
யாராவது கேட்க மாட்டீர்களா? பதிவுலகில் நம் அயலவர்கள் போல் உலவும் இவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று யாராவது கேட்க மாட்டீர்களா?
செய்தி பார்த்தபோது கவலையாய் இருந்தது. இன்னும் பல எம் உறவுகள். பெயர்களை ஞாபகப்படுத்த முடியவில்லை...இந்த 22 பேருக்கும் யாராவது உதவுகின்றார்களா? யாராவது உதவ முன் வருகின்றார்களா? ஏன் இதை பதிவர்களின் உதவியுடன் கையாள முடியவில்லை. கொழும்பு+ஈழ பதிவர்கள் ஏதாவது முயற்சி செய்கின்றீர்களா? சட்ட உதவி மற்றும்.... பகிரந்தப்படுத்தும் உதவி.. தமிழனாய் ஒன்றுபடுவோம்.
ஜீ ஜீ மட்டும் ..மலேசியா போய் வாதிடலாம்.. இந்திய வக்கீல்கள் ஈழம் வந்து வாதிட முடியாதா?
ஒன்று படுவோம்..ஆக்க பூர்வமாக...
(லோஷன் என்ற பெயர் உபயோகிக்கப்பட்டதற்கு விருப்பமில்லாவிட்டால் மன்னிப்பு கேட்கின்றேன்)
கொழும்பில் இன்று 22 தமிழ் இளைஞர்கள் கைது
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் 22 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்றன.
கைதான இளைஞர்கள் காவல்துறை நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
படையினரும் காவல்துறையினரும் இணைந்து கொச்சிக்கடை, மட்டக்குளி, கிராண்ட்பாஸ் உட்பட கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளையில் நீர்கொழும்பிலும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
 
 
 Posts
Posts
 
 



 
 


No comments:
Post a Comment