ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 24, 2009


சுருதி மாறும் புலியெதிர்ப்புக் கோஷங்கள்


இன்று ஈழப்போராட்டத்தில் புலிகளின் தோல்வி ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதற்கான பல காரணங்களை வரிசைப்படுத்த முடிகின்ற அனுபவம் அவர்களுக்கு வாய்த்திருக்கின்றது. அவர்களின் எதிர் வரிசையில் நின்று இதே ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி பேசிக்கொண்டிருந்த டோலர்களினதும் உதிரிக்குழுக்களினதும் சுருதி பேதம் இப்போது மாறத்தொடங்கி விட்டது.

இதுவரை இவர்களால் காட்டமாக முன்வைக்கப்பட்டு வந்த புலிப்பாசிஸம் என்ற முத்தாய்ப்பு கவனமாகத் தவிர்க்கப்பட்டு புலித்தலைமையைக் கொன்ற "வெளிநாட்டுப் புலித் தலைமை ? " என்ற புது அணுகு முறை தெரிந்தெடுக்கப் பட்டிருக்கின்றது. இப்புதிய அணுகு முறைக்கான காரணங்களாக இரண்டு விடயங்களைக் கொள்ளலாம்.

1) எதிர்ப்பு அரசியல் மட்டுமே தெரிந்த பழக்கப்பட்டுப்போன மந்தைத்தனம். இப்படியான அரசியலிலேயே காலத்தைக்கடத்தும் கையாலாகாத்தனம். வெற்று அறிக்கை வீரர்களாகவே கடைசி வரை இருந்து விடுவதுடன் இவர்கள் மறைந்து போய் விடுவார்கள்.

2) புலிகளின் மீது தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் நம்பிக்கையீனத்தை தங்களை முன்னிறுத்தி மாற்றீடு செய்வதும் எஞ்சியிருக்கும் புலி ஆதரவாளர்களை மக்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிப்பதுவும்.

"வெளிநாட்டுப் புலித் தலைமை?யின்சதிகள் " எனும் வார்த்தைப்பிரயோகங்களின் மூலம் புலித்தலைமையின் விசுவாசிகளை இலகுவாக உதிரிகளான வெளி நாட்டுப் புலிகள் மீது திருப்பி எதிர்ப்பு அரசியலைச் சாத்தியமாக்குவது.அண்மையில் புலிகளின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் செல்வராஜா பத்மநாதன் ஆயுதமற்ற அமைதி அரசியல் வழியில் புலிகளின் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார். யாழ் மாவட்ட படைத்துறைப் பொறுப்பாளர் வெற்றிக்குமரன் என்ற பெயரில் " போராட்டம் முடிந்து விடவில்லை. புலித்தலைமையின் ஆணைக்காகக் காத்திருக்கின்றோம்" என்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஆக புலிகளின் போராட்டம் தொடரக் கூடிய சாத்தியங்களை இனங்கண்டு அவற்றை மழுங்கடிக்க தங்களை ஆயத்தம் செய்து கொள்வதாகவும் கொள்ளலாம்.

இந்த இரண்டு வித முனைப்புகளில் நம்பிக்கை கொண்டு செயற்படும் இவர்கள் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளமறந்து விடுகின்றார்கள்.தமிழீழ சுதந்திரத்தைத் தணியாத தாகமாகக் கொண்டிருக்கும் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய நேரம் இது.

இந்தச் சந்தர்ப்பத்தில் போராட்டத்தைத் தொடர முற்படும் புலிகளோ அல்லது அவர்களை மாற்றீடு செய்ய முயலும் எதிர் அரசியல் சக்திகளோ ஈழப்போராட்டத்தை வென்றெடுக்க இணைந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வரலாறு கற்பித்துத் தந்திருப்பதை மறந்து விடக்கூடாது.

உங்களின் குரல்கள் பிரிந்தெழுந்து அழிந்து போவதை விட சேர்ந்தெழுந்து ஒலிப்பதையே மக்கள் விரும்புகின்றனர். மக்களை விலக்கிய போராட்டத்தின் வீழ்ச்சியைக் காலம் நமக்கு காட்டியிருக்கின்றது.

இன்னும் காலம் கடந்து விடவில்லை. தமிழ் மக்களின் குரலாக ஒலிக்க விரும்புபவர்கள் இதை உணர்வார்களா?

2 comments:

உண்மை முகம் said...

இது எதை குறிக்கிறது ? இது 18 ஆம் திகதி காலையில் எடுக்கப்பட்ட காணொளி. இதனைத்தான் இலங்கை அரசாங்கம் வெளியிட்டது சத்தமில்லாமல்.
ஆனால் இதனைப்பார்க்கும்போது விளங்குகிறது அப்போதுதான் கொன்றிருக்கிறார்கள்.
யார் இது ? ஏன் ? எப்படி ? என்ன நடந்தது ?
இதற்கும் விளக்கம் சொல்வாரா பத்மநாதன் ?
http://unmaimukam.blogspot.com/2009/05/blog-post_24.html

Anonymous said...

பிரபாகரன் மரணம் ஒரு துன்பியல் நிகழ்வு

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil