ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 16, 2009


அட பார்ரா ! டில்லிக்குப் போறாராம் கலைஞர்


ஈழத்தமிழர் கொல்லப்படும் போதெல்லாம் முதுகு வலியில் அவதிப்பட்ட கலைஞர் ..என்ன செய்வார் பாவம்... சோனியாவிற்கும் மன்மோகன் சிங்குக்கும் தந்தியடித்தார். அந்த வருத்தத்திலும் தந்தியாவது அடித்தாரே என்று திருப்திப்படாது குற்றம் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் பலபேர்.

இன்று தேர்தலில் வெற்றி பெற்று வெற்றிக்களிப்பில் திளைத்துக் கொண்டிருக்கின்றார். உடம்பும் மனம் போலத் தெம்பாக இருக்கின்றது.

ஆனால் ஈழத்தில் தான் எல்லாம் முடிந்து விட்டது.

என்ன செய்வது? கலைஞர் தயாராக இருக்கும் போது ஈழத்தில் பிரச்சினையும் இல்லை... பிரச்சினை தர மக்களும் இல்லை.. எல்லோரும் செத்துத் தொலைந்து விட்டார்கள்.

கலைஞருக்கு ஒரு சந்தர்ப்பம் தானும் கொடுக்காது அவசரப்பட்டு செத்துத் தொலைந்த இவர்களை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுக்க வேண்டுமென்றுதான் சபிக்கத் தோன்றுகின்றது. அப்படியென்ன அவசரம்? இன்னும் கொஞ்சக்காலம் உயிருடன் இருந்து குண்டுகளைத் தாங்கிக் கொள்ள முடியாதா..என்ன?

பாவம் கலைஞர் போராட "மக்கள் பிரச்சினைதான் "இல்லை ...பிறகேன் டில்லிக்கு..கலைஞருக்குத்தான் வெளிச்சம்..

கலைஞரின் சாணக்கியம் பற்றி கொண்டாட கண்மணிகளுக்கு ஒரு சந்தர்ப்பம். ஒரு பத்துப் பதிவாவது எழுதிக்கிழிக்க மாட்டார்களா?


குறிப்பு:

தில்லி செல்கிறார் கருணாநிதி




சென்னை, மே 16- தமிழக முதல்வர் கருணாநிதி நாளை மறுநாள் தில்லி செல்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்பட சில கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை பெற்றுள்ள நிலையில், அடுத்து அமைக்கப்படும் அமைச்சரவை குறித்தும் அவர்களுடன் ஆலோசிப்பார் என தெரிகிறது

4 comments:

Eemali said...

எல்லாம் பதவிகளுக்காக மக்களுக்கு பணத்தால் அடித்து தானே வென்றார்கள் இனி அடுத்த 5 வருடம் கொள்ளையடிக்க பதவி வேணாமா அதுதான் ஈழத்தமிழருக்கு ஒரு துரும்பை கூட போடாத மனுசன் பதவி என்றவுடன் பறக்கின்றான்

இட்டாலி வடை said...

வாங்க Eemali !

நீங்கள் தமிழினம் க(ர்)க்கும் கலைஞரை இப்படி பகிரங்கமாக குற்றம் சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

கண்மணிகளுக்கு ப்ளொட் ப்ரஷர் ஏற்படுத்துவதை என்னால் அனுமதிக்க முடியாது..

ரங்குடு said...

உடன் பிறப்பே!
இலங்கைப் பிரச்சனைக்கு டெல்லி போனால் காசு வருமா?

அதனால் தான் தந்தி ஒன்றே போதும் என்று முடிவெடுத்து விட்டான் இந்த மறத்தமிழன்.

நான் டெல்லி சென்று பேசினால் தான் இலங்கை பிரச்சனை தீருமா? மந்திரத்தால் மாங்காய் விழுமா? இதையெல்லாம் பகுத்தறிவு படைத்த நீ யோசிக்க வேண்டாமா? அண்ணாவும், பெரியாரும் என்னை அப்படித்தான் வளர்த்தார்கள்.


மேலும் விமான செலவு தண்ட செலவு. என் உடல் நிலையும் மூன்று மணி நேர உண்ணாவிரதத்திற்கு மேல் தாங்காது என்று மருத்துவரும் (ராம தாசு அல்ல) சொல்லியிருக்கும் போது டெல்லி செல்வது நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை பயக்காது என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

சோனியாவின் கணவரின் உயிரைக் குடித்த ஈழப் பிரச்சனையை அங்கே கொண்டு செல்வது அரசியல் அநாகரீகம். (ஆனால், ராஜிவ் அனுப்பிய அமைதிப் படையினர் தமிழ்ப் பெண்களின் கற்பை சூறையாடியது மிகவும் நியாயம்.)

கழகத்தின் கண்மணிகள் 18 பேர் வெற்றிக்கனியை அம்மையாரிடமிருந்து தட்டிப் பறித்து
அண்ணாவின் காலடியில் சேர்த்திருக்கின்றனர். அவர்களுக்கு கைம்மாறு செய்ய வேண்டியது என் கடமை அன்றோ?

அதற்காகவே நான் டெல்லி செல்ல வேண்டிய காலத்தின் கட்டாயம் வந்து விட்டது.

வெற்றிக்கனியை அளித்த கழகக் கண்மணிகளுக்கு, 4 மூத்த மந்திரி பதவிகள், 8 இணை/துணை மந்திரி பதவிகள், 6 மத்திய வாரிய பதவிகள் பெற்று வருவது என் கடமை அன்றோ?

என் கண்மணி ஸ்டாலினுக்கு தமிழகத்தில் வழி காட்டியாயிற்று. மற்ற கண்மணிகள் கனிமொழி, அழகிரி இருவரையும் மத்தியில் கரை யேற்றி விட்டால், மீதிக் காலத்தை நிம்மதியாகக் கழிப்பான் இந்தக் கருணாநிதி.

வருகிறேன். நீ மட்டும், பெரியார் அண்ணா சொற்படி நடந்து, கழகத்தைக் கட்டிக் காப்பாய் என்ற மன உறுதியுடன் நில். அது போதும்.

ஈழம்? அது அடுத்த தேர்தல் வரை எண்ணப்பட வேண்டியதில்லை. நமக்கு ஆயிரம் கோடிகள் மதிப்புடைய பணிகள் காத்திருக்குக்ம் போது, ஈழம் ஒரு பணித் தடங்கல் என நினைத்து அதை ஒதுக்குவாய்.

அன்புடன்,
மு.க.

இட்டாலி வடை said...

வாங்க ரங்குடு!

//நான் டெல்லி சென்று பேசினால் தான் இலங்கை பிரச்சனை தீருமா? மந்திரத்தால் மாங்காய் விழுமா?//

நீங்கள் ஒண்ணரை மணிநேரம் உண்ணாவிரதமிருக்க போர் நிறுத்தம் ஏற்பட்டபோது.. ட்..ல்..லி.. வரை இம்மாந்தொலைவு போய் வரும் போது ஏன் இலங்கைப் பிரச்சினை தீராது?

//இதையெல்லாம் பகுத்தறிவு படைத்த நீ யோசிக்க வேண்டாமா? //

அண்ணாவும், பெரியாரும் சொல்லித்தந்ததைத்தான் நீங்கள் மழுங்கடிக்க வைத்து விட்டீர்களே..

//ராஜிவ் அனுப்பிய அமைதிப் படையினர் தமிழ்ப் பெண்களின் கற்பை சூறையாடியது //

அன்னை சோனியாவின் அடுப்படி நியாயம் ..அவர் கற்புத்தான் கற்பு மற்றவர்களினது எல்லாம் வெறும் சொப்பு

//கழகத்தின் கண்மணிகள் 18 பேர் வெற்றிக்கனியை அம்மையாரிடமிருந்து தட்டிப் பறித்து
அண்ணாவின் காலடியில் சேர்த்திருக்கின்றனர்.//

அம்மாவின் கனிகளையாவது விட்டு வைத்திருந்தால் சரிதான்..

//மற்ற கண்மணிகள் கனிமொழி, அழகிரி இருவரையும் மத்தியில் கரை யேற்றி விட்டால்//

மத்தியில் தான் கரை ஏற்றுவது... பெண்களுக்குத்தான் கரை ..ஆண்களுக்கும் அது கரை தானா?

இதிலெல்லாம் அவ்வளவு அறிவு பத்தாது... கொஞ்சம் விலக்கி..அடச்...சாய் விளக்கி விடுங்கள்..

//ஈழம்? அது அடுத்த தேர்தல் வரை எண்ணப்பட வேண்டியதில்லை//

எண்ணப்பட வேண்டியதில்லை.. குமரியைப் போல் அழிக்கப்பட்டது.. நயவஞ்சகத்தால்.. என்று சொல்லிக்கொடுக்கப்பட வேண்டியது..

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil