ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 30, 2009


படம் காட்டல்


பச்சை விரித்து மதர்த்து வளர்ந்திருந்த மரங்களைப் பார்க்குந்தோறும் ஆச்சரியம் எனக்குள் நீண்டு நிழல் விரிக்கின்றது. எத்தனை காலம் இருந்ததோ இன்னும் எத்தனை காலம் தொடருமோ? என்னையும் என் ஆயுளையும் கடந்து அதன் நிழல் இந்த நிலமெங்கும் படர்ந்திருக்கும். ஒவ்வொரு குளிருக்கும் உடல் ஒடுக்கி சமரில் விஸ்வரூபம் எடுக்கையில் ஆச்சரியம் கூடிச் செல்கின்றது.

ஒரு உயிரினமும் இல்லாத கடுமையான நாட்களைத் தவமெனக் கடந்து வந்தபின் தோன்றும் பெருங் குதூகலத்தையும் பார்க்கின்றேன். அப்படித்தான் இன்று என் மக்கள் கூட வரும் துணையின்றி தனி மரமாக் துவண்டு போயிருக்கின்றார்கள்.

"அற்ற நீர்ப் பறவைகள் போல் வற்றியிருக்குமாம் குளம்.."

இத்தனை அடி பெருத்த மரங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்கள் ..குண்டுகளில் இருந்து தப்பிக் கொள்ளும் மார்க்கம் கிடைத்ததென்று ஆசுவாசம் பட்டிருப்பார்கள். இன்று அவர்கள் இல்லையென்றாலும் அந்த மரங்கள் தன்னைக் கடந்து போனவர்களைத் தேடியிருக்கக் கூடும். அல்லது தன் காலடியில் எருவாகிப் போனவர்களுக்காக கலங்கியிருக்கக் கூடும்.

20,000 மக்களைக் குறைந்தளவு ஐ.நாடுகள் கணிப்புப்படி ...இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களின் கதறல் அந்த வெளிகளில் உறைந்து போயிருக்கின்றதோ...

அப்படிப்பட்ட தேடல்களுடன் அல்லது கலங்கல்களுடன் புலம்பெயர்ந்த மக்கள்.... அடுத்து என்ன என்ற கைபிசைதலுடன். அதே கை பிசைதலுடன் டி.ஜே.தமிழனின் படங்காட்டல் அல்லது பயமுறுத்தல்.. நெருடிக்கொண்டிருக்கின்றது. பயங்காட்டல் இல்லையென்றாலும் படங்காட்டல் இல்லையென்றால் ...நீங்கள் அல்லது உங்களைப் போன்றவர்களுடன் சேர்ந்தே தொடங்கலாம்.

படங்காட்ட பி.எச்.டி படித்திருக்க வேண்டுமென்று அக்பர் நாமாவிலும் எழுதப்படவில்லை. அதுதான் கொஞ்சம் வில்லங்கமான தீன் -இலாஹி போன்ற விடயங்களைப் புகுத்த வெளிக்கிட்டது.

தலைவர்கள் உருவாகுவதில்லை. தானே உருவாகின்றார்கள். இல்லாவிட்டால் திருக்குவளை போய் அண்ணாவும் பெரியாரும் உருவாக்கிவிட்ட களி மண்பானையா? க.க.க.க.க (விளக்கம் சொல்லிச் சொல்லியே களைத்து விட்டது)என்று நினைக்கின்றீர்கள். இப்போது பார்த்தால் அப்படி இருந்திருந்தாலும் தேவலாம் என்று படுகின்றது.

அப்படியே உயிருடன் இருந்திருந்தாலும் இன்றைய டில்லி காவடி பார்த்து மறுமுறை இறந்து போயிருப்பார்கள்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil