ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, July 13, 2009


தினமணியும் மொக்கையும்அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அதைப்போல தினமணியின் கண்களுக்கு எல்லாக் "காந்தி"களும் மகாத்மாகாந்தியாகத் தோன்றுகின்றார்கள். என்ன ஒரு அக்கிரமம். பத்திரிகைத் துறையில் தனக்கென இடம் பிடித்திருக்கும் தன்னிகரற்ற பத்திரிகையின் "மொண்ணை" ஆசிரியத் தலையங்கம். அந்த ஆசிரியரை ஆசியாவை விட்டே நாடு கடத்த வேண்டும்.

அகிலத்திற்கே அகிம்சையைப் போதித்து ஒரு ரொட்டித் துண்டுடனும் ஒரு ஆழாக்கு ஆட்டுப்பாலுடனும் துண்டு வேட்டியில் அகமகிழ்ந்து சிரித்த அந்த மகாத்மா எங்கே. ஒண்ட வந்த பிடாரியான "இந்த" காந்தி எங்கே? இதைக்கூட பகுத்து உணரத் தெரியாத அறிவுக் கொழுந்து தான் இன்றைய தினமணி ஆசிரியர்.

ஈழமக்களுக்காக அழாதவர்கள் யாரும் உண்டோ? மூன்று இலட்சம் மக்களையும் அவர்களை மூடி வைத்திருக்கும் முள்ளுக்கம்பி வேலிகளையும் மனிதாபிமானம் கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது தான்.இத்தனை கோரங்களுக்கும் ஆளாக ஆடு மாடு பட்டி போல அவர்களை விரட்டியடித்து பட்டியில் அடைத்த இந்தப் பி(ஸ்)ஸாசுக் "காந்தி"யும் அந்த மகானுபவரும் ஒன்றெனச் சொல்ல எத்தனை அப்பிராணியாக இவர் இருக்க வேண்டும்.

அழுவது மாதிரி அழுது துடைப்பது மாதிரி துடைத்து இந்திய அரசிற்கு ஜால்ரா தட்டும் இந்தக் "கூஜா"வை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஐ.நாடுகளோ மனித உரிமை அமைப்புகளோ அந்த அப்பாவிகளையும் முகாம்களையும் அடையவிடாது தகிடு தத்தம் செய்யும் சிறிலங்கா பாசிசப்பேய்களை எல்லாவழிகளிலும் காக்கும் இந்திய அரசை வழி நடாத்தும் "இந்த" பாசிசப்பேய் இரத்தக் காட்டேறி "காந்தி" எங்கே... அந்த மகாத்மா "காந்தி" எங்கே?

இதில் அதிசயம் என்னவென்றால் இந்த அயோக்கியத் தனத்தைத் தட்டிக்கேட்க சுதந்திரப் போராட்டத் தியாகிகளோ அறிவு ஜீவிகளோ, மனித நேய பண்பாளர்களோ, சாதாரண குடிமக்களோ யாரும் முன்வரவில்லை.

அட கெட்டு நொந்த ஈழத்தமிழனை விடுங்கள். உயிர் கொடுத்து சுதந்திரம் வாங்கித் தந்த தேச தந்தையை அவமதிப்பதைக் கூடவா தட்டிக் கேட்கக் கூடாது?

இதில் இது வேறு கேடு. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள். ஐயோடா...

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil