ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 24, 2009


தமிழகத்தை மீண்டும் காங்கிரஸிற்கு தாரை வார்க்கும் தி..மு..க


கொள்கையிலிருந்து பிறழ்ந்து போவது ஒரு சில சமயங்களில் நடப்பதுதான். கொள்கையே இல்லாது நடந்து கொள்வது என்பது தற்கொலைக்குச் சமமானது. இன்று தி.மு.க வின் நிலையும் அவ்வாறு தான் இருக்கின்றது. குடும்பத்திற்கான கட்சி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ஏழு ஆறு ஐந்து என்று இலக்கங்கள் மாறிக்கொண்டிருந்தன. இலக்கங்கள் தீர்மானிக்கப்பட்டபோது முகங்கள் தீர்மானிக்கப் படுவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த அரசில் காபினட் தரத்தில் இருந்த டி ஆர் பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் வகையறாக்களுடன் புதிய நட்சத்திரங்களான அழகிரி, கனிமொழி போன்றோருக்கும் மந்திரிப் பதவிகளைத் தேடிப்பிடிப்பதில் மு.க வின் டங்குவார் கழன்று போய் விட்டது.

டி.ஆர் பாலுவிற்கு மக்கள் அவைத் துணைத்தலைவர் பதவியுடன் ஒருவாறு சுமுகமான முடிவிற்கு தி.மு.க வின் குடும்ப அரசியல் வந்திருக்கின்றது. ஆ.ராசா,தயாநிதி மாறன்,அழகிரிக்கு காபினட் அந்தஸ்துடனான அமைச்சர் பதவிகளும் கனிமொழிக்கு தனி இலாகாவுடன் கூடிய இணை அமைச்சர் பதவிகளும் மற்றும் மூன்று துணையமைச்சர் பதவிகளும் தமிழர்களுக்கான தி.மு.க வின் உயிரைத்துச்சமாக மதித்த போராட்டத்தின் மீது வாய்க்கப் பெற்றிருக்கின்றது. உடன் பிறப்புக்கள் இனி நாளுக்கு மூன்று பதிவுகள் மூலம் தி.மு.க வின் வரலார்றுப்பெருமை மிக்க வெற்றியைக் கொண்டாடலாம்.

இவ்வெற்றிக்கான விலையாக காங்கிரஸ் 1967 இற்குப் பின்னர் மீண்டும் தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தில் பங்கு கொள்ளப்போகின்றது.

234 இடங்களில் தி.மு.க கொண்டிருப்பது 163 இடங்கள்.பெரும்பான்மைக்குத் தேவைப்படுவது 22 இடங்கள். அதை தி.மு.க விற்குக் கொடுத்துக் கொண்டிருப்பது காங்கிரஸ் கட்சி. 18 இடங்களை வைத்திருக்கும் தி.மு.க விற்கு 3 கபினட் அமைச்சுகள் ஒரு தனி இலாகா இணையமைச்சர் பதவி மூன்று துணையமைச்சர்கள் ஒரு துணை அவைத்தலைவர் பதவி என்னும் போது 22 இடங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் காங்கிரஸிற்கும் மந்திரிப் பதவிகள் கொடுக்க வேண்டியதும் நியாயமானது தானே.

காங்கிரஸை தமிழகத்தில் இருந்து அடியோடு அடித்து விரட்டிய அண்ணாவின் கட்சியே அல்லது அவரின் உடன்பிறப்பு அல்லது சிஷ்யப்பிள்ளையே மீண்டும் காங்கிரஸைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவது அழகிய முரண்நகையே. கொண்டு வர முடியாது என்று நீங்கள் முரண் பிடித்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தேர்தல் வரக்கூடும்.

இத்தனை சுவையான விடயங்களை வைத்து வேண்டும் வேண்டாம் கூடும் கூடாது என்று உடன் பிறப்புக்கள் நாளுக்கு 10 அல்லது அதற்கு கூடுதலான பதிவையும் போடக் கூடும்.

2 comments:

Anonymous said...

If Raja is cabinet minister, Kanimozhi don't have to be the minister! It's a family affair! So, all DMK cabinet ministers are MK's family members only.

Anonymous said...

இட்டாலி வடை,

கேடு கெட்ட தி மு க வை விட காங்கிரஸ் எவ்வளவோ மேல்.தி மு க ஒழிக்கப்பட்டால் தமிழகத்தை பீடித்து இருந்த சனி ஒழியும்.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil