ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 16, 2009


இன்னும் சாதிப்பார் கலைஞர்


நடந்து முடிந்த தேர்தல் வெற்றி பற்றி கழகக் கண்மணிகள் எல்லாம் பட்டாசு கொழுத்தி பலானது பார்த்து டாஸ்மார்க் அடித்து ஏக அமர்க்களப் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் முடிந்த கையோடு டாஸ்மார்க் விற்பனை 30 கோடியைத் தாண்டிவிட்டது. வாக்குப் போட்ட களைப்புக்கே வேட்பாளர்கள் கொடுத்தது அவ்வளவு என்றால் வெற்றி பெற்ற பெருமிதத்திற்கு நாளை தெரிந்து விடும்.. ஒரு 50 கோடிக்காவது டாஸ்மார்க் அடித்து முடித்திருப்பான் தமிழ்க்குடிமகன்.

அத்தனையும் வேட்பாளப்பெருந்தகைகளின் கறுப்புப்பணம் என்று சொல்லியா தெரியவேண்டும். 5 வருடம் நாட்டையே குத்தகையில் கொடுத்த குடி மக்களுக்கு இதுவும் செய்யாது விட்டால் எப்படி?

கலைஞரைப்பார்த்து மாலை போட்டு போட்டோ பிடித்து வரப் போயிருக்கின்றார்கள் கழகக் கண்மணிப்பதிவாளர்கள். இனி அவர் செப்பியது, சிரித்தது , சொறிந்தது எல்லாம் ஒப்பிப்பார்கள்.

பந்தயம் கட்டுங்கள். செத்து விழுந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழன் பற்றி ஒரு வார்த்தை த்ன்னும் கலைஞரும் சொல்லியிருக்க மாட்டார் இவர்களும் சொல்ல மாட்டார்கள்.

ஆயிரம் இலட்சம் என்று எண்ணப்பட்ட வாக்குகளும் வெறும் எண்ணிக்கை தான் இந்தக்கணம் வரை இரத்தமும் தசையுமாக வாழ்ந்து சில நிமிடங்களின் முன் இறந்து போனவனின் எண்ணிக்கையும் வெறும் இலக்கம் தான்.

பக்கத்தில் சாவீடு நடந்தால் என்ன? சாதிச்சிட்டாரில்லே கலைஞர்..அதை எழுதிக்கிழிக்கவே பேனாவில் மை போதாது.

மனசு சாக்கடையாய் இருந்தால் என்ன? "கொக்கோ கோலா நிறம் கொட்டி விட்டா வார்த்தைகள் உலகத்தரம்" (நன்றி:உதய சூரியன்) அப்படிப்பட்டவர் பற்றி எழுதும் வார்த்தைகளை பரதேசிகளுக்கு எழுதி வரண்டு போகலாமா?

இதோ செய்தி வந்திருக்கின்றது சொர்ணமும் சசி மாஸ்டரும் கொலை செய்யப்பட்டு விட்டார்களாம்.

தம்பி தமிழ்ச்செல்வனின் அண்ணன்கள் இவர்கள்.. ஒரு கவிதையாவது எழுத வேண்டுமே..வெற்றிக்கிறக்கத்தில் மறந்திருப்பார் ..யாராவது ஞாபகப் படுத்தி விடுங்கள்.
கவிதை எழுதி கண்ணீரை ஆற்றிக்கொள்ளலாம்..


ஜெயலலிதாவும் இனி ஒன்றும் புடுங்க முடியாது. கருணாநிதி ஆட்சியைக் கலை என்று கூப்பாடு போட முடியாது. அவர் தானே தன் பின் பக்கத்தை தமிழீழம் என்ற ஆப்புக்குள் வகையாகச் சொருகி விட்டிருக்கின்றாரே....

இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த 50 பேரில மிஞ்சியிருந்த மூன்று பேரில் சொர்ணம் காலி. இன்னும் எஞ்சியிருப்பது பிரபாகரனும் பொட்டு அம்மானும் தானாம்.

அதுவும் எப்போது இடியாய் வந்து சேருமோ? சேர்த்துக் கொள்ளுங்கள் இதுவும் கலைஞரின் சாதனை தான்.. அதற்கும் சேர்த்தே பட்டாசு போடுங்கள். பலானது பாருங்கள்.. டாஸ்மார்க் அடித்து மப்பு ஏற்றி உச்சாணிக்கொப்பில் இருந்து ஆடுங்கள்.

இனி எதற்கு கறுப்புக் கண்ணாடி அது தான் அப்பட்டமாகத் தெரிகின்றதே....

3 comments:

Anonymous said...

sariyachchonninga. 3000 peru seththu kidakkirathu inthalukku sambavamam.

இட்டாலி வடை said...

வாங்க அனானிமஸ்!

//3000 peru seththu kidakkirathu inthalukku sambavamam.//

100 பேரைப் பெத்துப்போட்டா அது சாதனை என்பாரோ...அப்படின்னா அவர் சாதனையாளன் தான்..

Anonymous said...

கடும் கொலை வெறில இருப்பீங்க போல இருக்கே? அண்ணே, மக்களுக்காக மட்டும் அழுது இருந்தால் அவர்களை காப்பாத்தி இருக்கலாம். உங்களுக்கு என்னிக்கு அந்த 'பரதேசி'க மேல கவலை இருந்திச்சி? உங்களுக்கு அக்கறை எல்லாம் 'இயக்கம்' பத்தி தானே?

எதுக்கும் அனானியாவே கருத்து போடறேன்...இருக்கற வெறியில வீட்டுக்கு 'இயக்கத்தினரை' பொருளோட அனுப்பிட போறீங்க...நம்ம வீடு வேற கோடம்பாக்கம் பக்கம்....உங்களுக்கு 'பழக்கமான' ஏரியா தான்...!

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil