ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Saturday, May 9, 2009
ஒட்டுத் துணியையும் உருவும் இந்தியா
சிங்களவன் என்றால் சிங்கு என்று நினைத்து விட்டார் போலும் நம்ம"ரோபோ" மன்மோகன் சிங்கு. சிங்கள ராஜபக்ஸ சொல்ல வேண்டியதையெல்லாம் இவர் சொல்லித் திரிகின்றார். அதிலொன்று தான்"இலங்கைப் போரில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை" என்பதுவும் ஒன்று. ஐ.நாடுகள் "லீக்கி"விட்ட செய்மதிப் போட்டோக்களில் காணப்பட்ட பெரிய குழிகள் எல்லாம் எண்ணெய்க்கிணறு தோண்டிய பள்ளங்கள் என்று சொன்னாலும் சொல்லுவார்.
அடுத்தது ,"இலங்கையில் உள்ள அப்பாவி மக்கள் சுயமரியாதையுடன் வாழ வழி வகை செய்யப்படும்" ...அட நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்களே போராடி எடுத்துக் கொள்வார்கள். இது வரை போராடி எடுத்து வைத்திருந்த உரிமையோடு ஒட்டுத்துணியையும் சேர்த்தே சிங்களவன் கையில் கொடுத்து விட்டது இந்தியா.ஆறாத காயத்தை ஈழத்தமிழன் நெஞ்சினிலே ஏற்படுத்தி விட்டது இந்தியா. இனி எக்காலத்திலும் ஈழத்தமிழனுக்கும் இந்தியாவிற்கும் நட்பு ஏற்படப்போவதில்லை.
இன்று நாடில்லாது இருந்து விட்டால் என்ன? நாளை அகன்ற ஈழம் உருவாகாமலா போய்விடும்.
சுமரியாதை தெரியாதவர்கள் காங்கிரஸில் தான் அதிகம் இருக்கின்றார்களே. அவர்களுக்குப் பாடம் எடுக்கட்டும். தன் பாட்டனையே கேவலப்படுத்தியிருக்கின்றது இளங்கோவன் என்ற ஒன்று. பெற்றால்த் தான் பிள்ளையா? கூடப்பிறந்தால்தான் அண்ணனா? கலைஞர் கூட அண்ணாதுரையை அண்ணா என்று அண்ணனாக நினைத்துக் கூப்பிடுகின்றாரே? அப்போ அண்ணாதுரையின் அப்பா சிறுவயதில் செய்த தப்பிலா களைஞர் பிறந்தார்...அதனால் அண்ணாதுரை அண்ணன் ஆனார்.
கொள்கையால் கோட்பாட்டால் கூட வாரிசுகள் உருவாகலாம். பகுத்தறிவுப் பகலவன் பெரியார் எங்கே..அவர் கோவணங் கட்டாத ஒரு பொழுதில் பிறந்த வாரிசுவின் எச்சம் இது எங்கே?
தமிழனாய் உணர்வால் வாழும் சீமானைப்பற்றிய தரங்கெட்ட விமர்சனத்தை இது வைக்கின்றது. தமிழுக்காய் உயிர் துறந்த முத்துக்குமரை இது யார் என்று கேட்கின்றது. இதன் பெயரின் முன்னாலுள்ள ஈ.வி.கே இல்லையென்றால் இந்தக் "கேனை" யார் என்றே உலகிற்குத் தெரிந்திருக்காது.
"பாம்பையும் ----யும் கண்டால் யாரை அடிக்க வேண்டுமோ இல்லையோ முதலில் இந்தப் பல்லிகளை அடிக்க வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளந்தமிழர் இயக்கத்திற்கு நன்றி கூறுவோம். காங்கிரஸை ஓரங்கட்ட நமது ஓட்டைப் போடுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment