ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, May 26, 2009


சோதா இந்தியாவும் தாதா இஸ்ரேலும்


நடக்குமென்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்து விடும். பல விடயங்கல் வாழ்க்கையில் இப்படித்தான் ஆச்சரியம் ஏற்படுத்துகின்றன.எதிர்பாராத இடங்களிலிருந்தும் உதவிகள் வந்து கொட்டும். ஈழத்தில் சிங்களப் பேயாட்சி கட்டவிழ்த்து விட்டிருந்த இனப்படுகொலை அராஜகமானது அநீதியானது என்பதை அனைவரும் ஏர்றுக்கொள்ளத் தொடங்கி விட்டனர். அத்தனை தூரம் அந்தக் கொடுமைகள் மூடி மறைக்க முடியாதளவு விசுவரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கின்றது.

21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப்படுகொலையாக இது நிகழ்ந்து முடிந்திருக்கின்றது. எத்தனையோ தடைகளையும் மீறி பிரித்தானியாவினதும் டென்மார்க்கினதும் பெரு முயற்சியில் சிங்களச் சிறிலங்காவிற்கு எதிரான விவாதம் ஐ.நாடுகள் மனித உரிமைச் சபையில் இன்று நடக்கின்றது.

17 நாடுகளின் ஆதரவை பல முயற்சிகளின் பின்னர் டென்மார்க் வென்றெடுத்திருக்கின்றது. இதில் மாக்ஸிஸ பேராளர்களோ அகிம்சாவாதிகளோ இப்படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்பது தான் ஆச்சரியமானது. அதுவுமல்லாது படுகொலைகளைப்புரிந்த பேயாட்சியைக் காப்பாற்ற முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.

அகிம்சையின் தேசம் அண்ணன் இந்தியா தன் எதிரிகளான சீனா,பாகிஸ்தான் போன்றவற்றுடன் கைகோர்த்து பாசிச சிங்களப் பேயரசை கட்டிக்காக்க முன்னிற்பது உலகத்தின் ஒன்பதாவது அதிசயம்.

அகிம்சை தேசம் உலகின் பெரிய ஜனநாயக(?) நாடு ...தன் உண்மை முகத்தைத் தோலுரித்திருக்கின்றது. அந்தச் சாதனையைச் செத்தும் செய்திருக்கின்றார்கள் ஈழத்தமிழ் மக்கள். இந்தியா, பாகிஸ்தான், ரஸ்யா, சீனா, கியூபா, எகிப்து, சவூதி அரேபியா, நிக்கரகுவா, பொலிவியா என்றவாறு இந்த ஓநாய்கள் கூட்டம் சிங்கள வெறிநாய் அரசை பாதுகாக்க சுர்றி நின்று ஊளையிடுகின்றன.

இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க மனித நேயத்தைக் காக்கும் எந்தவொரு உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகளும் முன்வரவில்லை.

ஆனால் யாராலும் இதுவரை ரசிக்கப்படாத ஒரு நாடு முன்வந்திருக்கின்றது. அது தான் இஸ்ரேல்.


//சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும். அதற்கான குழுவினரை அவர்கள் அனுப்ப வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை சிறிலங்காவுக்கு வழங்குவதை எதிர்த்துள்ள இஸ்ரேல், சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்// எனக் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

மனித உரிமைகளை அதிகம் மதிக்காத இஸ்ரேலின் இதயத்தையே நொருக்கி நெகிழ்வடையச் செய்த இக்கோரக் கொலைகள் சமதர்மக் காப்பாளர்களையும் அகிம்சையின் முகமூடிகளையும்
மனம் நெகிழ்ந்தே கொடுக்கச் செய்யவில்லை.

இன்னும் சொல்லிக்கொள்வோம் உலகின் பெரிய ஜனநாயகம், மனித குலத்தை மீட்க வந்த மாக்ஸிஸம் என்று. காட்டு மிராண்டிகள் கூட இவ்வளவு தன் மனித இனத்தைக் கொண்டு போட்டிருக்க மாட்டார்கள். ஆனால் நாகரீக வேஷம் போட்ட நாங்கள் இதுவும் செய்வோம் இதற்கு மேலும் செய்வோம்.

14 comments:

ஜுர்கேன் க்ருகேர்..... said...

good article.

Anonymous said...

The killings Isarel has been doing is far more than what srilankan govt has done...

Anonymous said...

இலங்கை தமிழர் பகுதியில் குண்டுகளை வீசுவதற்கு பயன்படுத்தியது இஸ்ரேலின் கிஃபிர் ரக விமானங்கள் மேலும் இஸ்ரேலிடம் வாங்கிய சில ரசாயண குண்டுகளை பயன்படுத்தியதாகவும் செய்திகளில் வந்துள்ளது. இந்தியாவை எதிர்ப்பதற்காக யாரை ஆதரிப்பது என்று கூட தெரியாத முட்டாளாக இருக்கிறீர்கள், இந்தியாவை பற்றி பேச அகதி நாய்களுக்கு என்ன அருகதை இருக்கிறது, தூ நாய்களா

இட்டாலி வடை said...

வாருங்கள் ஜூர்கேன் க்ருகோ !
நன்றி

இட்டாலி வடை said...

வாருங்கள் அனானி!
இந்தியா தமிழனைக் கொல்லும் போது..இந்தியாவை தட்டிக்கேட்கக் கூடாது என்று இருக்கின்றதா?

இஸ்ரேலினதைப் போலவே இந்தியாவின் குண்டுகளும் தான் தமிழனைக் கொன்று போட்டது.. இல்லையென்று சொல்கின்றீர்களா?

ஏன் இந்தியாவைத் தூக்கிப் பிடிக்க வேண்டும்..இஸ்ரேலை தூக்கிப் பிடிக்கக் கூடாது.. மனச்சாட்சியுடன் கூடிய நல்ல காரணத்தைச் சொல்லுங்கள்...

கருத்தை நல்ல வார்த்தைகளில் சொல்லுங்கள்.. இல்லாவிட்டால் இனி அனுமதி கிடையாது..

ttpian said...

i will never back up India:it is always tefflon coated-never joins with tamil community

Anonymous said...

Thangal Thagaval Unmaiyaanaal Kooda irunthu Kuli Parikkum Throgi Indiayavai vida Ulagamae ethirkkum virothi Israel ai Nambalaam.

pinnoottam said...

சந்தர்ப்ப வாத அரசியல் எனபது போல இதுவும் ஒரு சந்தர்ப்ப வாதமே.இனப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுப்பது போல நடித்து உங்களின் உள்ளங்களில் இஸ்ரேல் குடிகொள்ள போடும் திட்டம் தான் இது.உதாரணமாக ஒரு நாடு அங்கீகாரம் பெற வேண்டுமானால் அந்நாட்டு மக்களின் அங்கீகாரம் வேண்டும் அது போல தான் இதுவும் இனப் படு கொலைக்கு எதிராக இவர்களெல்லாம் கருத்து சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது.மேலதிகமாக இஸ்ரேலின் இனப் படுகொலை பற்றிய ஒரு ஆபரேசன் கெசட் லீட் சம்பந்தமாக ஐநா வின் உத்தரவையும் மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்த இஸ்ரேலின் இத்தகைய ஒரு கருத்து குடிகாரனின் உளறலுக்கு சமமானது ஆகும்.

கலையரசன் said...

அனானி ...ாயே! எங்களுக்காவது அகதி என பெயர் இருக்குது, உனக்கு அதுக்கூட இல்லயேடா.. றம்போக்கு ...ன்னி! கருத்து சொல்றதுன்னா அட்ரசோட சொல்லு, இல்லனா அடிபட்டு சாவ!

nirmala said...

Israel is best country. This is the best oppurtunity for our Tamils to know them. Jews and Tamils are alike. We all think Israel is violating human rights. Its the other way round. Jews are the once persecuted repeatedly for their brilliance all over the world. The way Tamil are hated. Support Israel Tamils! Our history, our dedication, our love for God, everything is similar to Jews. Maybe we are one lost tribe of Israel!

Anonymous said...

fuck india.

Anonymous said...

I AM TAMILIAN ONLY, NOT INDIAN!

அருண்மொழி said...

அயோத்தி ராமர் கோயில் பற்றி பா.ராகவன் என்ன கூறுகிறார்

http://arunmozhi985.blogspot.com/2009/05/blog-post_27.html

Anonymous said...

நண்பா,
தன் கணவனை கொன்றவர்களை அன்னை சோனியா காந்தி பலி வாங்கினால் இது பிரபாகரன் இர்றந்தது.
எங்கே தன்னுடைய ஒரே பிரச்சன்னை அற்ற எல்லையான தெற்கு எல்லையும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நண்பனகிவிடோமோ என்ற பயம் இந்தியாவுக்கு.
அதனால் தான் அவர்களுக்கு முன்னால் இந்திய ஓடிவந்து உதவிகள் செய்கிறது
இது விதி. தன் மரபு வழி மக்களை தன் குண்டுகளாலே கொல்லும் விதி
தமிழ் மக்களுக்கு சம urimai மற்றும் illangaiin உள் கட்டமைப்பு ஆகிய வற்றை இந்திய செய்யும் என்று நபுவோமாக

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil