ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 31, 2009


கருணாநிதி ஒரு கோழை


கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருந்த பல இலாகாக்கள் ஸ்டாலினிடம் கை மாறியதிலிருந்து கருணாநிதி புதிய வேலை வாய்ப்புகளை பெர்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளாரோ எனச் சந்தேகம் எழுகின்றது. அவர் மீது வந்து விழும் குற்றச்சாட்டுகள் அவ்வாறே என்ணத் தூண்டுகின்றது.

இப்போது புதிய உபதொழிலாக ரெளடியிஸம் செய்யப் புறப்பட்டுவிட்டார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ அவ்வாறு தான் குற்றஞ்சாட்டுகின்றார். ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் இந்திய தமிழக ஆட்சித்தலைமைகளையும் கடுமையாக விமர்சித்தவர் பாரதிராஜா. கொடுமைகளைக் கண்டு பொங்கும் போர்க்குணம் கொண்டவர்கள் கலைஞர்கள்.(பெயரில் மட்டும் "கலைஞ"ராய் இருப்பவர்கள் வெறும் போலிகள்) மென்மையான குணங்கொண்டவர்கள். அநீதிகளைக் கண்டு சீறுபவர்கள்.

இயல்பாகவே ஈழத்தமிழனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து நின்றவர் பாரதிராஜா. அவரைக் கருத்து ரீதியாக எதிர்க்கத் திராணியற்றவர்கள் அவர் அலுவலகத்தில் புகுந்து அடித்து நொருக்கியிருக்கின்றார்கள். கழகக் கண்மணிகளுக்கு காகிதம் எழுதும் வேலையை விட்டு விட்டு கடப்பாரை தூக்குவதற்கு கற்றுக்கொடுக்கின்றார் க.க.க.க.கருணாநிதி.

"அப்பனுக்குத் தப்பாது பிள்ளை பிறக்கும் " என்று தமிழில் ஒரு சொல் வழக்கு இருக்கின்றது. இங்கு மகன் அழகிரியின் அடியொற்றி தகப்பன் வழி நடக்கும் வழமை வாய்த்திருக்கின்றது.

"துக்ளக்" ஆக நானிருந்தால் ஒரு கார்ட்டூன் போட்டுக் காட்டி விடுவேன். வற்றிய தொத்தல் குதிரையில் கருணாநிதி லொங்கு லொங்கு என்று கடப்பாரை தூக்கி வரும் காட்சி வாழ்க்கையின் துயரங்களை மறந்து வாய் விட்டுச் சிரிக்க வைத்து விடும். வேண்டு மென்றால் சற்றுப் பின்னே குதிரைகளில் இரண்டு சண்டி ராணிகள் வருவதைப் போலவும் கீறி விடுங்கள். கெளரவர்களைப் பெற்றவர்கள்அவர்கள் அல்லவா? கெள்ரவர்கள் 100 பேராக இருக்க வேண்டுமென்பது அவசியம் இல்லை. ஐந்து பேராக இருக்கலாம் ..கனி மொழியையும் சேர்த்துத் தான் சொல்கின்றேன்.

ஜான்ஸி ராணி ஸ்டைலில் சில அதிரடிகளைக் காண எதிர்காலம் காத்திருக்கின்றது. மு.க.முத்து என்ன ஆனார் என்று கடந்த பதிவுகளில் சிலர் கேட்டிருந்தார்கள். அவர் சிறந்த"குடிமக"னாக இருந்து கொண்டிருக்கின்றார். அட ஆமாம் எழுந்து நிற்கவே திராணியற்று.. இருந்து கொண்டிருக்கின்றார்.

நல்லதனமாக யோசித்து விடாதீர்கள். "விதை ஒன்று போட்டால் சுரையா முளைக்கும் "என்று கேட்பார்கள்...அதைப்போலவே திருக்குவளையிலிருந்து தெருக் குவளைக்கு வந்து விட்ட "அரசியல் பாதி அராஜகம் பாதி கலந்து செய்த...கழுதை நான்.." என்று கவிதை பாடும் வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கக்ள்.

இனி வை கோ வின் குற்றச்சாட்டு :
அச்சுறுத்தலோ, தாக்குதலோ, கலையுலக படைப்பாளிகளின் உறுதியை இம்மியளவும் குலைக்க முடியாது. என்னிடம் கண்ணீரும் இல்லை; புன்னகையும் இல்லை; ரகசிய நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கிறேன்.அனுமதி கிடைத்தால், ஆண்டவனைக் கூட சுட்டுக் கொல்லும் கோபம் இளைஞர்களிடம் உள்ளது. ஆண்டவன் என்றால், ஆண்டு கொண்டிருக்கும் அற்ப மனிதர்கள் என்று எண்ணி விடாதீர்கள்; இந்த ஜகத்தினை அழிப்போம் என்ற வழியில் வந்தவர்கள் நாங்கள்.லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், பாரதிராஜா அலுவலகத்தில் குண்டர்கள் நுழைகின்றனர்; அவரது அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்; கோடிக்கணக்கான ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது.


பாரதிராஜா அலுவலகத்தின் மீதான தாக்குதல் கோழைத்தனமான செயல்.இந்தத் தாக்குதலை நடத்தியர்கள் யார் என்பதை திறமை வாய்ந்த போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லையா? தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனம் யாருடையது, இயக்கியவர் யார், ஏன் அவர்களை கூண்டில் ஏற்றவில்லை... பாரதிராஜாவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்தவரே முதல்வர் கருணாநிதி தான். அவருக்கு தெரிந்து, அவரது ஒப்புதல் பெற்றுத்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அலுவலகத்தின் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என்றால் அதைச் செய்வித்த கருணாநிதி ஒரு கோழை ..தானா?

குறிப்பு: தமிழர்களின் ஆதரவை பாரதிராஜாவிற்காகப் பதிவு செய்து கொள்வோம். மனிதர்களை நேசிக்கும் கலைஞர்களை மனிதர்களும் நேசிப்பார்கள் என்பதை பறை சாற்றுவோம்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil