ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, May 27, 2009


இந்தியன் என்பவன் தமிழனின் எதிரியேஇதில் எங்கே சைவன் வைஸ்ணவன் இருக்கின்றான்?

ஒரு அனானி நண்பன் ரொம்பவும் கடுப்பேத்தி விட்டார். அகதி நாய்களே என்று வசவு வேறு. அடிமையாய் இருப்பதை விட அகதியாய் இருப்பது எவ்வளவோ மேல்.அடிமை சுதந்திரம் அற்றவன்.அகதி முகவரி அற்றவன். ஆனால் நண்பர் எண்ணுவது போல ஈழத்தமிழன் புலம் பெயர்ந்தவன் இன்று அகதி அல்ல. அந்த அந்த நாடுகளின் குடியுரிமை பெற்றவன். அவனால் ஐரோப்பாவில் எங்கு வேண்டுமானாலும் சுற்றலாம். அமெரிக்கா போகலாம் கனடா போகலாம் அவுஸ்திரேலியா போகலாம்.

இந்நாடுகளுக்கு விசா தேவையில்லை அல்லது பெறுவது ஒன்றும் தடையல்ல. ஆனால் நீங்கள் இருக்கும் அடிமை தேசம் இந்தியாவின் பாஸ்போட்டுடன் நாட்கணக்கில் கியூவில் நிற்பது எமக்குத் தெரியும்.

இந்தியா என்பதற்கு தமிழில் ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா? இந்து என்பவன் தமிழனாய் இருக்க முடியாது. தமிழன் என்பவன் சைவன் அல்லது வைணவன் அல்லது சமணனாய்க் கூட இருக்கலாம். ஆனால் இந்து ,ஹிந்தி என்பவனே இந்தியன். இந்தியன் என்று சொல்லும் தமிழனோ மலையாளியோ கன்னடனோ இந்தியன் கிடையாது. அவன் ஹிந்தி பேசும் வட நாட்டவன். அவனைப்போல சிவந்த தோல் வேண்டும் கூர்ந்த மூக்கு வேண்டும். உன் பெண்களுக்கு அகன்று விரிந்த பின்பக்கம் வேண்டும் .மதர்த்துச் செழித்த மார்பகம் வேண்டும் .உயர்ந்து நெடுத்த உருவமும் அகன்று விரிந்த மார்புகளும் வேண்டும்.


அதுவெல்லாம் இல்லாத கறுத்து குட்டையான நீ மதராசிதான் இட்லியும் சாம்பாரும் சாப்பிடும் நீ ஒரு காலும் இந்தியனாக முடியாது. இந்த அனானி நண்பர் தமிழ் நாட்டின் எல்லையைத் தாண்டிப் போயிருக்கும் அனுபவம் கிடைக்காதவர் என்று தான் படுகின்றது. உலகம் பெரியது. அடிமையாய் இருப்பதை விட அகதியாய் இருப்பது கேவலமல்ல. அடிமையாய் இருக்க விரும்பாத எதிர்ப்பைக் கொண்டதனாலேயே சுரணை உள்ளதனாலேயே அகதி நிலை.

இன்று புலம் பெயர்ந்த தமிழரெல்லாம் அந்த அந்த நாட்டில் சகல உரிமையும் கொண்டவர்கள். இல்லையென்றால் கூட உனக்கு இந்தியாவில் என்ன மதிப்போ அதை விட மேலானது தான் அவர்களுக்கு உள்ளது. அவர்களின் குரலுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியதன் நிர்ப்பந்தமே இன்று மேற்கு நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக கொண்டு வந்த பிரேரணை. ஈழத்தமிழனால் இன்னும் இன்னும் சாதிக்க முடியும். எம் சந்ததி முற்று முழுதான இந்நாடுகளின் பிரஜைகள். இன்று சிறிலங்காவிற்கு எதிராக வாக்களித்த நாடுகளை எடுத்துப் பார். அத்தனை நாடுகளிலும் அகதித் தமிழன் அந்தஸ்துடன் வாழுகின்றான். அவர்களைப்போல வரி கட்டுகின்றான்.ஆனால் உன்னைப் போல அவன் தான் யார் என்பதை மறந்து விடவில்லை. அதனாலேயே அவர்கள் தாங்கள் தமிழன் என்பதை மறந்து விடாது போராடுகின்றார்கள். நீ ஒரு குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகின்றாய். உன் பெருமை என்ன? தன் பிள்ளைகளின் பதவிகளுக்காய் டில்லிக்கு காவடி தூக்கும் முதலமைச்சர்.ஆனால் நீ அகதி நாய்களே என்று சொல்லியவர்கள், அவர்கள் இன்றும் என்றும் தமிழர்களே. அதனாலேயே இத்தனை போராட்டம்.

இன்று இந்தியா தமிழனை ஒடுக்கி இருக்கலாம். ஆனால் இது ஒரு ஆரம்பமே . இந்தியா இனிமேல் தான் பல பிரச்சினைகளைச் சந்திக்கப் போகின்றது. இந்திய மேலாதிக்கத்தின் ஒவ்வொரு தடைக்கல்லும் தமிழனே. தமிழ் என்ற உணர்வில் இருந்து தான் அது வெளிப்படவிருக்கின்றது. இறந்து பட்ட அல்லது கொன்று போட்ட ஒவ்வொரு உயிர்களுக்கும் இந்தியா இனி பதில் சொல்லியே ஆக வேண்டும்.

5 comments:

Anonymous said...

a nice post.

keep it up...

You're saying is 100% true, Indian passport is restricted in many countries, no need to be proud about Indian.

SUBBU said...

எனக்கென்னவோ கூடிய விரைவில் தனி தமிழ்நாடு உருவாகும் என்று நினைக்கிறேன் !!!!!!!!

ஜுர்கேன் க்ருகேர்..... said...

Hmm..

கலையரசன் said...

பதில் எல்லாம் சொல்ல மாட்டானுங்க தலைவா!
நாமதான் இவனுங்கள டாராக்கனும், ஒற்றுமை என்ற பேருல!

Anonymous said...

உலகமே எதிர்த்து நின்றாலும் தொப்புள் கொடியுரவான இந்தியாவின் செயற்பாடுகள் தான் எம்மை 1000 ஆட்லறிகள் கொண்டு தாக்குகின்றன

http://kandumkaanaan.blogspot.com/2009/05/blog-post_29.html

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil