ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 30, 2009


முட்டாள்களும் அவர்கள் நம்பிக்கைகளும்


நிறையவே மேக மூட்டங்களைப் பார்த்தாயிற்று. தமிழ் மக்களின் கண்ணீரும் சேர்ந்து கனம் கூடியிருக்கின்றது. காட்டில் இருந்து நாட்டிற்கு நாகரீகமாகி வந்த மனிதனின் காலம் போய் காட்டிற்கே மனிதர்களை அனுப்பும் காலமாகிவிட்டது. பரிசோதனைக் களம் ஈழ மண்ணில் நடந்திருக்கின்றது. தங்கள் ஆயுதங்கள் எத்தனை பேரைக் கொல்லும் என்று ஆயுத வியாபாரிகள் கணக்குப் பார்த்தாயிற்று.தங்கள் கொள்கைகள் எத்தனை தூரம் செல்லும் என்று தமிழ் மண்ணை எரித்தவர்கள் திருப்திப் பட்டுக் கொண்டார்கள்.

ஆனால் அந்த மக்கள் இன்னும் வலிகளை மறக்க முடியாது மரத்துப் போய் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். 21 ஆம் நூற்றாண்டின் மனித குல அவமானத்தைப் பற்றி யாருக்கும் வெட்கமில்லை. அந்த மனிதர்களையே வைத்து அரசியல் செய்யும் போக்கிரிகள் தங்கள் செய்கைக்கு என்ன பிராயச் சித்தம் செய்ய்தாலும் தீரப்போவதில்லை.

நாதியில்லாது கிடக்கும் மக்கள் முகாமில் நடமாடும் வங்கிக் கிளை திறந்திருக்கின்றது என்று "புதிய தேசம்" என்ற போக்கிரி குதூகலப் பட்டிருக்கின்றது.அந்த மக்கள் வைத்து எடுக்க அவர்களிடம் என்ன இருக்கப் போகின்றது அவர்கள் உயிரைத் தவிர. இவர்கள் உருவாக்கும் "புதிய தேசம்" காட்டுமிராண்டிகளின் கூடாரமாக இருக்கும் தீயல் வாசம் தான் இப்போதே நாசியைக் கருக்கின்றது.

இவர்களும் தமிழர்கள். இவர்கள் அறிந்தே செய்கின்றார்களா? அறியாது தவறு செய்கின்றார்களா? குற்றம் செய்யாதவன் முதல் கல்லை எறியக் கடவது என்று சொன்னால் ஒருவன் காணாது ஓடிவிடுவான். அத்தனை மொத்தக் குற்றத்தையும் செய்தவர்கள் மூச்சுக்கு முன்னூறு முறை " புலிகளுக்காக" அத்தனை தன் இன மக்களையும் அடகு வைக்கும் முள்ளந்தண்டு முறிந்து போயிருக்கின்றார்கள்.

இன்னுமொரு விடயம் ... அன்றென்றும் என்றென்றும் அன்பில்லாத ஒன்று புலிகளைத் துவைத்து அசோகக் கொடியை ஏற்ற அல்லல் படும் அல்லக்கை ஈமெயிலில் வந்தது என்று விஷம் கக்கியிருக்கின்றது. ஈ மெயிலில் வந்ததாயினும் இந்த அல்லக்கையின் "நேர்மை"பற்றி எப்போதும் எனக்கு சந்தேகம் இருந்து கொண்டிருக்கின்றது. நேர்மையான கருத்துப் பரிமாற்றம் பற்றி "நடுநிலை" ஆப்படித்து உட்கார்ந்திருக்கின்றது.

இதை எப்படி உறுதிப்படுத்துகின்றேன் என்றால் புலிகளின் விமானம் பற்றிய மாயைகளை இன்றைய தோல்வி நிலையில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். கடைசி கடைசி தற்கொலைத் தாக்குதலில் கொழும்பில் இருந்த கான்கிரீட் கட்டிடத்தின் ஒரு சில செங்கல்களைப் பெயர்த்ததுடன் சாம்பலாகிப் போயின அந்த விமானங்கள். அந்த விமானங்களை வைத்துத் தான் இதே அல்லக்கை "கல்பாக்கம் அணுமின் உலைக்கு புலிகளின் விமானப் படையால்" ஆபத்து என்று போக்கிரி இந்திய துடுக்குத் தனத்திற்கு ஆதரவு தேடும் பதிவு ஒன்று பல காலங்களின் முன் படங்களுடன் போட்டிருந்தது. காலங்கள் போனால் ஞாபகங்கள் போய் விடும் என்று இப்போதும் "ரீல்" விட முயற்சிக்கின்றது.

"என்றென்றும் அன்பில்லாத இது " எப்போதும் போல் புலி /ஈழ எதிர்ப்பாளனாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

"வடலியடி" சயந்தன் "உங்கள் தலைவர்" பற்றி வன்னிக் கோபம் பற்றி எழுதியிருந்தார். ஏன் இப்படியிப்படிப் போனால் இப்படியிப்படி ஆகும் என்று உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கவில்லையா? சிங்கள ஆமியின் பயத்தில் தானே அப்போதெல்லாம் உங்கள் அக்கா கேட்டு வீட்டிலிருந்து தண்ணியள்ள வரும் "அவர்கள்" எல்லாம் "உங்கள் தலைவரின்" குண்டிக்குப் பின்னால் போனவர்கள்.

அவர்கள் போராடினார்கள். அவர்களால் முடியவில்லையென்றால் ஆறுமாதம் முன்னால் அவர்களை"முடித்து" விட்டு நீங்கள் தப்பிக் கொள்ள விட வேண்டுமாக்கும். அவர்கள் என்ன நீங்கள் காசு கொடுத்து "கூலி" வேலை செய்தவர்களா?

அவர்களுக்கு முடியவில்லை என்று தெரிந்தபோது தப்பிக்க விரும்பியிருந்தால் தப்பியிருக்க வேண்டும். யாரும் உங்களை வரவேற்காத படியால் தானே அவர்களின் நிழலில் ஒதுங்கி ஓடினீர்கள். இப்போது மட்டும் ஏன்? வாழ்விலும் தாழ்விலும் நேர்மையில்லாத விமர்சனங்களை வைக்கும் நீங்கள் என்னவிதமான மனிதர்கள்.

தோசையத் திருப்பிப் போட எப்போதடா சந்தர்ப்பம் வரும் என்று காத்திருக்கும் இந்தியர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் நீங்களுமா? யூ ட்டூ... என்று தான் கேட்கத் தோன்றுகின்றது. இதில் மனத் தடை வேறாம்.

எனக்கு எந்த மனத் தடையும் இல்லை.. புலிகளுடன் சேர்ந்தவனும் இல்லை... அவர்களுக்கெதிராக ஆயிரம் கேள்விகளுடன் இருப்பவன்... ஆனால் அவர்கள் சோற்றுக்கு மாரடிக்கவில்லை... உங்களை மனிசராக வாழ வைக்க சிலுவை சுமந்தவர்கள். அவர்கள் ஆறு மாசம் முன்னால் அல்ல ஆறு வருடம் முன்னாலும் இறந்து கொண்டிருந்தவர்கள் தான் ..உங்களுக்காக...

"உங்கள் தலைவன்.." பாவம் பிரபாகரன் இப்படிப்பட்டவர்களைத் தான் "தன் மக்கள்" என்று போராடினான். துரதிர்ஷ்ட சாலி.

20ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தியமன் சதுக்கம் பற்றிப் பேசுகின்றார்கள்... 20 ஆண்டுகளுக்கும் மேலாக தினம் சாகும் இவர்கள் ... நினைவிலிருந்து அகற்றப்பட்டவர்களா?

"இரத்தமும் வேதனையும் இல்லாது சுதந்திரமில்லை.."

2 comments:

கண்டும் காணான் said...

ஈழ விடுதலையை ஒரு தமிழ் சினிமா படம் போல் அல்லாது உணர்வு பூர்வமாக நேசித்தவர்களின் மனநிலையை அப்படியே பிரதிபளிதீர்கள். வெல்லும் வரை பாமரத்தனமாக கைதட்டி எங்கள் தலைவர் எனக் குளிர்காய்ந்து விட்டு இப்போது மச்சாள் போன் பண்ணினாள், மைத்துனன் தந்தி அடித்தான் என்று புலம்புகின்ற ஜந்துக்களை நினைத்து , இப்படியான மக்களின் சிலருக்கும் சேர்ந்தா , புல்லுக்குமாங்கே பொசியுமாம் நீர் என எம் தலைவன் போராடினான் ?

இட்டாலி வடை said...

வாருங்கள் கண்டும் காணான்!

அதீத உணர்ச்சியுள்ளவர்கள் தமிழர்கல்...தேவைப் படும் போது தூக்கிப் பிடிப்பதுவும் தேவைப்படாத போது காலில் போட்டு மிதிப்பதுவும்...களையப்பட வேண்டிய விடயங்கள்....

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil