ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, August 27, 2009


தமிழர் அழிவுக்குத் துணை போன இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது - வைகோ


இலங்கையில், தமிழர்களின் அழிவுக்கு காரணமான ஆயுதங்களையும், அனைத்து ராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்பு கிடையாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையின் சிங்கள கொலைபாதக அரசு, தமிழ் இனத்தை கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப் படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சாட்டுகள், நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்துள்ளது.

இருதயத்தை பிளக்கும் காட்சிகள்...

உலகில் இருட்டடிப்பு செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. அதே தொலைக்காட்சி, நேற்றைய தினம் வெளியிட்டு உள்ள தமிழர் படுகொலை காட்சிகள், இருதயத்தை பிளக்கின்றன.

தற்போது தொலைக்காட்சியில் வெளியாகி உள்ள கோரப் படுகொலைகள், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்து இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும், லண்டனில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களும், செய்தித்தாள்களும் உலகத்துக்கு தெரிவித்தன.

நம் நெஞ்சை பதற வைக்கின்ற படுகொலை காட்சிகளை காண்கிறபோது, இதயம் வெடித்து விடுவதுபோல இருக்கிறது.

மன்னிப்பே கிடையாது...

சிங்கள ராணுவம் செய்து இருக்கின்ற படுகொலைகளுக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவிப்பதோடு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள ராஜபக்சே அரசையும், ராணுவ தளபதிகளையும், கொடுஞ் செயலில் ஈடுபட்ட ராணுவத்தினரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க முன்வர வேண்டும்.

முல்லைத் தீவு மாவட்டத்தில், வன்னிப் பிரதேசத்தில், இப்படி நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இக்கொடுஞ் செயலுக்கும், தமிழர்கள் சிந்திய ரத்தத்துக்கும், சிங்கள அரசு மட்டும் அல்ல, இந்திய அரசும் பொறுப்பாளி ஆகும்.

தமிழர்களின் அழிவுக்கு காரணமான ஆயுதங்களையும், அனைத்து ராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்பு கிடையாது என்று வைகோ கூறியுள்ளார்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil