ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 31, 2009


கோழைகளின் குழப்பம்


புலம் பெயர்ந்த தமிழர்களின் போக்கு பிடிபடாத விசித்திரப்போக்குடன் நிகழுகின்றது.தமிழ்த்தேசியம் பற்றிய உறுதியுடன் செயற்பட வேண்டிய இவ்வேளையில் விசித்திரக் கோமாளித்தனத்துடன் இயங்குதலும் முடியும் என்று சிலர் பறைசாற்றுகின்றார்கள்.

பிரான்சில் உணர்வு எழுச்சியுடன் நடைபெற்ற 'புதிதாய் பிறப்போம்'



இந்த வாரம் பல்வேறு காரணங்களுக்காக மூன்று மேற்கு நாடுகளின் தெருக்களில் தமிழர்கள் இறங்கியிருந்தனர். மூன்றிலும் கலந்து கொண்டவர்களின் தோற்றங்கள் நிறங்களில்த் தான் மாற்றம். இப்படிப்பட்ட மனநிலைக் குழப்பவாதிகளான ஏற்பாட்டாளர்களைக் கண்டிக்கின்றேன்.
மக்களை ஒரே மனநிலையில் வழி நடத்தக் கூடியவர்கள் வெளிவாருங்கள். அப்படியில்லாதவர்கள் உங்கள் வீட்டுக் கடமைகளுடன் குப்பை கொட்டிக்கொள்ளுங்கள்.

இதுவரை காலமும் பட்டொளி வீசிப் பறந்த புலிக்கொடி கனடியத் தமிழர்கள் நிகழ்த்திய போராட்டத்தில் மிஸ்ஸிங்। பச்சோந்திகள்... நீங்கள் கனடியனாய் இருங்கள் இல்லை கடவுளாகவே இருங்கள் ஆனால் தமிழராய் இருக்க மறந்து விடாதீர்கள்। ஒவ்வொரு

நோர்வே: சிறிலங்காவின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்த உடலப்பேழை பேரணி

மனிதரும் தம் தேசியக் கொடியின் கீழேயே ஒன்று திரளுக்கின்றான்। புலிகளின் கொடியே தமிழீழத் தேசியக் கொடியென இது நாள் வரை உங்களால் தூக்கிப் பிடிக்கப்பட்டது।

இப்போது ஏன் அது இல்லாது போய் விட்டது. புலிகள் இருந்தாலும் இல்லாது விட்டாலும் அதுவே எங்களுக்கு அடையாளமாகப் போய் விட்டது. சிவப்பு மஞ்சள் புலிக்கொடியைப் பார்த்தால் "தமிழ்" என்று சொல்லும் அளவிற்கு மற்றைய இனத்தவர்களுக்கிடையே அடையாளம் இருந்தது. புலிகளைத் தடை செய்த தேசம் தான் பிரித்தானியாவும் கனடாவைப் போல.கொடியைத் தடை செய்ததல்ல. இது எங்கள் இனத்தின் கொடி..அதைச் சுமப்பதில் தடையில்லை.

அப்படியும் புலிகளின் கொடியை தமிழர் தேசியத்தின் கொடியாகக் கொள்வதில் மனத்தடை ஏதாவது இருக்குமானால் பொதுவான கொடியொன்று உடனும் அவசியமும் உருவாக்கப் படவேண்fடும். என்னைப் பொறுத்தளவில் புலிக்கொடியைச் சுமப்பதில் எந்தத் தடையும் இல்லை. காரணம் எங்கள் வரலாற்றின் ஒரு பகுதி அது.புலிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களின் காலமும் எங்களின் வரலாற்றின் ஒரு பகுதி. அதை அழித்தோ அடித்தோ எழுத முடியாது.புலிகளை நல்லவர்களாகப் பார்ப்பீர்களோ கெட்டவர்களாகப் பார்ப்பீர்களோ, நல்லதையும் கெட்டதையும் சேர்த்தே பார்வைக்கு வைப்பது தான் வரலாறு.

வரலாற்றைத் திருப்பி எழுத முடியாது। பச்சோந்தியாகும் உங்கள் வரலாற்றையும் தான்.

சிங்கள இனவெறியர்களின் ஆர்ப்பாட்டத்தினை கண்டித்து கனடாவில் தமிழ்ப்பச்சோந்திகளின் ஆர்ப்பாட்டம்

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil