
வன்னிச்செய்திகள் துயரத்தைச் சுமந்து வருகின்றன.காற்றும் மரங்களும் கூட ஆட மறந்து உறைந்து போயிருக்கின்றன. நேசத்திற்குரியவர்களை நெஞ்சில் சுமந்த எமக்கு எப்படியிருக்கும்?
ஆனாலும் இந்த நாள் வந்திருக்காதிருக்கக் கூடாதா என்று தான் மனம் ஏங்குகின்றது.
எம் சுதந்திர வேட்கை ஒரு கணம் சுணங்கி நிற்கின்றது. பூமிக்கும் வீட்டுக்கும் பாரமாய் முதிர் கிழடுகளாய் பலர் இழுத்துக்கொண்டிருக்கும் இங்கே உறுதிக்கும் உயர்வுக்கும் சாட்சியாயிருந்த இவர்களின் இழப்பு துயரந்தோய்ந்ததுதான். இந்தக் கணத்தில் நாம் புதிதாய் ஒரு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அழுது நிற்பதாலோ அரற்றிக் கிடப்பதாலோ எம் தலைவன் மனது மகிழ்ந்து போய் விடாது. அவன் பாதையைத் தொடரும் உரம் வேண்டும். எம்மைத் தோற்கடித்த எதிரிகளை அறிந்து கொள்ள வேண்டும். ஏகாதிபத்தியத் திமிர் பிடித்த இந்தியா முதலாளித்த மமதை கொண்ட மேற்கு நாடுகள் அனைத்தும் கை கோர்த்துக் கொண்டதை நாம் தெளிந்து கொள்ள வேண்டும்.
இவர்களை எதிர்க்க எம் மக்கள் பலமனைத்தும் ஒன்றாகத் திரண்டெழ வேண்டும். புலிகளின் போராட்டம் பொய்த்துப் போனதன் காரணம் ஏன் என்பதை அறிந்து அதனைச் செப்பனிட வேண்டும்.ஒரு வியற்நாம் வெல்ல முடிந்ததென்றால் ஒரு கியூபா அசர வைத்ததென்றால் ஒரு திமோர் உதிக்க முடிந்ததென்றால் ஈழமும் மலர்ந்தே தீரும்.
வரலாறு தவறுகளிலிருந்தே பாடங் கற்றுக் கொள்கின்றது. மக்கள் எழுச்சிகள் தான் வரலாற்றையே உருவாக்குகின்றது. அப்படியிருக்க நாம் ஏன் அழ வேண்டும். இன்று எம்மை அழவைத்தவர்கள் கதறி ஓடும் காலம் ஒன்று வரும். இனியும் வேற்றுமைகளில் பிரிந்திருக்காது புதிதாய்ச் சிந்திப்போம்.
"நம்புங்கள் தமிழீழம் நாளை மலர்ந்திடும்"
7 comments:
இப்படியெல்லாம் தோன்றினாலும் மனம் ஒரு நிலை கொள்ள மறுக்கின்றது.
:'(
excellent
இருப்பது ஒரு வாழ்க்கைக்காலம் தான்..அதை மீறி ஒன்றும் இல்லை...
நம் தலைவன் வாழ்ந்தான்..பலர் இங்கு சுமக்கின்றார்கள்...
சுதந்திர வேட்கை மிக்கவனால் தான் வாழமுடியும்... கோழைகள் சுமக்கின்றார்கள்..
இனி இலங்கை மக்களின் வாழ்வு நிம்மதியாக இருக்கும்.. நாடு பொருளாதார பாதையில் முன்னேறும்........தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள்...
வாருங்கள் அனானி!
//.தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள்...//
நீங்கள் எந்த லோகத்தில் இருக்கின்றீர்கள்.இது எல்லாம் சாத்தியப்படாது 58 இல் 77இல் 83இல் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதன் தொடர்ச்சி தானே இது...எப்படி உங்களால் பழையதை இவ்வளவு இலகுவில் மறக்க முடிகின்றது.
உண்மையிலேயே சொல்லுங்கள்.. ஈழத்தமிழர் சரித்திரம் உங்களுக்குத் தெரியுமா?
அப்புறம் ஏன் இப்படியெல்லாம்...
sariththiram mudivathillai
ஆறுதலுக்கு நன்றி நண்பா
Post a Comment