ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 3, 2009


செருப்பாபிஷேகம்


தமிழகத்தில் அரசியல் திருவிழா கனஜோராகக் களை கட்டிவிட்டிருக்கின்றது. மாறி மாறி அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளால் மக்கள் வயிற்றை நிறைத்துக்கொண்டிருக்கின்றார்கள். கலர் மாறி காட்சிகள் மாறி வாக்குறுதிகள் மாறி மக்களின் மூளைகள் கோஷங்களால் இரைந்து கொண்டிருக்கின்றது.

என்ன சொல்கின்றார்கள் என்ற விளக்கமும் இன்றி என்ன செய்வது என்ற ஞானமும் இன்றி மக்கள் தேமே என்று நொந்து போய்க்கிடக்கின்றார்கள். ஈழப்போராட்டம் என்ற பந்து ஆடுகளத்தில் அங்கும் இங்கும் அடித்து தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது ஈழத்துத் தமிழர்களைப்போலவே. அரசியல் சித்து விளையாட்டுக்களை கட்சிகள் நிகழ்த்திக்கொண்டிருக்க தம் சோதரர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்க ஆர்வங்கொண்ட பார்வையாளர்களும் ஆடு களத்தில் உள்நுழைந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த்த் தேர்தலில் சுவை கூட்டுபவர்களே இந்த பார்வையாள ஆட்டக்காரர்கள் தான். பொதுமக்கள், மாணவர்கள், வழ்க்கறிஞர்கள், திரைபடத்துறையினர்,பத்திரிகையாளர்கள் என்று ஒரு பட்டாளமே களமிறங்கியுள்ளது. அவரவர் தகுதி, திறமை, மூளை, உடற்பலங்களின் அளவில் கோதாவில் இறங்கியுள்ளார்கள்.

கழகங்களிலிருக்கும் ரெளடித் தொண்டர்களையும் காக்கி ரெள்டிகளையும் சமாளிக்க ஏற்கனவே கற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ரெள்டிகளையும் பொலீஸையும் போல தாங்கள் அடித்தாலும் இரத்தம் சிவப்பு நிறத்தில் வரும் என்பதைக் கண்டுகொண்டதால் மிகுந்த தெம்புடன் இருக்கின்றார்கள்.

பொது எதிரியான காங்கிரஸை ஒரு "கை" பார்ப்பதென்ற முடிவில் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். தமிழகத்தில் வரும் 13 ஆந்திகதி தேர்தல் நடப்பதால் ஏனைய கட்சிகளைப்போலவே காங்கிரஸின் பெருந்தலைகளும் பிரச்சினையைக் கிளப்ப தெற்கே வர இருப்பதாகத் தெரிகின்றது.

இதனால் உசாரடைந்திருக்கும் நம் பார்வையாள ஆட்டக்காரர்கள் செருப்புக் கடைகளை முற்றுகையிட்டு செருப்புக்களைக் கொள்வனவு செய்வதாக அறியப்படுகின்றது. காங்கிரஸ் தலைகளுக்கு செருப்பாபிஷேகம் மிகவும் பிடித்த பூஜை முறை என்பதை காங்கிரஸ் கால்பிடியான"பசி"தம்பரம் ஏற்கனவே நிரூபித்திருப்பதாக அறியப்படுகின்றது. காங்கிரஸின் எடுபிடிக்கட்சியாக இணைந்திருக்கும் தி.மு.க வின் தலைகளும் மேடையில் தோன்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் ஏற்பட்ட பயத்தில் அதீதக் காச்சலைக் காரணம் காட்டி ஆஸ்பத்திரியில் ஒதுங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

உள்ளூர்க் காங்கிரஸ்காரர்கள் எத்தனை வாய்ச்சவடால் விட்டாலும் பெரும்புதூர்க்கனவு ஒன்று வந்து மிரட்டுவதாகவும் அன்று ஓடியொழிய காரணங்களைத் தேடுவதாகவும் அறியப்படுகின்றது. அதுவே தி.மு.க தலையின் காச்சலுக்கும் காரணம் என்று அறியப்பட்டதால் தேர்தல் வரை அல்லது வடக்கிருந்து வரும் காங்கிரஸ் புயல் தமிழ் நாட்டுக்கரையைக் கடக்கும் வரையாவது தன் காச்சலை நீட்ட உத்தேசித்திருப்பதாகவும் நெருங்கியவட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

நடுச்சாமத்தில் வெள்ளை ஜிப்பா போட்ட ஆவியொன்று "இங்கே வராதே இங்கே வராதே.." என்று அலறிக்கொண்டே ஓடுவதாகவும் முண்டமில்லாத தலையொன்று அதனைத் துரத்திச் செல்லுவதாகவும் பெரும்புதூர் மக்கள் பீதியில் உறைந்து போயிருப்பதாகவும் வதந்தியொன்று பரவியிருக்கின்றது.

திடீர் "தமிழீழ" ஹோட்டலில் என்றுமில்லாத உற்சாகம் பீறிட்டுக்கிளம்பியிருப்பதாக அறியப்படுகின்றது. இத்திடீர் வர்த்தக முன்னேற்றத்தை பயன் படுத்தி டெல்லிவரை கொடியை சாரி ஹோட்டலை விரிவாக்கத் திட்டங்கள் போடப்படுவதாக அறியப்படுகின்றது. திடீர் முன்னேற்றத்தால் உற்சாகமடைந்த ஹோட்டலின் பங்காளிக்கட்சிகள் பெறவேண்டிய பங்கெண்ணிக்கைகளை சில விரல் கணக்குகளால் கூட்டும் உத்தேசத்துடன் இருக்கின்றார்கள்.

திடீர்க் ஹோட்டலின் அதிரடி வியாபாரத்தால் ஆடிப்போன சிறு கட்சிகள் டிப்பாசிட்டையாவது காப்பாற்றித் தருமாறு சாமி வித்தியாசமின்றி சில பல வேண்டுதல்களில் உருகித் தவிப்பதாக அறியப்படுகின்றது.

வரும் 13 ஆந்திகதி வரை மன்னருக்குரிய மரியாதைகள் கிடைகுமென்று கிளி யோசியர் சொன்னதால் மக்களெல்லாம் மகிழ்ச்சியில் திளைக்கின்றார்கள். கிடைத்தவரை லாபம் என்ற கணக்கில் எல்லாக் கட்சிகளுக்கும் அமோக வரவேற்புக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

திருவிழாவின் இறுதியில் சில லாபங்களும் பல நட்டங்களும் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்குமென்றும் மக்கள் வழமையான தரித்திர வாழ்க்கைக்கு மாறியிருப்பார்கள் என்றும் காலநில அவதானிப்பு நிலையம் கூறியிருக்கின்றது.

3 comments:

பதி said...

//கழகங்களிலிருக்கும் ரெளடித் தொண்டர்களையும் காக்கி ரெள்டிகளையும் சமாளிக்க ஏற்கனவே கற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ரெள்டிகளையும் பொலீஸையும் போல தாங்கள் அடித்தாலும் இரத்தம் சிவப்பு நிறத்தில் வரும் என்பதைக் கண்டுகொண்டதால் மிகுந்த தெம்புடன் இருக்கின்றார்கள்.//

இதை இன்னமும் சரியான முறையில் புரிந்து கொள்ளவில்லை என நான் நினைக்கின்றேன்... அப்படி இருப்பின், ரவுடிகளும் பொறுக்கிகளும் அதன் தலைமைகளும் அஞ்சாநெஞ்சன் என வெட்கமில்லாமல் திரிய மாட்டார்கள்...

//நடுச்சாமத்தில் வெள்ளை ஜிப்பா போட்ட ஆவியொன்று "இங்கே வராதே இங்கே வராதே.." என்று அலறிக்கொண்டே ஓடுவதாகவும் முண்டமில்லாத தலையொன்று அதனைத் துரத்திச் செல்லுவதாகவும் பெரும்புதூர் மக்கள் பீதியில் உறைந்து போயிருப்பதாகவும் வதந்தியொன்று பரவியிருக்கின்றது.//

இது போன்ற "பயம்" மட்டுமே இந்த லும்பன்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும்....

//திடீர் "தமிழீழ" ஹோட்டலில் என்றுமில்லாத உற்சாகம் பீறிட்டுக்கிளம்பியிருப்பதாக அறியப்படுகின்றது.//

இது காலக் கொடுமை... வேறு என்ன சொல்ல?

//திருவிழாவின் இறுதியில் சில லாபங்களும் பல நட்டங்களும் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்குமென்றும் மக்கள் வழமையான தரித்திர வாழ்க்கைக்கு மாறியிருப்பார்கள் என்றும் காலநில அவதானிப்பு நிலையம் கூறியிருக்கின்றது.//

இதை கடந்த 60 வருட பழைய ஆவணங்களைப் பார்த்தே சொல்லலாமே??? இதற்கு எதற்கு காலநில அவதனிப்பு?

இட்டாலி வடை said...

வாங்க பதி !

//திருவிழாவின் இறுதியில் சில லாபங்களும் பல நட்டங்களும் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்குமென்றும் மக்கள் வழமையான தரித்திர வாழ்க்கைக்கு மாறியிருப்பார்கள் என்றும் காலநில அவதானிப்பு நிலையம் கூறியிருக்கின்றது.//

இதை கடந்த 60 வருட பழைய ஆவணங்களைப் பார்த்தே சொல்லலாமே??? இதற்கு எதற்கு காலநில அவதனிப்பு?

நமக்கு தெரிஞ்சிருக்கு ..அவங்களுக்கு புரியல்லியே...
டெபாஸிட் போனாலும் பரவாயில்லேன்னு முட்டி மோதிக்கிறாங்களே..

எத்தனை புது முகங்கள் இந்தத் தேர்தலில..

பதி said...

//நமக்கு தெரிஞ்சிருக்கு ..அவங்களுக்கு புரியல்லியே...
டெபாஸிட் போனாலும் பரவாயில்லேன்னு முட்டி மோதிக்கிறாங்களே..

எத்தனை புது முகங்கள் இந்தத் தேர்தலில..//

அய்யோ...

நான் சொன்னது //மக்கள் வழமையான தரித்திர வாழ்க்கைக்கு மாறியிருப்பார்கள்// என்பதைப் பற்றி... :((((

அரசியல் வியாதிகளைப் பற்றி நமக்கென்ன கவலை??

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil