ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, May 20, 2009


புதிய புலிகளை உருவாக்க முயலும் சர்வதேசம்


இப்போது என் கருத்து உங்களுக்கு அதிகப்பிரசங்கித் தனமாகப்படலாம். ஆனால் நடக்கப்போவது இது தான். சிறிலங்காவின் மீதான சீனாவின் பிடி இறுகிப்போயிருப்பதை மேற்கு நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் நட்பும் அத்தியந்த ஜீவனுமாகிய ஜப்பானுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த கடல் வழித்தடங்களும் இந்து சமுத்திரம் சீனக்கடல் மற்றும் பசுபிக் மகாசமுத்திரம் வரை சீனாவின் ஆதிக்கம் கொடிகட்டிப்பறக்க முயல்வதும் அமெரிக்காவிற்கு ஒரு பெரும் சமிபாட்டுக் குறைபாட்டை இப்போது கொண்டு வந்திருக்கின்றது.

சோவியத் மாகா பேரரசின் கால்களும் கைகளும் முடமாக்கப்பட்ட மதர்ப்பில் சிலிர்த்துச் சிரித்த அமெரிக்கா புது வில்லனாகிய செஞ்சீனாவைக் கண்டு பேதியடித்துப் போய் நிற்கின்றது. அமெரிக்காவின் அள்ளக்கைகளான பெருங்காய டப்பா பிரிட்டனும் புத்துலகச் சினேகிதனுமான பிரான்சும் எடுத்த அதிரடி அட்டாக்குகள் எதுவும் சிங்களத் தீவில் எடுபடாது போனதில் அமெரிக்கா அஸ்துப் பேஸ்தாக முழுசிக்கொண்டிருக்கின்றது.

அதிரடி மன்னனும் டக்ஸாஸ் கெளபோயுமான ஜூனியர் புஸ் போலவும் செயற்பட முடியாமலும் மாட்டின் லூதர் கிங்கின் வாரிசுமாகவும் செயற்படமுடியாது அரை வேக்காடகச் செயற்படும் ஒபாமா றெஜிம் என்ன செய்வது என்று தெரியாது கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றது. சோவியத்துக்கு ஒரு மிகைல் கோர்பச்சோவ் வாய்த்தது போல் அமெரிக்காவின் அடாவடித் தனங்களை குழி தோண்டிப்புதைக்க ஒரு ஒபாமா. அவ்வளவு தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் புலிகளையும் புலிகளின் தலைவரையும் அழிக்கும் வரை ஆதரவு என்று வேடிக்கை பார்த்த மேற்குலகினை துளியும் மதிக்காது சிறிலங்கா செஞ்சீனத்தின் ஜோதியுடன் கலந்து விட்டதை மிகத் தாமதமாகப் புரிந்து கொண்ட மேற்குலகு அதிரடி நடவடிக்கையில் தீவிரம் காட்ட முற்படுகின்றன.
இத்தனை இலட்சம் புகலிடத்தமிழர்கள் உண்ணாது உறங்காது போராட்டம் நிகழ்த்தியும் அசைந்து கொடுக்காது இருந்த இவர்கள் இப்போது புலிகளும் இல்லாது புகலிடப் போராட்டமுமில்லாது தமிழ் மக்கள் அனைவரும் சோகத்துள் மூழ்கிப்போய் விட இவர்கள் இப்போது செயற்படத்தொடங்கி விட்டார்கள்."பான் கீ மூனின் அறிவிப்பையடுத்து போர்க்குற்ற விசாரணைக்கான சாத்தியங்கள் அதிகரிப்பு" ""போர் நடைபெற்ற பகுதிக்கு அனுமதிக்கவும்": ஐ.நாவும் உதவி நிறுவனங்களும் அவசர கோரிக்கை" "நாராயணன், சிவ்சங்கர் மேனன் அவசரமாக கொழும்பு பயணம்: சீனாவுக்கு எதிராக காய் நகர்த்தல்" "தடுப்புக்காவலில் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உடனடி நடவடிக்கை: அனைத்துலக மன்னிப்புச் சபை அவசர கோரிக்கை" இவ்வளவும் காலம் பிந்திய நடவடிக்கைகள்.

ஏன்? எதற்காக? தங்கள் தேவைக்காக.. தலை இறுகி மிதந்து கொண்டிருக்கும் சிறிலங்காவை இறக்கி தங்களின் செல்வாக்கைக் கொண்டுவர. இவர்களைப் போலவே இந்தியாவும் சீனாவின் பிரசன்னத்தை மிக இலேசாக எடை போடுகின்றது. சீனா இப்போது தன் ஆளுமையை வெளிக்காட்ட வெளிக்கிட்டிருக்கின்றது. இந்து சமுத்திரத்தில் நீண்டிருக்கும் இவர்களின் கைகளைப் போலவே இந்தியாவின் வாலையும் சுருட்டிக் கொள்ளும் காலம் வந்து விட்டது.

ஈழத்தமிழ்த் தலைமை சீனாவின் நட்புறவை அடைய முடியாது போனதே இன்றைய பின்னடைவிற்கு முக்கிய காரணம் என்பதைப்புரிந்து கொண்டிருந்தால் இன்றைய நிலமை வேறு விதமாக இருந்திருக்கும்.

அன்று இந்தியா செய்ததைப் போல தமிழ் மக்களிடம் இருந்து பொறுக்கப்பட்ட சக்திகளுக்கு மேற்கு நாடுகள் பாலூட்ட முயற்சி செய்யும். தங்களுக்கான ஆதாயத்தை அடையும் வரை மேற்குலகம் ஈழத்தமிழ் மக்களை நிம்மதியாயிருக்க விடாது.

1 comment:

Anonymous said...

இனிமேல் தாங்கள் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவீர்கள். ஆம். வணங்காமுடி, மாவீரன்,பயமறியா பிரபாகரனை தூக்கி விட்டால் இன்னும் நன்றாக காய் நகர்த்தலாம். கண்டிப்பகா உம் தரப்பு வாதம் சாத்தியமே. நம்ம ஆளுங்க வெறும் கூலிப்படைதான். ஏற்கனேவே சீனகாரனிடம் வாங்கிய மாத்து நமக்கு இன்னும் வலிக்கிறது.' கைப்புள்ள, மாதிரி ஆக்கிவிட்டார்கள் நாம் நாட்டை.( எடுப்பார் கைப்பிள்ளை என்றும் கூறலாம் )

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil