ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 2, 2009


மிச்சம் என்ன சொல் சாமி


இன்று ஒரு கன்னடன் இட்ட ஆங்கிலப் பதிவில் ஈழப்பிரச்சினையை கொச்சைப்படுத்தியிருந்ததைப் படிக்க நேரிட்டது. தமிழன் மீது கன்னடனுக்கு இருந்து வெறுப்பே அங்கு விசத்தைக் கொட்டியிருந்தது.

அத்தன தூரம் அரசியலால் துவேசம் பரப்பப்பட்டிருந்தது. சக மனிதனாகவே மதிக்க முடியாத ஒன்றாக இருக்க முடியாத இவர்களை வைத்துக் கொண்டுதான் அகண்ட பாரதக் கனவு காண்கின்றோம். நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எல்லைகளை வலிந்து விரித்து வைத்திருந்தாலும் மனங்கள் என்னவோ குறுகித்தான் இருக்கின்றது.

சீன இந்திய யுத்தம் நடந்தபோது கண்ணதாசன் ஒரு பாட்டெழுதினார்.

"புத்தன் வந்த திசையிலே போர்
காந்தி பிறந்த மண்ணிலே போர் " என்று.

இன்று காஸ்மீரம், மிசோரம், நாகாலாந்து என்று எங்கும் பிரிவினை தலை தூக்கி நிற்கின்றது. இராணுவத்தை வைத்து அடக்கிக்கொண்டிருக்க வேண்டியிருக்கின்றது.

அன்பைப் போதித்த புத்தரும் அஹிம்சையைப் போதித்த காந்தியும் பிறந்த மண்ணின் இருப்பே ஆயுதத்தை நம்பி. வேடிக்கையாக இல்லையா?

காஸ்மீரில் போராளிகளும் இராணுவமும் மோதிக்கொள்கையில் , இராணுவம் இறந்து விட்டால் மட்டும் ஏன் இந்தியத்தரப்பில் இத்தனை பேர் இறந்து விட்டார்கள் என்று சொல்கின்றார்கள்?

அப்போ காஸ்மீரிகள் வேற்று நாட்டுக்காரரா? அப்போ நாம் தானா அவர்களை ஆக்கிரமித்திருக்கின்றோம்.

காஸ்மீர் இந்தியாவிற்குள் இருந்து போராடுகின்றது. ஈழம் இந்தியாவிற்கு வெளியில் இருந்து போராடுகின்றது.

ஆனால் இரண்டு இடத்திலும் இந்திய ராணுவம் எதிரியாய் இருக்கின்றது.

அன்பைப்போதித்த புத்தரினதும் அஹிம்சையைப்போதித்த காந்தியினதும் வாரிசுகள் யுத்தத்தைப் போதிக்கின்றோம்.

புத்தனை நம்பிய எத்தன் இன்று ராஜபக்ஸே.

"புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
மிச்சம் என்ன சொல் சாமி.."

என்று குரைத்துக்கொண்டு நிற்கின்றான். அத்தனை தூரம் இந்தியா கொடுத்த ஆயுதங்கள் குவிந்து கிடக்கின்றன.

இன்றும் ஆயுதங்கள் அனுப்பப்பட்ட ஐந்து இராணுவ லாரிகளை மடக்கி தமிழினவுணர்வாளர்கள் போராடியிருக்கின்றார்கள். அவர்களுக்கு தலைதாழ்த்திய வணக்கம்.

2 comments:

ராமகுமரன் said...

காஷ்மீர் பிரச்சினையும் இலங்கை பிரச்சனையும் ஒன்று சேர்த்து பார்க்காதீர்கள். நீங்கள் காஸ்மீர் போராளி என்று செல்லும் பலரும் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள் மற்றும் பாகிஸ்தானின் கைக்கூலி பெறும் நப‌ர்கள். ஈழத்துப்போராட்டாம் உரிமைகள் மறுக்கப்பட்டதிற்காக நாம் காஷ்மீரத்து மக்களின் உரிமைகளை என்றும் மறுக்கவில்லை மேலும் அவர்களுக்கு என்று சிறப்பு உரிமைகள் வேறு கொடுத்திருக்கிறோம்

Anonymous said...

பின்னூட்டம் போட்டவரே ! அதெல்லாம் சரிதான் ! இந்தியா எப்படி உருவாயிற்று என்ற வேரலாறு தெரியுமா ? மத்திய அரசு என்பதன் அர்த்தம் தெரியுமா ? ராணுவத்தை வைத்து எல்லாரயும் அடக்கி விடலாம் என்று நினைப்பா ? அப்புறம் அசிங்கமாகி போய் நாரி விடபோகிறது ! ஜ்ஜகிறதை ! இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவம கற்பழிக்கும் மற்றும வழிபறிக்கும் பேர் போன
கும்பல் என்பதை நினைவுகொள்ளவும்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil