ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Saturday, May 9, 2009
வேற்றுக்கிரக வாசிகளா?
"இந்தியனாக இருந்தால் தமிழனாக இருக்க முடியாது.." கவிஞர் தாமரையின் ஆவேசம் சில நாட்களுக்கு முன்னர் சலசலப்பைக் கிளப்பியிருந்தது.அதை இவ்வளவு சீக்கிரம் உன்மையென நிரூபிக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ் நாடு வந்திருக்கும் மன்மோகன் சிங் இந்திய நிலைப்பாடு தமிழர் நிலைப்பாட்டிற்கு எதிரானது எனத் தெளிபு படுத்தியுள்ளார்.
அண்மையில் ஜெயலலிதாவின் தனித்தமிழீழ ஆதரவுப் பேச்சு தமிழக, புலம் பெயர் தமிழர்களிடம் உற்சாகமான வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. அதே உற்சாக வரவேற்பு ஓட்டுகளாக மாறி அமோகமான வெற்றி நோக்கி அள்ளிக்கொண்டு செல்கின்றது.காட்டாற்று வெள்ளமாகப் பெருகி ஓடும் அரசியல் ஆற்றில் எதிர்நீச்சல் போட முடியாத கலைஞரும் தமிழீழம் பெற்றுத்தரும் நிலைப்பாட்டிற்கு வரவேண்டியதாகிவிட்டது.
தமிழ் நாட்டின் இரு பெரும் கட்சிகளின் நிலைப்பாடு தமிழக மக்களின் நிலைப்பாட்டைக் குறிப்பதாகத்தானே கொள்ளவேண்டும். ஆனால் என்ன நடந்திருக்கின்றது.
இலங்கையில் அவதிப்படும் தமிழர்களுக்காக தனி ஈழம் அமைக்க வேண்டும் என, தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தனி ஈழ கோரிக்கை பற்றி மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, மத்திய அரசு அந்த யோசனையை திட்டவட்டமாக நிராகரிப்பதாகக் கூருகின்றார்..
''இந்தியா ஒரு போதும் தனி ஈழ கோரிக்கையை ஆதரித்தது கிடையாது. பிரச்னையை சம்பந்தப்பட்ட அனைவரும் பேசித்தீர்க்க வேண்டும். அதுதான் இந்தியாவின் விருப்பம்'' என, சென்னையில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
ஆக தமிழக அனைத்து மக்களின் ஒட்டுமொத்த விருப்பத்தைக் கூட செவிமடுக்கும் எண்ணம் மற்ற இன மக்களுக்குக் கிடையாது. தமிழக மக்கள் என்ன வேற்றுக்கிரக வாசிகளா? உரிமையைப் பலத்தின் மூலம் தான் அடைய முடியும்.காங்கிரஸ் போன்ற வேற்று மொழிக்கட்சிகளை தமிழகத்தில் காலூன்றவிடாது வேரறுப்பதன் மூலமே தமிழனின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"இந்தியனாக இருந்தால் தமிழனாக இருக்க முடியாது.."
ஆம் இதை நான் ஆமோதிக்கிறேன்
நம்ம மன்மோகன் சிங் மன்னிகனும் இலங்கை தமிழ் வாயில்
மண் போட்ட சிங் சொல்லியது
//*** தமிழக மக்கள் தெளிவானவர்கள் அண்டை நாட்டு விவகாரத்தில் நாம் எந்த அளவிற்கு தலையிட முடியும் என்பதை, படித்தவர்கள் நான்றாக அறிவர் ***//
ஏன்டா சுண்ணாம்பு தலையா படிச்சிருந்தா உணர்ச்சி எல்லாத்தையும் முட்டகட்டி வச்சிரனுமா, யாரு எப்படி போனாலும் கவலைபட கூடாது
நம்ம விட்ல இயற்கையா யாராவது செத்தாலே மனசு துடிக்குது
அங்க கொத்து கொத்தா அப்பாவி மக்கள் செத்து மடிறாங்க அப்படியிருக்கும் போது எப்படி சும்மா இருக்க சொல்றிங்க சார்
வாருங்கள் தாமிர பரணி !
//நம்ம விட்ல இயற்கையா யாராவது செத்தாலே மனசு துடிக்குது
அங்க கொத்து கொத்தா அப்பாவி மக்கள் செத்து மடிறாங்க அப்படியிருக்கும் போது எப்படி சும்மா இருக்க சொல்றிங்க சார்//
அதே
Post a Comment