ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, May 8, 2009


பச்சை பச்சையாய்நம்மூரில சம்மர் வாறது நமக்கு உயிர் வாறமாதிரி...அத்தனைக்கு குளிர் வாட்டியெடுத்து நம்ம(து) சைஸே சுருங்கியிருக்கும். எல்லாம் பச்சை பச்சையாய் செழிப்பாய்.. அட நீங்க ஒன்னு ...மரம் செடி தாவரம் புல் பூண்டு ..இதுங்கதான்..மாறிக்கிட்டே வருது. ஒக்ஸிஸன் கொஞ்சம் ஓவரா கிடைக்கத் தொடங்கியிருக்கு..அதுக்காக ஓவர் கற்பனை வேண்டாம். காத்தும் சும்மா சிலுசிலுன்னு ஓரமா ஒதுக்கி சமயத்தில் அதிர்ஷ்டமும் அடிக்கிது..

எத்தனை நாளைக்குத் தான் அரசியலைக் கட்டி அழுவுறது.அழுவாச்சி மு.க வின் மூஞ்சையைப் பார்த்து இதயமெல்லாம் இரத்தம் கட்டிக்கிடக்கின்றது. இலகு பண்ணி ஓடவிட்டு உடம்பை மூடுக்கு கொண்டுவர இத்தனை செழிப்பும் வனப்பும் வேண்டிக்கிடக்கின்றது. இந்தியப் பதிவர்கள் கற்பின் மேல் கோட்டைகட்டி கோட்டைக்குள் முட்டையிட்டதோடு சரி.. ஒரே அழுகைப்புராணம்தான் மெயின் ஸ்டாக்...

மற்ற உலகத்தில் பரந்திருக்கின்ற பதிவர்களாவது "பசுமை"ப்புரட்சி செய்வார்கள் என்றால் பச்சோந்திகளாக மாறி கண்ணகி காலனியில் குடியிருக்கின்றார்கள். மாற வேண்டியது உலகமல்ல மனங்கள் தான். நாங்க கொஞ்சம் நான்வெஜ் என்று ஆதி ஆரம்ப பீஸில அலட்டியது பார்த்து சளைக்காது என்னைத் தொடர்பவர்களை எண்ணைக்கொப்பரையில் போட்டு வறுக்க என் மனம் விடுகின்றதில்லை.

அதனால்தான் அவியல் தொவையல் போல "தொடையல்" முயற்சி.அடல்ற் ஆகாதவர்கள் பதிவுலகில் இல்லை என்ற நம்பிக்கையில் டிஸ்கி போடவில்லை.

ஆகாதவர்கள் வேண்டாவேலையாக மூக்கை நுழைத்து இண்டு இடுக்கில மாட்டிக்கிட்ட குஞ்சாக (எதாக என்று கேட்பவர்கள் எலியின் குஞ்சு என்று கொள்க)தவிச்சுத் தண்ணி (வியர்வை)விடவேண்டாம்.

சமீபத்தில் ஒரு படம் பார்க்க நேர்ந்தது. ஆண்கள் வாயால் மட்டுந்தான் சிகரட் பிடிக்க முடியும். ஆனால் பெண்களை அடிக்க முடியாது. எத்தனை விதமாகப் பிடிக்கிறார்கள். ஆனால் பக்குப் பக்குன்னு புகை விடவேண்டுமே...அதற்கு மூக்கு வேண்டுமே..இம்மாம் தொலைவில் இருக்கும் மூக்குக்கு ஏறிவர ..எவ்வளவு டைம் வேணும்.. கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு உண்டு..

ஒருவர் கேட்டிருந்தார் ஏன் "இட்டாலி வடை" ன்னு ஒழிவுப் பெயர் என்று. ஐயா அடிவாங்கும் தெம்பு உடலில் இல்லை. தொடையல் தொடரும்போது "திருமா" தெருவில் இறங்கி கடையல் செய்தால் தற்காத்துக் கொள்ளத்தான்...

பதிவர்களே தக்காளி அழுகிய முட்டை என்று ஆராதனை செய்தால் என்ன செய்வது.. குகையில்லாத ஊரில் பின்லாடனைப்போல் ஒழிய முடியுமா... குகைகள் இல்லையென்றும் சொல்ல முடியாது.. ஆனால் முகத்தை ஒளிக்கும் அளவில் விசாலமில்லை.

சாரு தன்னைப்பற்றி சொன்னதைப்போல விபச்சாரிக்கு மகனாகப் பிறந்தால் அப்பன் பெயர் மட்டுந்தான் தெரியாது..கற்பை மெயிண்டெயின் பண்ணும் இந்திய ஆண்களின் பிள்ளைகளுக்கு அம்மா பெயரும் தெரியாது பாத்ரூம் கழிவுக்குழியில் அல்லவா வாசம் செய்கின்றார்கள்.

நம்முன்னோர் கோபுரத்தில் செதுக்கி வைத்த காமத்தை கற்பு என்ற கூடு போட்டு கழிவறையில் மட்டும் செலவு வைக்கின்றோம்। என்ன இது சின்னப்பிள்ளைத் தனமாய் அல்லவா இருக்கின்றது॥ இந்திய ஆண்கள் இருபத்தைந்து வயதுவரை சின்னப்பிள்ளையென்றால் இந்தியப்பெண்கள் முப்பதைத்தாண்டியும் சின்னப்பிள்ளைகள் தான். முப்பத்தைந்து வயதிலும் கன்னி கழியாத பெண்ணைத்தேடும் நாப்பது வயதுக்கிழவன் எத்தனை கன்னியறைக்குள் கழிவு போட்டிருப்பான். இது தான் நாம் கண்ட கற்பு...

குறளோவியம் கண்டவர்கள் கற்போவியம் எழுதினால் நன்றாக இருக்கும். அது இல்லாதவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும். அதனால் அவர் இதை எழுதப்பொருத்தமானவரே..

தொடையலுக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கு... இன்னும் தொடரும்.

1 comment:

பதி said...

//என்னைத் தொடர்பவர்களை எண்ணைக்கொப்பரையில் போட்டு வறுக்க என் மனம் விடுகின்றதில்லை.//

உங்களைத் தொடர்பவர்கள் அதிகரிக்க கடவது !!!

//குகைகள் இல்லையென்றும் சொல்ல முடியாது.. ஆனால் முகத்தை ஒளிக்கும் அளவில் விசாலமில்லை.//

ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை... :-)

//தொடையலுக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கு... இன்னும் தொடரும்.//

தொடரட்டும் !!!!

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil