ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, May 20, 2009


அட நாதாரிகளே


பதிவுலகைப் பார்க்கும் போது எப்போதும் போலவும் புதிதாயும் கோபம் தான் வருகின்றது. தங்கள் உள் மன வக்கிரங்களைச் சொறிந்து கொள்ளும் கயமைத் தனம் தான் தெரிகின்றது. பிரபாகரன் கொல்லப்படவில்லை ..கொல்லப்படாமல் இருக்க வேண்டும் என இலட்சோப லட்சம் மக்கள் ஆசைப்படுகின்றார்கள் ..அப்படியே இருக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றார்கள்.

அதையெல்லாம் தூக்கிப்போட துவண்டு போகச் செய்ய உங்களுக்கு ஏன் இப்படியொரு ஆசை. உங்களுக்கு ஒரு பதிவு போட பரபரப்பாக ஹிட் ஆக்க ..வேறு எத்தனை கழுவாரி மகன்களின் விடயங்கள் இருக்கின்றது உங்கள் மன அரிப்புக்கள் தீர்க்க.

கேபிள்ளு கயிறு விடுகிறார் பிரபாகரன் மட்டுமா? மதிவதனியுமா? டாக்டர் துவாரகாவுமா? உங்களையெல்லாம் எண்ணைக் கொப்புரையில் போட்டு நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். மற்றவர் பிரபாகரனின் மறைவு மற்றும் ராஜீவ் காந்தியின் மரணம் (தீராத பக்கங்கள் என்று எழுதுகின்றார்... பிரபாகரனும் இராஜீவும் ஒன்றா..தின்ற சோறு செரிக்காது தமிழர்களைக் கொன்றவனும் தயவில்லாது தவித்தவர்களைத் தாங்கிக் கொண்டவனும் ஒன்றா?

அப்படித்தான் எங்கள் நம்பிக்கைகள் இன்னும் அப்படியே இருக்கின்றது...உங்களுக்கு சொறிந்து கொள்ள வேண்டுமென்றால் ஆயிரம் விடயம் இருக்கின்றது. கழுவாரி மகன்களின் களவாணித்தனம் இருக்கின்றது. திடீர் பதிவுகள் ஹிட் எகிறிட எழுதிக்கொள்ளுங்கள்..

ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் என்ன உறவு? தாயாளு அம்மாள் ராஜாத்தி அம்மாளை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையாயின் ராஜாத்தி அம்மாளுக்கும் கருணாநிதிக்கும் என்ன உறவு?

குவாரோச்சிக்கு 60 மில்லியன் டொலர்கள் சோனியாவின் கள்ள உறவிற்கு கிடைத்த பரிசா? இப்படி எதை வேண்டுமென்றாலும் ஆசை தீரச் சொறிந்து உங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொள்ளுங்கள்..

என் மண் மறுக்கப்பட்டது போலவே நான் சுவாசித்த என் காற்றும் எனக்கில்லாது போனது.. மண்ணோடு பிடுங்கப்பட்டு அன்னிய தேசத்தில் தூக்கியெறியப்படுவது கொடுமையானது...என் குழந்தைப்பருவங்கள் எங்கோ ஒரு தேசத்தில் என்னைத் தேடி அலைந்து திரிகின்றன.. நான் சென்று வந்த பாதையில் புல் முளைத்திருக்கும் அல்லது புதிய தார் ரோட்டு மேவி நிற்கும். என் காலம் அப்படித்தான் உறைந்திருக்கின்றது.

என் நினைவில் இளமையோடிருந்தவர்கள் புகைப்படத்தில் நரைவிழுந்து கன்னம் சுருங்கி முதுகு கூன் விழுந்திருந்ததைப் பார்த்தபோது அதிர்ச்சியாயிருக்கின்றது. பெருங்கொடுமை அது. உங்களுக்கு எல்லாம் கிடைத்தது.. எங்களுக்கு அத்தனையும் மறுக்கப்பட்டது... உங்கள் வாழ்க்கை எமக்குச் செவி வழி சேதிகளே... உருண்டு புரளும் புழுதியும் காய்ந்து கறுக்கும் வெய்யிலும் எமக்கு மறுக்கப்பட்ட வரங்களே .. எமது நம்பிக்கையின் விலாசத்தை நீங்கள் கொன்று போட்டீர்கள். எங்கள் இருப்பின் முகவரி அந்த ஒற்றைச் சொல்லிலேயே ஊடாடியது.. அதையும் உங்கள் இஷ்டத்திற்கு கலைத்துப் போடுகிறீர்கள்..

விட்டு விடுங்கள் எங்கள் நம்பிக்கைகளுடன் நாங்கள் வாழ்ந்து விடுகின்றோம்...

இதற்குள் ஒரு பதிவு மிகவும் ஆச்சரியப்படுத்தியது. லக்கிலுக்கினது அது. லக்கி லுக்கை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. எல்லாக் காலத்திலும் எல்லா கயமைத்தனத்திலும் மு.க வை முண்டு கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய போது கோபம் வந்தது. ஆனால் பிரபாகரனை மாமா என்று அறிமுகப்படுத்திய விடயத்தை அறிந்த போது ஆச்சரியம் வந்தது. நான் கூட அதைச் செய்யவில்லை. தமிழர்களின் வாழ்க்கை அந்த ஒற்றை அச்சில் சுழன்று கொண்டிருந்தது உண்மைதான்.. எங்களை விட்டுப் பிரிக்க முடியாத ஏதோ ஒன்று இணைத்தே இருந்தது. ஆனால் இப்படியா? எங்கோ ஒரு இடத்தில் ஈரம் மெல்லக்கசிகின்றது.

இது தான் எங்கள் நம்பிக்கை.. என்னைப்போலவே இதே பிடிவாதத்துடன் நீண்டு நிற்கும் ஒரு நெடிய வரிசை..அத்தனை பேரின் நம்பிக்கையுடன் விளையாடாதீர்கள்..தயவு செய்து.. உங்கள் மன அரிப்புகளைத் தீர்த்துக்கொள்ள ஓராயிரம் விடயமிருக்கின்றது.. ஆனால் எங்கள் நம்பிக்கையும் கனவும் இந்த ஒரு விடயத்தில் தான் இருக்கின்றது..அதனுடன் விளையாடாதீர்கள் தயவு செய்து..

1 comment:

Dr.Rudhran said...

"என் மண் மறுக்கப்பட்டது போலவே நான் சுவாசித்த என் காற்றும் எனக்கில்லாது போனது.. மண்ணோடு பிடுங்கப்பட்டு அன்னிய தேசத்தில் தூக்கியெறியப்படுவது கொடுமையானது...என் குழந்தைப்பருவங்கள் எங்கோ ஒரு தேசத்தில் என்னைத் தேடி அலைந்து திரிகின்றன.. நான் சென்று வந்த பாதையில் புல் முளைத்திருக்கும் அல்லது புதிய தார் ரோட்டு மேவி நிற்கும். என் காலம் அப்படித்தான் உறைந்திருக்கின்றது."
வலி புரிகிறது, வலிக்கிறது

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil