
பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும் ராகுல் காந்திக்கு உள்ளன என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் யாரையும் பின்னுக்குத் தள்ளவில்லை. ஆனால், ராகுல் பிரதமராக வேண்டும் என்பதை கூற விரும்புகிறேன். அவருக்கு அதற்கான அனைத்து தகுதிகளும் திறமையும் உள்ளன. அதை இந்த தேர்தலில் அவர் நிரூபித்துள்ளார்.
இது காங்கிரஸ் கட்சியின் விருப்பம் மட்டுமல்ல.. நாட்டு மக்களின் விருப்பமும் ஆகும். அவரது அறிவு முதிர்ச்சி, தொலைநோக்குப் பார்வை, அரசியல் கணிப்பு ஆகிய அனைத்தும் அபரிமிதமானவை. இப்படிப்பட்ட தலைவரைத் தான் நாடு தேடிக் கொண்டிருக்கிறது.
குறிப்பு 1: ராகுலுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்பதை விபரித்து கூறினால் நன்றாக இருக்கும். ஏனெனில் நாங்கள் கொஞ்சம் விளக்கம் குறைந்தவர்கள் பாருங்கள் ..சிந்தியா
குறிப்பு2; ராகுலுக்கு தகுதியிருக்கோ இல்லையோ சிந்தியாவிற்கு தகுதி இருக்கின்றது ஜால்ரா அடித்து மந்திரியாவதற்கு.. கேவலம்
No comments:
Post a Comment