
சமத்துவ மக்கள் கட்சியாம். அது என்னங்கையா ..கம்யூனிஸ்ட் கட்சியா?..மார்க்ஸியக் கட்சியா...? அவங்க தானே சமதர்மம் எல்லாம் பேசுவாங்க..
இவரு சொல்லியிருக்கார் "பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவது ஜனநாயகத்தை விற்பதற்குச் சமம்னு "
இப்போ தான் புதிசாக் கண்டு பிடிச்சிருக்கார். அது சரி ஜனநாயகம் எங்கே இருக்கு. அப்படியிருந்தால் தி.மு.க அது போனால் அ.தி.மு.க அப்பிடின்னு வர முடியுமா?
வீட்டுக்காரம்மாவுக்கே ஜனநாயக உரிமை கொடுக்க மனசில்லாம தள்ளி வைச்சவர் இவர்.. இவர் ஜனநாயகம் பேசுறாரு..
சொந்தக் குடும்பத்தை பெற்ற மக்களைப் பற்றி சிந்திக்க முடியாத , விருப்பமில்லாத இவர்கள் மக்களைப் பற்றிச் சிந்திப்பார்கள் என்று எப்படி நம்புவது? தனி மனித ஒழுக்கமும் ஜனநாயகத்தில் ஒன்று...
கட்சிக்கு என்ன கொள்கைன்னே தெரியவில்லை. முதலில் கலைஞரோடு இருந்தார் பின்னர் ஜெயலலிதாவோடு இருந்தார்... இப்போது அவர் எங்கேயிருக்கார்னே தெரியவில்லை. காங்கிரஸை எதிர்கிறார். பா.ஜ.கவுக்கு ஓட்டுக் கேட்கிறார்.
எதை வைத்து மக்களிடம் ஓட்டுக் கேட்கின்றார்கள் இவர்களெல்லாம். இந்த சினிமா மாயையை முதலில் ஒழிக்கணும்... அது தான் ஜனநாயகம்னு அவரிடம் யாராவது சொல்லுங்கள்..
"தற்போது மக்களை பற்றி யாரும் சிந்திப்பதில்லை. பதவி சுகம் அனுபவிப்பதிலேயே குறியாக உள்ளனர். பணத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்."
இதுதானே உங்க நோக்கமும்... அப்போ உங்களுக்குத் தான் முதல் சவுக்கடி.. சரியாத்தான் சொல்லியிருக்கீங்க..
1 comment:
நண்பரே !!!
தற்சமயம் நான் படித்த செய்திகளில் இந்த சரத் பா ஜ க விடம் ஐந்து கோடி கேட்டு அவருக்கு இரண்டு கோடி மட்டுமே கொடுக்க பட்டதாம் !!
எனக்கு ஒரு சந்தேகம் !!
இவர் ராதிகாவிற்கு எத்தனையாவது கணவர் ? இவருக்கு ரதிகா எத்தனையாவது மனைவி ?
Post a Comment