ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 9, 2009


காந்தியின் பெயரால்


காந்தியின் பெயரால் களவாடும் கூட்டம் ஒன்றின் கையில் இந்தியா சிக்கியிருப்பதே இந்தியாவினதும் அதன் அயல் நாடுகளினதும் துரதிர்ஷ்டம். இந்தியாவின் தந்தை என்று போற்றப்பட்ட மஹாத்மாவும் பார்ஸி முஸ்லீம் கலப்பில் பிறந்த பெரோஸ் காந்தியும் ஒன்றுதானா? பெரோஸ் காந்தியை இந்திரா திருமணம் செய்ததன் மூலம் காந்தி என்ற பெயரை இந்தக்குடும்பம் கபடமாக இன்று பாவித்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது.

குஜராத்தில் ஆட்டிடையர் குலத்தில் பிறந்த மோகன்லால் கரம் சந்த் காந்தியும் காஸ்மீரி பண்டிட்டுகள் குடும்பத்தில் பிறந்த நேரு குடும்பமும் எப்படி ஒரே பரம்பரையாக இருக்க முடியும். மஹாத்மாவின் மகனைத்திருமணம் செய்த ராஜாஜியின் மகள் வயிற்றுப்பிள்ளைகள் கூட காந்தியின் பெயரைப் பாவிப்பதற்கு முழு அதிகாரம் கொண்டவர்கள். மஹாத்மா ராஜாஜி போன்ற உயர்ந்த தலைவர்களின் வாரிசுகள் கையில் இந்தியா இருந்திருந்தால் கூட மக்களுக்கு இந்த துன்பமிருந்திருக்காது.

உயர்ந்த குடும்பத்தின் ஜீன்கள் உயர்வாகவே சிந்தித்திருக்கும். மவுண்ட் பேட்டன் பிரபுவின் மனைவியைக் கையாண்ட நேருவின் பாவம் இந்திரா இராஜீவ் என்று துர் மரணங்களைத் தான் கொண்டு சேர்த்திருக்கின்றது என்றே எண்ணத்தோன்றுகின்றது. இந்துக்கள் கர்மவினையில் நம்பிக்கை கொண்டவர்கள்.

இந்திய மக்களின் மடத்தனமான குருட்டு நம்பிக்கை இன்று இத்தாலிப் பைஸா கோபுரத்தின் பைஸாஸத்திடம் ஆட்சியை ஒப்படைத்திருக்கின்றது. அது என்ன இந்தியாவில் அறிவுள்ளவர்கள் திறமையுள்ளவர்கள் கிடையாதா? பத்தாங்கிளாசும் பாஸ்பண்ணாத ஒரு பெண்ணிடம் நாட்டையே அடகு வைக்க இந்தியர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?

புத்தி மந்தமான போஸ்ரர் போயிடம் நாட்டைக் கொடுக்க இந்திய அதிகார வர்க்கம் முண்டியடிக்கின்றது. அரசியல் வாதிகள் முதல் அதிகாரிகள் வரை நாட்டைப்பற்றி எந்தவித சிந்தனையுமின்றி கிடைத்தவரை இலாபம் என்று சுருட்டுவதில் முன்னிற்கின்றார்கள். அதற்கேற்றாற்போல பொம்மைகளை பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் நியமிக்கின்றார்கள்.

காந்தியின் பெயரால் நாட்டை சுரண்டிக் கொழுக்கின்றார்கள். ஒரு ரஷ்ய சார் மன்னனுக்கோ ஒரு பிலிப்பைன்ஸின் மார்க்கோசுக்கோ கிடைத்த தண்டைனைபோல ஏன் இந்த ஊழல் அரசியல்வாதிகளுக்குத் தண்டனையே கிடைபதில்லை. இவர்களைக்கண்டு பிடிக்க வருபவனும் எவ்வளவு கிடைக்கும் என்பதிலேயே குறியாயிருக்கின்றான்.

ரூமானியாவின் சர்வாதிகாரியை சுட்டுப்போட்டது போல வேண்டாம். குறைந்த பட்சம் வோட்டுப்போட்டாவது இவர்களை ஓரங்கட்டலாமே?

மக்கெயின் வரலாமா? ஒபாமா வரலாமா ? என்று பட்டிமன்றம் நடத்தும் இந்திய அறிவுஜீவிகள் தன் தேசத்தில் குறைந்த பட்சம் ஒரு மனிதனாவது வரவேண்டுமென்ற குறைந்த பட்ச அக்கறையை ஏன் காட்ட மாட்டேனென்கின்றார்கள்.

படிப்பறிவு இல்லையென்ற காரணத்தால் ஓட்டறிவே இல்லாத பாமர ஜனங்களுக்கு அட்லீஸ் நாட்டறிவு ஆவது புகட்டலாமே..

அல்லது நீங்களும் ஜால்ரா அடிப்பதே சுகமென்றால்...ஓ அடிக்கலாமே

1 comment:

ttpian said...

தலப்ப கட்டு சொல்கிரான்:சில உபகரணங்கல் இலங்கைக்கு கொடுத்தானாம்:அது என்ன?
1)முள் வாங்கி
2)தேங்காஇ துருவி
3)பேனா கத்தி
தமிழனை காக்க மறந்த மஞசல் துண்டுக்கு இதுவும் வேண்டும்!
இன்னமும் வேண்டும்:
சோனிஅவுக்கு காவடி தூக்கியவன்,தமிழனால் ஒதுக்கபடுவது உறுதி!

3

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil