ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, July 12, 2009


தமிழ் மண எழுத்தாளர்கள் என்ன மொள்ளை மாறிகளா?


என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கீங்க ? ஆளாளுக்கு ஓட ஓட விரட்டுறீங்க ? நாங்க என்னா வேலை வெட்டியில்லாமலா ப்ளாக்கை கட்டிப்பிடிச்சு அழுதுகிட்டிருக்கோம்... என்னவோ நம்மளுக்குத் தெரிஞ்சதை உங்க்ளுக்கும் சொல்லி அறிவுக்கண்ணை (யாருக்குன்னெல்லாம் கேட்கப்படாது)தெறந்துக்கலாம்னு நெனைக்கிரது தப்புங்களா?

மாணிக்க கல்லுத் தேடிப்போனா மானாவாரியா மத்தக் கல்லுங்களும் அகப்படத்தான் செய்யும் ..அதை அப்பிடியே தூக்கிப்போட்டுட்டுப் போகவேண்டியது தானே.. அதை விட்டிட்டு கல்லடிச்சுது ..காலு போச்சி.. முள்ளுக்குத்திச்சு..மூஞ்சி போச்சுன்னு நின்னு வழக்கு சொல்லிக்கிட்டிருந்தா என்னாவது?

காமா சோமா மொக்கை மொன்னைன்னு போடும் போது யாருக்காவது கடுப்படிக்கத்தான் செய்யும் ..வயித்து வலி முதுகு வலி பேதி பிசாசுன்னு பிடிக்கத்தான் செய்யும்... இதெல்லாம் அரசியலுங்க.. முதுகுவலிக்கெல்லாம் ஹாஸ்பிட்டல்ல போய் படுத்துக்கிட நம்மகிட்ட என்னா கோட்டையா கொத்தளமா சொந்தமாயிருக்கு? கொடி பிடிக்கத் தொண்டன் தான் இருக்கானா? கொடியை திருப்பிப் பிடிக்கும் வித்தைதான் நமக்குத் தெரியுமா? ஆடியோடி வேலை செய்தா தான் நம்ம வூட்டில அடுப்பெரியுது..

கடுப்படிச்சா பதில் பதிவு போடுறாங்க ..கடிபடறாங்க.. அப்புரம் அவங்களாவே ஓய்ஞ்சு போயிடுறாங்க...

இதுக்குக்கூட சுதந்திரம் இல்லேன்னா பதிவுலக ஜனநாயகம் என்னாவது? நாயி எல்லாம் ஏன் குலக்குதுன்னு சொல்ல முடியுமா? கல்லெறி விழாதின்னு நெனைச்சுத்தானே குலைக்குது...கல்லெறி விழுந்தா திரும்பி ஓடாமல் இருக்க முடியுமா? இதெல்லாத்துக்கும் ஜனநாயத்தில இடம் இருக்குங்க...

அதைப்போயி நீங்க எப்படி பிழைன்னு சொல்லலாம்.. இதெல்லாம் இலக்கியம்னு எதிர்பார்த்தா என்னங்க செய்யுரது...


வாசகர்ங்க வாசிக்க வாராங்க.. வாசிச்சது புடிச்சுதுன்னா .. ஒரு குத்து போடுராங்க .. அதுக்கு மேல போயி ஒரு குந்துமணியளவிற்கு எதையோ எழுதி கடுப்படிக்கிராங்க...அல்லது காதைக்கடிக்கிராங்க...

இதெல்லாம் அவங்களுக்கு சுமைன்னு சொல்ல முடியுங்களா? அப்படியே சுமைன்னாலும் சுகமான சுமைதானே? சினிமாவில குண்டுப்பொண்ணுங்களை தூக்கிக்கிட்டு மரத்தைச் சுத்துர கதநாயகன் படுற வேதனை மாதிரி பீல் பண்ணி நா..மா..மா..(ந)க்கல் சிபி ஒரு பதிவு போட்டிருக்கார்..

வெள்ளந்தி வாசகருங்களயெல்லாம் பதிவரை முட்டி மோதுங்கடான்னு கொம்பு சீவி விடுராப்பல...

//இந்த பதிவு ஒருவேளை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறதுன்னு ஒரு பின் குறிப்பாவது போடலாம்!// .."ந(ர் ம)க்கல்" சிபி

அட ..நமக்கே தெரியாது இந்தப் பதிவு என்னா ஆவப்போவுதுன்னு... நாங்க எப்படிப்போய் முன்குறிப்பு பின்குறிப்பூ போட்டுக்கரது...

நமக்கே இது பதிவு தானான்னு எல்லாம் தெரியாத எத்தனையோ பதிவுங்க காத்தாடிட்டுப் போயிடுது.. உங்களுக்கு தெரியலன்னா "அனுபவப்பட்ட" பதிவர்களைக் கேட்டுப்பாருங்க கண்ணீரும் கம்பலையுமா (கம்பர் தோத்தார் போங்க) அந்த ரேஞ்சுக்கு காவியமா வடிப்..சீ,,படைப்பாங்க..

கடமையே கண்ணாயிரமா.. சில பதிவுங்க மீ த பர்ஸ்ட்.. மீ த செக்கண்ட் னு நெரைச்சுக்கிட்டே போராங்க...

என்னான்னா... அவரு செஞ்சதுக்கு ஒரு நன்றிக் கடன் என்கிறாங்க... அதுக்கும் மேல அவங்க அந்தப் பதிவை படிச்சிருப்பாங்கன்னு நாங்க நெனைக்க முடியுமா? அப்படி நெனைச்சா அதீத தன்னம்பிக்கைக்காரங்க நீங்க..

//பல்வேறு ஊடகங்கள் இப்பதான் தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து பார்த்துகிட்டு இருக்காங்க! அவங்க முன்னாடி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கலாமா? கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க!//

இது வேறயா..? அவங்க அக்கப்போரெல்லாம் முடிச்சு ..நம்ம ரேஞ்சுக்கு வந்திட்டாங்களா?

அதென்னங்க அச்சுப் பத்திரிகைகளில "மிஸ்டர் மியாவ், ஆந்தையார், எக்ஸ்ரே ரிப்போட்டு ,பிளேடு பக்கிரி ன்னு எதை எழுதினாலும் வாசிக்கிரீங்க... நம்புரீங்க...சிரிக்கிரீங்க..அப்புறம் தூக்கி கடாச்சிறீங்க..

இங்கே மட்டும் குய்யோ முறயோன்னு கூப்பாடு போடுரீங்க ...பத்திரிகைன்னா முதல்வரு கண்ணாநிதி போல கார்டு வாங்கணும் கடிதம் எழுதோணும் இல்லே தந்தியடிக்கோணும்...

இங்கே அந்த பிரச்சினையெல்லாம் கெடையாதே ..ஜால்ரா தட்டிய கைகள் இப்போ பொட்டி தட்டுவதே ..புத்திசாலித்தனம் என்றாச்சு...

அப்புறம் கடிதம் எழுதுறவங்க தந்தி அடிக்கிரவங்க எல்லாம் ..என்ன 'சல்லி" ன்னு புத்திசாலித்தனமா கேக்கிராதா நெனைப்போட இங்கே படையெடுக்கக் கூடாது..

அப்புறம் அனானிகள் தான் பிரச்சினைன்னு ஒருவர் பம்மியிருக்கார்... அனானி பேர்ல ஒரு பதிவு கூட இங்கே கெடையாது... பிரபல பதிவர்கள் தான் இங்கே பிரச்சினையையே கெளப்புகின்றார்கள்... அதுதான் தான் அவர்கள் (பிர)பலம்.

அதையும் விட்டிட்டு அவர்களை "டிங்குச்சா..டிங்குச்சா" ன்னு ஜல்லி அடிக்கச் சொல்லுரீங்களா?

குறிப்பு: 1)அப்பாடி ஒரு வழியா பதிவர்களை நடுக்கடலில் தள்ளி விட்டாச்சு..

2) நாமக்கல்லாருக்கும் ஒரு எதிர்ப்பதிவு போட்டாச்சு (ஒரு வாரத்துக்கு ஓடும்லே)

11 comments:

நாமக்கல் சிபி said...

ஹைய்யா! நம்ம பதிவுக்கும் எதிர் பதிவு வந்துடுச்சு!

நானும் ஜீப்புல ஏறிகிட்டேன்!

ஹே!

:))

இட்டாலி வடை said...

வாருங்கள் சிபி!

உங்களையெல்லாம் சும்மா ஏத்திட மாட்டோம்ல...

முதல்ல "நானும் வளர்கின்றேன்" "அம்மா நான் பாசாகிட்டேன்" னு பதிவெல்லாம் போட்டு நீங்க "வயசுக்கு" வந்ததை புரூவ் பன்ணுங்க... அப்புரம் பார்ப்போம் ..ஜீப்புல ஏத்தலாமா...இல்லையான்னு...

ஹா..ஹா..

மின்னுது மின்னல் said...

:)))

:)))))))

இட்டாலி வடை said...

வாங்க மின்னுது மின்னல்!

இப்டி கீறிக் கிளிச்சிட்டுப் போனா... மழை வரப் போவுதுன்னா அர்த்தம்...

gulf-tamilan said...

:)))

இட்டாலி வடை said...

வாங்க gulf-tamilan !

என்னையா ..எழுத்துச் சுதந்திரமும் போயிடுச்சா..
எல்லோரும் எழுதுவதை விட்டு விட்டு குகைப் பாஷைக்கு (கோட்டுச் சித்திரம்) போனாப்ல இருக்கே..

நாமக்கல் சிபி said...

//முதல்ல "நானும் வளர்கின்றேன்" "அம்மா நான் பாசாகிட்டேன்" னு பதிவெல்லாம் போட்டு நீங்க "வயசுக்கு" வந்ததை புரூவ் பன்ணுங்க... அப்புரம் பார்ப்போம் ..ஜீப்புல ஏத்தலாமா...இல்லையான்னு...
//

இட்டாலியாரே~

நான் வளர்கிறேனே மம்மியெல்லாம் 2006 செப்டம்பர்லயே நான் போட்டாச்சு!
:))

பீர் | Peer said...

:)

இட்டாலி வடை said...

//இட்டாலியாரே~

நான் வளர்கிறேனே மம்மியெல்லாம் 2006 செப்டம்பர்லயே நான் போட்டாச்சு!//

அப்படியா ..அப்போ நீங்க அப்ளை பண்ண வேண்டியது ..வயது போனவர் சங்கத்திற்கு (சீனியர் ஹோமிற்கு..)

பதிவர்கள் சார்பா ..இரண்டு பொல்லுகள் ..பரிசளிக்க ஆவன செய்யப்படும்..

இட்டாலி வடை said...

வாங்க பீர்!

என்னா நுரை தள்ளக் குலுக்கியிருக்கீங்க.. அதுதான் "புஷ்ஷூ"

கொஞ்சம் ஊதிக் குடிங்க ..தானா அடங்கிடும்...

பதி said...

:))))

அங்கயும், இங்கயும் ஒரு +1 !!!!!!

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil