ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, May 15, 2009


கலைஞருக்கு கல்தா


தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை அவர்களுக்குப் பொறுமையில்லை. திக்விஜய் சிங்கின் பேச்சும் அதனை உறுதிப்படுத்துகின்றது. அ.தி.மு.க ஒரு மதசார்பற்ற கட்சி என்ற புகழாரம். கட்சியின் தலைவியையே கடவுள் என்று கொண்டாடும் தொண்டர்கள்.. வேறு எந்த மதத்தைச் சார்ந்திருக்க முடியும். தி.மு.க கடவுளையே நம்பாத கட்சி. அதனுடன் கூட்டுச் சேர்ந்திருக்கையிலேயே இப்படிப்புகழாரம் சூட்டுவதில் நீங்கள் எதிர்பார்ப்பதைப்போலவே அதில் உட்குத்து இருக்கின்றது.

காங்கிரஸின் வருங்காலத் தலைவரின் விருப்பப் படியே நகர்வுகளை விரும்புகின்றது "அடுக்களை" ஆட்சி. முந்திரிக்கொட்டைத்தனமாக பேசி வைத்ததை ஒட்டுப்போட மன்மோகன் ஹாஸ்பிட்டல் வரை வந்து போக வேண்டியிருந்தது.

இப்போது காங்-தி.மு.க தமிழ்நாட்டில் மண்ணைக்கவ்வும் என்பது முடிவான ஊர்ஜிதத் தகவல். தி.மு.க விற்கு தமிழ்நாடு போனால் மலையே போன கவலை. காங்கிரஸிற்கு வெறும் மயிரே போன நிலை. காங்கிரஸின் நாட்டம் எல்லாம் மத்தியில் ஆட்சிதான். அதற்காக யாருடனும் கூட்டு வைக்கலாம் எத்தனை மந்திரிப்பதவிகளையும் தூக்கிக் கொடுக்கலாம் என்ற நிலையில் காங்கிரஸ் இருக்கின்றது.

இந்தத் தேர்தலில் மும்மணிகளின் - அட புத்தனின் மும்மணிகள் அல்ல- மூன்று பெண்மணிகளின் கைகள் தான் உயர்ந்திருக்கப்போகின்றது என்பது தெளிவாகிவிட்டது. அடுத்த அவையில் 75 ஆசனங்களுக்குக் குறையாது கைவசம் வைத்திருக்கப் போகின்றார்கள். அப்படிப்பட்டவர்களை வளைத்துப்போட பா.ஜ.க வும் காங்கிரஸும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கின்றன.

அதன் வெளிப்பாடுதான் ஜெயா புகழ்ச்சிப் புராணம். நமக்கு வேடிக்கையாய் இருந்தாலும் கலைஞருக்கு வயிற்றில் புளியைக்கரைத்துக் கொண்டிருக்கின்றது.

எத்தனை ஏச்சுகள் பேச்சுகள் அவமானங்களையெல்லாம் தாங்கி துரோகிப் பட்டங்களைச் சூடி கட்டிக்காத்த கூட்டணி அணை தேர்தல் சூடு ஆற முதல் அடிபட்டுப்போவதில் பயங்கர கடுப்பில் கோபாலபுரம் கொதியோபுரமாக இருக்கின்றது.

போயஸ்கார்டனில் பூக்கள் பூத்துக்குலுங்கத் தொடங்கி விட்டது. அது பா.ஜ.க மரத்திலோ காங்கிரஸ் மரத்திலோ மலர்ந்திருந்தால் என்ன ? மலருக்கு வாசனை உண்டு தானே. அது காய்த்துக் கனியாகும் போது தமிழகமும் கைவசமாகும் கற்பனையில் அ.தி.மு.க தலமையகத்தில் உற்சாகம் கொப்பளிக்கத் தொடங்கிவிட்டதாம்.

1 comment:

Anonymous said...

:-))))))))))))

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil