ல...(புலிகளின் தாகம் பொட்டலம் கட்டுவது என்று பேசிக்கொள்கின்றார்கள்)

3 comments:

கண்டும் காணான் said...

வணக்கம் இட்டாலி வடை. உங்களுடைய தற்போதைய நிலைப்பாடு என்ன? நீங்கள் இந்தியாவை . தமிழகத்தை உலக நாடுகளை ஏன் புலிகள் இயக்கத்தை கூட திட்டுகின்றீர்கள் ? வழி தெரியாத "போராட்டம்" என்று ஒரு விஷம சிரிப்புடன் சொல்கின்றீர்கள் ? நீங்களும் ஒரு ரயாகரன் ஆகிவிடுவீர்களா? இல்லை சோபாசக்தியாகி தமிழ் தேசிய வீழ்ச்சியில் மனம் மகிழ்வீர்களா?

இட்டாலி வடை said...

வாருங்கள் கண்டும் காணான்!
தமிழீழ விடுதலையை என்னைப்போல் நேசிப்பவர்கள் இருப்பார்களா என்று எனக்குத்தெரியவில்லை...

தவறுகளிலிருந்து திருந்த முடியாதர்களின் மேல் தான் என் கோபம்..."ஜனநாயக"ரீதியான தமிழ் மக்களின் இணைவிற்கு இன்னும் புலிகள் உட்பட யாரும் தயாராகவில்லை...

தமிழ் மக்களிடம் உள்ள அனைத்து"சக்திகளும்" ..மீண்டும் சொல்கின்றேன் அனைத்துச் சக்திகளும் இணையவேண்டிய நேரம் இது.

அப்படியான ஒற்றுமையை வழிகாட்டலைக் கொண்ட ஒரு தலைமைத்துவம் தான் தமிழ் மக்களிடம் இருந்து வரவேண்டும்...

கண்டும் காணான் said...

நன்றி , உங்கள் விளக்கம் நிறைவாக உள்ளது. ஆனால் அனைத்து சக்திகள் என்னும் போது தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைத்து சக்திகள் எனக் கொள்ளல் நன்று. இல்லாவிடின் தமிழ்த் தேசியத்தை விட , ஜாதி மற்றும் பிரதேச வாதம் பேசுபவர்களையும் , எந்தக் காரணதிற்காககவும் அரசை எதிர்க்க மாட்டோம் என்று அறைகூவல் விடுபவர்களையும் இணைத்து உண்மையிலேயே அது போகாத ஊருக்கான ஒரு பிரயாணமாகவே முடியும்.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil