ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, May 8, 2009


எழுத்தும் தொங்கு தோட்டமும்


நம்ம எழுத்தாளர்களைப்பற்றி எண்ணும் போதெல்லாம் ஒரு வரி ரெண்டு வரி 'பசக்" என்று ஒட்டியிருப்பதை வைத்து யார் என்று சொல்லிவிடலாம். நமக்கு மிகச் சின்ன வயதிலேயே இதயத்தில் ஒட்டுப்போட்டவர் "எஸ்.பொ" "அவள் பாவாடையின் உள்ளால் சோப்புப்போட்டாள்... இரவின் அழுக்கை அகற்றத்தான்..." இதே அல்லது இதைப்போல ..அப்படியே ஒட்டிக்கொண்டிருக்கின்றது.. என்ன சோப்புப் போட்டு இதை அகற்றுவது என்று புரியவில்லை.. அடுத்தது சுஜாதா "டயரி பாம்" ,,அவள் போட்டிருந்த ரீ சேட்டில் எழுதியிருந்தது..அப்படின்னு எழுதி வைத்திருந்தார். அப்போது தான் நாம் எழுதும் "diary" க்கும் அவர் எழுதிய "dairy" க்கும் வித்தியாசம் புரிந்து பாற்பண்ணை வைத்து மிட்டாசு மிராசுதாராகி ..அட போங்க.. இப்பவும் பார்த்து பெரு மூச்சு விடும் அளவில் தான்.diary இல் எழுதிவைக்கும் அளவில் நீண்ட சரித்திரங்கள்.. சரித்து இருக்காத படியால் தான் சரித்திரங்களாகிப் போய் விட்டது..இல்லாவிட்டால் அது வாழ்க்கையாகி அல்லவா போய் விடும். ஏன் அப்படி எழுதினார்கள்.. அவர்க்ளுக்குள்ளும் காமம் இருந்தது ..அல்லது காமம் பர்றிய ஆலோசனை இருந்தது... அதனால் தான் அவர்கள் "இலக்கிய"த்துள் இருக்கின்றார்கள்.

அடுத்து சாண்டில்யன் "அவள் மார்புக்கச்சை விண்ணென்று தெறிக்க... கிண்ணென்றிருந்த வாழத்தண்டு.." இந்த வகையறா .. இதய ஒட்டுக்கள்... அதையே நம்பி தொட்டுப்பார்த்தபோதுதான் தெரிந்தது.. அவ்வளவு ஒன்றும் "விண்" இல்லை சமயத்தில் தொங்கியும் தோளில் தூக்கிப் போடுமளவு "நீண்டும்" இருந்தது..

ஆசு கவி கல்லடி வேலுப்பிள்ளை "கோச்சி வரும் கவனம்" என்று எழுதியிருந்த போர்ட்டில் ஆச்சியும் வருவாள் என்று எழுதியதைப்போல எனக்கும் தொடரத்தான் விருப்பம் "ஆச்சியுடன் --சியும் வரும் "என்று. என்ன செய்வது ..மனம் எப்போதும் பாபிலோன் தொங்கு தோட்டம் போலத் தொங்கித் தானே இருக்கின்றது..

புஸ்பா தங்கத்துரை "ஒதுக்கப்பட்டவர்" என்ற படியால் படிக்க முடியவில்லை..படிக்க முடியாமல் போனதால் தான் "ஒரு தமிழன் கற்பு " காப்பாற்றப்பட்டிருந்தது.. இப்போது யோசித்தால் அது வேண்டாத வேலை என்று படுகின்றது.

இப்போதெல்லாம் இருக்கும் ஊரில் "டேட்டிங்" பற்றிக் கதைக்கும் போது "அந்த" வயதில் இந்த நாட்டிலும் கலியாணத்திற்கு அப்புறம் "நம்ம" ஊரிலும் இருந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. நம்ம ஊர் ஏன் என்று கேட்பவர்களுக்கு மனைவியின் கற்பைக் காப்பாற்றுவதற்குத் தான்... நம்மைப் பர்றி யார் எப்போது கவலைப்பட்டது..கண்ணகிக்குத் தானே சிலை வைத்திருக்கின்றோம்.

கோவலனைத்தானே ரெண்டு பொண்டாட்டிக்காரனாக "அலைய" விட்டு விட்டோமே..

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil