ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, July 2, 2009


சைனாக் காரன் சூப்


பளீரிட்ட மஞ்சள் வெயில் பட்டு இலைகளெல்லாம் பளபளக்க மரங்கள் அசைந்து கொண்டிருந்தன. மாலை நான்கு மணியாகியும் வெயிலின் சுளீர் இன்னும் குறையவில்லை. புல் வெளி போர்த்திய தோட்டத்தின் ஒரு மூலையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். வாரமுடிவுகளில் " தீர்த்தம் " சாப்பிடவென்றே ஒதுக்கி விடப்பட்ட இடம் போல அது எங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றது.

நான். என்னைவிட இன்னும் நான்கு நண்பர்கள். இலக்கியம் அரசியல் என்று அலசிக்கொண்டே பியரையும் குடித்துக் கொண்டிருப்போம். வெற்றுப் போத்தல்கள் கவுழுவது போன்று ஒவ்வொரு விடயமும் அலசி அம்மணமாகி வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். சமீப காலத்தில் அதிகம் ஆக்கிரமித்திருந்த விடயம் அரசியல். அதுவும் ஈழ மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னான காலம் ஒரு குழப்பம் சூழ்ந்த புகைமண்டலமாக ஆகிவிட்டிருந்தது.

அதிலும் ஒரு நண்பனின் இழப்போ ஈடு செய்ய முடியாதது. மொத்தக் குடும்பத்தையும் தொலைத்து விட்டுத் தவித்துக் கொண்டிருந்தான். அவனை ஆற்றுப்படுத்துவதிலேயே எங்கள் நேரம் பெரும்பாலும் போய்க்கொண்டிருக்கின்றது. ஆற்றுப்படுத்தக் கூடிய சோகமா? அவனது.

வென்று விட்ட சிங்களத்தையும் விட முண்டு கொடுத்த இந்தியாவின் மீது தான் கோபம் அனலாய் வழிந்து கொண்டிருந்தது. காலங்காலமாய் மனதில் விழுந்து விட்ட நம்பிக்கைகள் பொய்த்துப் போன கோபமாய் இருக்கலாம். சொந்த தாயைப்போல நேசித்த இந்தியாவின் துரோகம் ஜீரணிக்கச்சிரமமாயிருந்திருக்கலாம்.

இந்தியா என்பது இனி எப்போதும் ஈழத்தமிழனின் எதிரி என்றே செதுக்கப்பட்ட வரலாற்றுக் காலம் இது. தாயைப் போல நேசித்த இந்தியாவை நாயைப் போல அடித்துப்போட ஒவ்வொரு ஈழத்தமிழனும் துடித்த மாறாத வலியுடன் கூடிய காலம் இது. அத்தனை வெறுப்பு. அவமானம்.


"கேடு கெட்ட இந்தியா.." முதல் தூஷணை தொடங்கி விட்டது. இனி முடிவில்லாத ஜீவநதி போல கோபம் பொங்கிப் பொங்கி பிரவகித்து காட்டாறாய் ஓடிக்கொண்டிருக்கும். அங்கிருந்த யாருக்கும் இப்போது இந்தியா என்பது ஒரு ஆதர்ஷமில்லை. அந்தக் காலம் எப்போதோ கடந்து விட்டது.

ஒரு தேவடியாளைப் போன்ற அத்தனை அசூசையுடன் தான் தெரிந்தது. கம்பு கொண்டு அடித்துத் தூக்கிப்போட வேண்டிய ஒரு விஷப்பாம்பாகத்தான் அது நெளிந்து கொண்டிருந்தது. சமயங்களில் அது சாம்பல் பூத்த நெருப்பாக வீரியம் குறைந்து போய்விட்டிருந்தாலும் தன் குடும்பத்தையே இழந்து விட்ட நண்பன் அருகிருக்கையில் புதிதாய் புகுந்துவிட்ட வெறியுடன் அது சன்னதங்கொண்டாடும்.

"தேவடியா மக்கள்... பிராந்திய வல்லரசாக வேண்டுமென்றால் ..குட்டி ஈழத்தவனிடமா? நாட்டாமை காட்டுவது?.."

வெற்றுப் போத்தலைத் தூக்கி எறிந்தான் ஒருவன். அது சிலீரிட்டு உடைந்து சில்லுகளாகப் பறந்தது.

"62 இல் சீனாக்காரனிடம் பறிகொடுத்த நிலத்தைக் கேட்டு போராடுவது... அதைக் கேட்கத் துப்பில்லை... பிராந்திய வல்லரசுக்கனவு..."

"சீனாக் காரனிடம் மோதினால் இந்தியனின் சாமானை வெட்டி எடுத்து சூப் வைத்துக் குடித்து விடுவான்..." சொல்லி விட்டு கடகடவென்று சிரித்தான்.

இந்தியனின் சுண்டெலிச் சாமான் சூப்பாகிப் போகும் விடயம் நினைத்துப் பார்க்கும் போது பெரும் சிரிப்பை உண்டாக்கியது. உள்ளே போயிருந்த பியர் அதனைப் பெரிது படுத்த பெருஞ் சிரிப்பாய் பிரவகித்துக் கரை புரண்டது.

"உலகத்தின் ஒரே இந்து ராஜ்யம் என்ற பெருமை இனி நேபாளத்திற்கு இல்லை. மன்னராட்சி துக்கி எறியப்பட்ட போது இந்தியாவின் அதன் மீதான ஆளுமையும் தான் தூக்கியெறியப்பட்டது. இந்தியாவின் வடக்கு நுழைவாயில் அது தான். ஆனால் இப்போது அங்கு மாவோ ஆதரவாளர்கள் ஆட்சியில்... இதில் வென்றது சீனா தான்...."

புள்ளி விபரம் தெரிந்த நண்பன் அடுக்கிக் கொண்டிருந்தான்.

"அருணாசலப் பிரதேசமும் தனது தான் என்று சீனா சொல்லிக் கொண்டிருக்கின்றதே..?

"அதில் ஒரு சுவையான சம்பவமும் இருக்கின்றது..." இடையில் நான் புகுந்தேன். "ஒரு தூதுக் குழு இந்தியாவில் இருந்து சீனாவிற்குப் புறப்பட ஏற்பாடாகி இருந்தது. அதில் ஒருவர் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.. எல்லோருக்கும் விசா கொடுத்த சீனா அவருக்கு மட்டும் விசா கொடுக்கவில்லை.."

"ஏன்.." இடையில் இடைவெட்டிய நண்பனைக் கையமர்த்தி விட்டுச் சொன்னேன். "அவருக்கு விசாவே தேவையில்லை...எங்கள் நாட்டுக் குடி மகனுக்கு எங்கள் நாட்டிற்கு வருவதற்கு எதற்கு விசா என்று அதிரடியாக அடித்து விட்டார்கள்...

"அப்படிப் போடு..." நண்பன் கைதட்டினான். "இந்தியா என்பதே ஒரு ஐய்ம்பது வருட நாடு தான்.. பல நாடுகளின் தொகுப்பு...பல மொழிகள் ..பல பிரிவுகள்... இன்னும் எத்தனை நாளைக்கோ..பிரிட்டிஷ்காரன் உருவாக்கிய இந்தியா எப்போதோ உடைந்து விட்டது.. 47 இல் பாகிஸ்தான் 72 இல் வங்காள தேஷம்... 48 இலிருந்து ஒட்டுப்போட்டு வைத்திருக்கும் காஷ்மீரம்... இன்னும் பிரிவதற்காக போராடிக் கொண்டிருக்கும் அஷாம் , இமாச்சல் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம்....

இடையில் போராடி கிடப்பில் இருக்கும் தமிழ்நாடு, பஞ்சாப் ..இன்னும் எத்தனை நாட்களுக்கோ..."

நண்பனை சுவாரஷ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.

"இராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வரை இந்தியாவை மீறாத இலங்கையில் இன்று சீனா கால் பதித்து விட்டது. வடக்கில் நேபளத்தில் சீனாவின் செல்வாக்கு..பூட்டான் சீனாவின் பகுதியாக... மேற்கில் பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி சீனாவின் பெரும் நண்பன்.. கிழக்கில் பங்களாதேசம் இந்தியாவின் எதிரி ...இன்று தெற்கிலும் சிறிலங்கா சீனாவை விரும்பி வரவேற்கின்றது..அதற்காக இந்தியாவை மட்டுமல்ல மேற்கையும் விட்டு விலகத் தயாராக இருக்கின்றது..."

"மேற்கை விட்டு விலக முடிவெடுத்தபின் இந்தியா என்ன சுண்டைக்காய் இந்தியா? சீனாவுடன் ஒப்பிடும் போது இமயமலையுடன் மோதும் சிறு யானை..."

உண்மை. சீனாவின் பலம் இன்று அபரிமிதமானது.. பொருளாதார ஆட்டங்கண்டிருக்கும் மேற்குலகே சீனாவின் பொருளாதார உதவிகளை எதிர்பார்த்து..."

இன்னொருவன் குறுக்கிட்டான்... " அன்று சேர சோழர் பாண்டியர் தமிழ் மண்ணில் ஆட்சி செய்த போது... ஈழ மன்னர்கள் படை உதவி கேட்டுப் போன போதெல்லாம் உதவி செய்து பெண்ணும் கொடுத்து உறவை வளர்த்து நின்ற தமிழ் மண்...இன்று..? "

"ஆறரைக்கோடி என்பது வெறும் பீற்றல்... அரைக்கோடிக்குக் கூட தமிழ் உணர்வில்லை..."

அடுத்தவன் இடை மறித்தான்.."அவர்களே அடிமைகள்... பெரியார் சொன்னதைப்போல அடிமைகள் அடிமைகளுக்கு எப்படி உதவி செய்வது...இதற்குள் இந்தியன் என்ற வெறும் பந்தா மட்டும்...."

"வேட்டிக்குக் கீழே எதுவும் இல்லாதன் கதையெதற்கு...மக்களை நம்பித்தான் போராட்டமே தவிர மற்றவனை நம்பியல்ல.."


மெல்ல இருள் வெளியே பரவத்தொடங்கியது. உள்ளே வெளிச்சம் பரவப்பரவ கதை அந்தத் திசையில் தொடர்ந்தது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil