ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, May 7, 2009


முகர்ஜிக்கு மூன்று காலா?


யார் இந்த முகர்ஜி? தமிழன் பிரச்சினையின் தலைவிதியை யார் முகர்ஜியின் கையில் கொடுத்தது. பிரபாகரனை நாடுகடத்தி வங்காளிக் களி கொடுக்க விழையும் இந்த வள்ளல் யார்?
இந்த நொண்டிக்காங்கிரஸுக்கு முண்டுகொடுப்பது முண்டாசுக்கவிஞன் அல்ல. மு.க ..திருக்குவளை பெற்றெடுத்த தெருக்குவளை.

ஜேசுதாஸ் திருக்கோவிலே ஓடிவா என்பதற்குப் பதிலாக தெருக்கோவிலே ஓடிவா என்று பாடினார். ஆனால் இந்த தெருக்குவளை.. இத்தனை நைச்சியத்தின் பின்னாலும் அடைய விரும்புவது என்ன? வெட்கம் கெட்டவன் சொல்லி விட்டான் முகம்மறைக்கும் கருப்புக்கண்ணாடி போடும் காட்டான் கருணாநிதி தேவையில்லை... தேவதையின் தேவதை செயல் லலிதா தான் வேண்டுமென்று...

இப்போது என்ன செய்வது..மம்மி சொன்னாலும் மகன் கேட்கின்றான் இல்லை... அப்பாவின் ரசனை தப்பாது பிள்ளைக்கும் வந்திருக்கின்றது. வயசு போனால் என்ன?

அப்பன் செத்து அம்மாவுக்கு அள்ளிக்கொடுத்தான்...இன்று அம்மா அப்பனைக்கொன்றவனுக்கு பகிரங்க ஆதரவு.... உடன்பிறப்புகளுக்கு பகிரங்க மடலைக்காணவில்லை.... ஜால்ராக்கள் முதுகு சொறிதலிலும் முந்தானை முடிதலிலும் அப்பிராணியாக அடங்கிக்கிடக்கின்றார்கள்.

அது என்ன? ஹிந்திக்காரன் சொன்னால் மட்டும் சவுண்டில்லாது சங்கடக்கிக் கிடப்பது..ஈழதமிழன் சொன்னால் இடக்கு முடக்காக எகிறிக்குதிப்பது? முகர்ஜி என்ன இந்திய விடுதலைப்போராளியின் இலட்சனையா? ஏன் முகர்ஜியின் சவுண்டு வங்காளத்தைத்தாண்டி இந்து சமுத்திரம் மட்டும் எட்டுகின்றது.


இராமனுக்கு மண் அள்ளிப்போட்டு முதுகுசொறிந்த மூணு கோட்டு அணில்களா நீங்கள்? தமிழன் எல்லாம் ஏன் தலைகீழாக நடக்க முற்படுகின்றான். டுட்சிப்பொண்ணு சொல்லும் அரசியல் விளங்கும் தமிழனுக்கு தமிழன் அரசியல் விளங்க முடியாத பார்வைக்கோளாறா என்ன? தன்னைத்தானே தாழ்த்தும் தமிழனைப் பின் நவீனத்துவத்தின் பிதற்றல்களும் மாற்றிப்போடவில்லை.

என்ன குற்றம் காணுதலே கடமையாய் ஆனீரோ..என யாரும் கேட்பீரானால் ...ஏன் சொந்தக்காலால் நிற்காது மூணாவது காலில் நிற்கும் முயற்சி..முகர்ஜிக்கு மட்டுமா மூணாவது கால்?

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil