ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, July 30, 2009


பதவிக்காகப் "பிச்சை" ஏந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டது என்பதற்கப்பால் அதற்கும் சிங்களப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பிரதிநிதிகளுக்கும் வேறு வேறுபாடு கிடையாது. தமிழ் மக்களுக்காக "பாடுபட்டு" ஒன்றையும் சாதித்ததும் இல்லை. அதனைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூட யாரும் அங்கீகரித்ததும் இல்லை. அப்போது தமிழ் மக்களின் அரசியல் சமூக வாழ்க்கையில் இவர்களின் பங்களிப்பு தான் என்ன?

எவ்வகையில் தேடிப்பார்த்தாலும் கிடைப்பது என்னவோ பூச்சியம் தான். இவர்களால் சாதிக்கப்பட்டதும் சாதிக்கக் கூடியதும் எதுவுமேயில்லை. மாறாக சிங்களை பேரினவாதிகளின் அத்தனை அடக்கு முறைகளையும் மூடி மறைக்கும் ஜனநாயக விளையாட்டிற்கும் விளம்பரத்திற்கும் மறை முகமாக உதவி செய்தார்கள்,செய்துகொண்டிருக்கின்றார்கள். சிறிலங்காவில் இத்தனை காட்டுமிராண்டித் தனமான படுகொலைகளும் அராஜகங்களும் நிகழ்ந்து விட்ட பின்னரும் உலக நாடுகளை ஏமாற்றும் ஜனநாயக கண்கட்டி விளையாட்டில் சிங்கள அரசைத் தூக்கிப்பிடிக்கும் அபாயகரமான தமிழினத் துரோகிகளாகவே இவர்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

வெளிப்படையான துரோக முத்திரையுடன் சிங்களப் பாசிச அரசுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஈபிடிபி டக்ளஸ், பிள்ளையான்,கருணா போன்றவர்களையும் அவர்களின் நடவடிக்கைகளையும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ நடவடிக்கையாகப் பார்க்க சர்வதேச சமூகம் ஒன்றும் முட்டாள்களாலானது அல்ல. தமிழ் மக்கள் விரோத சந்தர்ப்பவாத சக்திகளாகவே அவர்களை வகைப்படுத்தி வைத்திருக்கின்றது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் தெரிவு வரும் போது ஓரளவிற்கேனும் தமிழ் மக்கள் சார்பு பிரதிநிதித்துவமாகவே பார்க்கப்படும் சாத்தியம் உண்டு.

இந்த சாத்தியம் பற்றித் தெரிந்திருப்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசு நடாத்தும் எந்தத் தேர்தலிலும் பங்களிப்பது என்பது பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கான துரோகமாகின்றது.ஜனநாயகம் மறுக்கப்பட்ட இன அழிப்பு அராஜகம் நிகழ்த்தப்பட்ட ஒரு இனத்தின் பேரால் அத்தகைய கொடுமையை நிகழ்த்திய ஒரு அரசுடன் இணைந்து போவதென்பது வரலாற்றுத் துரோகமாகின்றது.

சந்தர்ப்பவசத்தால் இவர்கள் நடக்கவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சாதிக்கப் போவது எதுவுமில்லை. முள்ளிவாய்க்காலிலும் வன்னியிலும் நடந்து முடிந்த பெரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த இவர்களின் பாராளுமன்றப்பிரதிநிதிகளாலேயே ஒரு துரும்பத்தானும் எடுத்துப் போட முடியவில்லை. இவர்களின் சொல்லை யாரும் சட்டை செய்யாத இழிநிலையில் தான் சிங்களப் பேரினவாதத்தின் "ஜனநாயகம்" செயற்படுகின்றது. இதை இவர்களும் தீர்க்கமாக அறிந்து வைத்திருக்கின்றனர்.

புதுடில்லிக்கான இவர்களின் படையெடுப்பிலும் தோல்வியுடனேயே இவர்கள் திரும்பியிருந்தனர்.அதாவது ஜனநாயகம் மறுக்கப்பட்ட ஒரு சூழ் நிலையில் இவர்களின் சிறிலங்கா அரசு சார்ந்த பிரதிநிதித்துவம் சிறிலங்கா இனவாத அரசின் படு பாதக காட்டுமிராண்டிச் செயல்களை மறைக்கும் முயற்சிகளில் துணை போவதைத் தவிர்த்து தமிழ் மக்களுக்காகச் செய்யக் கூடியது எதுவுமேயில்லை.

ஆனால் தேர்தலைப் பகிரங்கமாகப் பகிஸ்கரிப்பதன் மூலம் சிறிலங்கா ஜனநாயகத்தில் தமிழர்களை இணைத்துக் கொள்ள "அவசர ஜனநாயக" வேலைத்திட்டங்கள் அவசியம் என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்வதுடன் அதற்கு வேண்டிய இறுக்கத்தை சிறிலங்கா அரசு மீது பிரயோகிக்கும் என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களுக்கான காத்திரமான ஜனநாயகக் கட்டமைப்புகளை நிறுவ வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் உறுதியுடன் இருக்கின்றது. இதை உடைக்கும் நோக்கிலேயே சிறிலங்கா சிங்களத் தேசியவாத அரசு "ஜனநாயக விளையாட்டாக" மாவட்ட, மாகாண. பிரதேச சபைத் தேர்தல் விளையாட்டை நடாத்த முன்வந்திருக்கின்றது. அதற்கு துணை போவதுடன் தமிழ் மக்களையும் பலிக்கடாவாக்கும் இவர்களின் குறுகிய சிந்தனைப் போக்கை துரோகமாகக் காண்கின்றோம்.

இவர்களின் இந்த முனைப்பிற்கு இவர்களின் பதவி ஆசையும் கிடைக்கும் சம்பளப்பணமுமே காரணமேயொழிய உண்மையான மக்கள் மீதான அக்கறையோ தமிழ்த் தேசியத்தினை காபந்து செய்யும் நோக்கமோ அடங்கியிருக்கவில்லை என்பது தமிழ் மக்களுக்கான துரதிர்ஷ்டமே.

தேர்தல்களை புறமொதுக்கி ஒத்துழையாமை கோஷத்தை முன்வைத்து உலக நாடுகளின் கவனத்தை முட்கம்பி முகாம்களுக்குள் அடைபட்டிருக்கும் மக்கள் மீதும் இடம் பெயர்ந்து அல்லலுறும் மக்களின் மீள்குடியேற்றத்தையும் தூண்டி துரிதப்படுத்துவதே இப்போது இவர்கள் செய்ய வேண்டிய ஜனநாயகக் கடமையாகும்.

இப்பிரதேச சபைப்பிரதி நிதித்துவம் என்பது ஆயுட் கால பதவியல்ல. மக்களுக்கான நலன்களை இவர்கள் முன்னெடுக்கும் போது அந்த நன்றியை மக்கள் எளிதில் மறந்து விடமாட்டார்கள். அடுத்த தடவை இவர்களைத் தங்கள் ஏகபோகப்பிரதிநிதிகளாக அனுப்பி வைப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அதை விடுத்து சிங்கள இனவாத அரசு துக்கிவீசும் எலும்புத் துண்டுகளுக்காக ஆலாய்ப்பறக்கும் இவர்களின் துரோகத் தனத்தை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
அதே நேரம் இவர்களின் தேர்தல் நிதி வேண்டி புலம்பெயர் நாடுகளில் யாசிக்கும் அமைப்புக்களை அந்நாடுகளின் சட்டங்களூடாகத் தண்டிக்க வேண்டும். அவற்றினை விளம்பரமாகவோ அறிவித்தலாகவோ வெளியிடும் ஊடகங்களையும் சட்டத்தின் பிடியில் எடுத்துச்செல்லும் சாத்தியம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

அன்பான புலம்பெயர் தமிழீழ மக்களே, இத்தகைய பிரசார உத்திகள் தங்கள் சொந்த வயிறு வளர்க்கும் சிறுமையின் வெளிப்பாடுகளே அன்றி இடர்பட்டு துயரடைந்து எதிர்காலமே இழந்து நிற்கும் எம்மக்களுக்கான முன்னெடுப்புகள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய புல்லுரிவிகளை இனங்காணுவதுடன் இவர்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்கவும் வேண்டாம். இத்தகைய பணம் பறிக்கும் கூட்டத்தை நீங்கள் வாழும் தேசங்களில் உள்ள சட்டங்களின் மூலம் தடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்கான இதயசுத்தியுடன் தொழிற்படும் ஒரு சக்தியைக் கண்டடையும் வரை இத்தகைய வேஷதாரிகளை இனங்கண்டு புறமொதுக்க வேண்டும்.

//
ஒரு சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்க்கான வாய்ப்பு மிகக் குறைவாகக் காணப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை வெற்றிவாகை சூட வைப்பதன் மூலமே தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் வேட்கைகளை உலக நாடுகளுக்கு எண்பித்துக் காட்டலாம்.

மகிந்தா ராஜபக்ச அரசியல் களத்தில் பெற நினைக்கும் வெற்றியைக் கனவாக்கலாம். இவற்றைச் செய்யும் பொறுப்பு பேரளவு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே உள்ளது. வெறும் வாய்ச்சொல் அருளுவதோடு நின்றுவிடாது புலம்பெயர் தமிழர்கள் பொருளுதவியும் செய்யவேண்டும். இதற்கான முயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம்.

உங்கள் அன்பளிப்பைப் பணமாகக் கீழ்க்கண்ட முகவரிக்கு 06-08-2009 முன்னதாக அனுப்பி வைக்கவும். அல்லது கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு வரவு வைக்கவும்.

TCWA,
56 Littles Road
Scarborough, ON. M1B 5C5

அல்லது கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு வரவு வைக்கவும்.

TD Canada Trust
Branch No. 1033
Account No.0663 – 5214579

மேலும் கீழ்க்கண்ட அங்காடிகளிடம் ஒரு உறையுள் உங்கள் பெயர் தொ.பே. கீழ்க்கண்ட அங்காடிகளிடம் ஒரு உறையுள் உங்கள் பெயர் தொ.பே. எண், தொகை ஆகியவற்றைக் குறித்து பணத்தைக் கையளிக்கவும்.

1) Babu Catering and Take Out, 4800 Sheppard Avenue East #201 Scarborough
2) Uthayas Super Market, 5010 Steels Ave. West # 14 Etobicoke (Kipling and Steels)
3) Vijaya’s Silk, 27 Dundas Street East, Mississauga.
4) SP Importers, 2853 Lawrence Ave E in Scarborough.

காலம் போதாமல் இருப்பதால் நேரடியாக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு உங்கள் உற்றார் உறவினர் மூலம் வரவு வைக்கலாம். அல்லது எண் 36, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் உள்ள அவர்களின் தலைமை அலுவலகத்தில் கையளிக்க ஏற்பாடு செய்யலாம்.

S. X. Kulanayagam
N.I.C No. 452661659V
Account No. 1097586
Bank of Ceylon, Hospital Road Branch//குறிப்பு: இதுவொரு சட்டத்திற்குப் புறம்பான அடாவடி பணம் சேர்க்கும் யுக்தி. இவர்களையும் இதற்கு விளம்பரம் செய்யும் "புதினம்" என்ற இணையத்தளத்தையும் கனடாவில் வாழும் தமிழ் சகோதரர்கள் சட்டத்தின் முன் எடுத்துச் செல்ல வேண்டும்.

மனிதாபிமானத்தின் ஊடாக புல்லுருவிகளைத் தடுத்து நிறுத்த முடியாதபோது அந்நாடுகளின் சட்டத்தின் துணையை நாடுவதில் தவறொன்றுமில்லை.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil