ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 9, 2009


மண்ணின் குழந்தை


ஈழ மண்ணின் துயரங்களைப் போக்க நாமனைவரும் உயிர் பொருள் ஆவி.. அப்படித்தான் சொல்ல வேண்டும். அத்தனை கடுமையாக தெளிவாக விவேகமாக நமக்குக் கிடைக்கும் அத்தனை சந்தர்ப்பங்களையும் பயன் படுத்த வேண்டும்.

தமிழ் என்பதுதான் நமது மண்.அந்த மண்ணில் தான் நமது வேர்கள் ஊடுருவி செழிக்க முடியும்.தமிழ் தான் எங்கள் அடையாளம்.நம்மைப் பொறுத்த வரையிலும் மற்றவர்களைப் பொறுத்த அளவிலும் நம்மை அடையாளங் காட்டுவது தமிழன் என்ற ஒற்றைச் சொல்லே.

அந்தவகையில் வன்னியில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழர்களுக்கு உதவவேண்டும் என பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த மேற்கத்தைய இசை உலகின் நட்சத்திரமாகக் கணிக்கப்படும் பிரபல பாடகியான மாயா அருட்பிரகாசம் (ஏம்.ஐ.ஏ) கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

ஈழத் தமிழர்களான பெற்றோருக்குப் பிறந்த மாயா அருட்பிரகாசம் மேற்கு நாடுகளின் இசை உலகில் பிரகாசிப்பவர். இவர் சிறு குழுந்தையாக இருந்தபோதே இவரது தந்தை ஈழப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தாயகம் திரும்பி ஆயுதப் பயிற்சிக்காக மத்திய கிழக்குக்குச் சென்றுவிட்டார்.

வன்னியில் இடம்பெறும் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கும் மாயா, இவ்வாறு ஆபத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உதவும் வகையிலான முனைப்புக்களை மேற்கொள்ளுமாறு பொது நிகழ்ச்சி ஒன்றில் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

'ரைம்' சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்ட மிகவும் செல்வாக்கான 100 பேரைக் கெளரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனரான ஓப்ரா வின்பரேயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் வான்படையினர் தமிழர்களின் குடியிருப்புக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களின் போதே இவ்வாறு தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் தெரிவித்த மாயா, ஒப்ராவின் கைகளை பிடித்துவாறு இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாயா அருட்பிரகாசம், 'ஒஸ்கார்' மற்றும் 'கிரேமி' விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பதுடன், 'ரைம்ஸ்' சஞ்சிகையின் 2009 ஆம் ஆண்டின் மிகவும் செல்வக்கான 100 மனிதர்கள் என்ற பட்டியலில் 42 ஆவது மனிதர் என தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏழு ஓஸ்கார் விருதுகளைப் பெற்ற 'ஸ்லம் டோக் மில்லினியர்' என்ற பிரபல திரைப்படத்துக்கு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் இசையமைக்கும் பணியை இவரும் மேற்கொண்டிருந்தார்.

போர் நடைபெறும் பகுதியில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் ஆபத்தில் உள்ளனர். எனினும் தனது பிரபலத்தைக் கொண்டு இதனை முன்னெடுக்க முடியும் என தான் கருதவில்லை எனவும் இலங்கையில் தமிழர்களின் நிலைமைகளை ஊடகங்கள் மூலம் வெளிச்சத்து கொண்டு வரவேண்டும் எனவும் மாயா குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இந்தியாவில் இருந்து வெளியாகும் 'த வீக்' சஞ்சிகைக்கு எம்.ஐ.ஏ. பற்றி கருத்து வெளியிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், "எமது மண்ணின் குழந்தை, உலகு எங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்களில் மிகவும் திறமையுள்ள இளம் உறுப்பினர்களில் ஒருவர். அவர் தொடர்பாக நாம் பெருமையடைகின்றோம். அவரின் ஆதரவு ஈழத் தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும் வலுவான காரணிகளில் ஒன்று.

சிறிலங்கா அரசின் வலிமை மிக்க எல்லாப் பிரச்சார சாதனங்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை அழிப்பதிலேயே முனைப்பாக செயற்படுகின்றன. இருந்த போதும் மனிதநேயம் கொண்ட அவரின் இதயம் தான் தமிழ் மக்கள் படும் துன்பம் தொடர்பாக அவரை பயமின்றி பேசவைத்துள்ளது" என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil