மனிதம் நிறைந்தவர்கள் கை கொடுங்கள்...மற்றவர்கள் மறந்து விடுங்கள் எங்களை...மரணத்துடன் மட்டும் விளையாடாதீர்கள்..விளையாட்டாகவேனும்..
ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts
Saturday, May 9, 2009
Friday, May 8, 2009
பச்சை பச்சையாய்

நம்மூரில சம்மர் வாறது நமக்கு உயிர் வாறமாதிரி...அத்தனைக்கு குளிர் வாட்டியெடுத்து நம்ம(து) சைஸே சுருங்கியிருக்கும். எல்லாம் பச்சை பச்சையாய் செழிப்பாய்.. அட நீங்க ஒன்னு ...மரம் செடி தாவரம் புல் பூண்டு ..இதுங்கதான்..மாறிக்கிட்டே வருது. ஒக்ஸிஸன் கொஞ்சம் ஓவரா கிடைக்கத் தொடங்கியிருக்கு..அதுக்காக ஓவர் கற்பனை வேண்டாம். காத்தும் சும்மா சிலுசிலுன்னு ஓரமா ஒதுக்கி சமயத்தில் அதிர்ஷ்டமும் அடிக்கிது..
எத்தனை நாளைக்குத் தான் அரசியலைக் கட்டி அழுவுறது.அழுவாச்சி மு.க வின் மூஞ்சையைப் பார்த்து இதயமெல்லாம் இரத்தம் கட்டிக்கிடக்கின்றது. இலகு பண்ணி ஓடவிட்டு உடம்பை மூடுக்கு கொண்டுவர இத்தனை செழிப்பும் வனப்பும் வேண்டிக்கிடக்கின்றது. இந்தியப் பதிவர்கள் கற்பின் மேல் கோட்டைகட்டி கோட்டைக்குள் முட்டையிட்டதோடு சரி.. ஒரே அழுகைப்புராணம்தான் மெயின் ஸ்டாக்...
மற்ற உலகத்தில் பரந்திருக்கின்ற பதிவர்களாவது "பசுமை"ப்புரட்சி செய்வார்கள் என்றால் பச்சோந்திகளாக மாறி கண்ணகி காலனியில் குடியிருக்கின்றார்கள். மாற வேண்டியது உலகமல்ல மனங்கள் தான். நாங்க கொஞ்சம் நான்வெஜ் என்று ஆதி ஆரம்ப பீஸில அலட்டியது பார்த்து சளைக்காது என்னைத் தொடர்பவர்களை எண்ணைக்கொப்பரையில் போட்டு வறுக்க என் மனம் விடுகின்றதில்லை.
அதனால்தான் அவியல் தொவையல் போல "தொடையல்" முயற்சி.அடல்ற் ஆகாதவர்கள் பதிவுலகில் இல்லை என்ற நம்பிக்கையில் டிஸ்கி போடவில்லை.
ஆகாதவர்கள் வேண்டாவேலையாக மூக்கை நுழைத்து இண்டு இடுக்கில மாட்டிக்கிட்ட குஞ்சாக (எதாக என்று கேட்பவர்கள் எலியின் குஞ்சு என்று கொள்க)தவிச்சுத் தண்ணி (வியர்வை)விடவேண்டாம்.
சமீபத்தில் ஒரு படம் பார்க்க நேர்ந்தது. ஆண்கள் வாயால் மட்டுந்தான் சிகரட் பிடிக்க முடியும். ஆனால் பெண்களை அடிக்க முடியாது. எத்தனை விதமாகப் பிடிக்கிறார்கள். ஆனால் பக்குப் பக்குன்னு புகை விடவேண்டுமே...அதற்கு மூக்கு வேண்டுமே..இம்மாம் தொலைவில் இருக்கும் மூக்குக்கு ஏறிவர ..எவ்வளவு டைம் வேணும்.. கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு உண்டு..
ஒருவர் கேட்டிருந்தார் ஏன் "இட்டாலி வடை" ன்னு ஒழிவுப் பெயர் என்று. ஐயா அடிவாங்கும் தெம்பு உடலில் இல்லை. தொடையல் தொடரும்போது "திருமா" தெருவில் இறங்கி கடையல் செய்தால் தற்காத்துக் கொள்ளத்தான்...
பதிவர்களே தக்காளி அழுகிய முட்டை என்று ஆராதனை செய்தால் என்ன செய்வது.. குகையில்லாத ஊரில் பின்லாடனைப்போல் ஒழிய முடியுமா... குகைகள் இல்லையென்றும் சொல்ல முடியாது.. ஆனால் முகத்தை ஒளிக்கும் அளவில் விசாலமில்லை.
சாரு தன்னைப்பற்றி சொன்னதைப்போல விபச்சாரிக்கு மகனாகப் பிறந்தால் அப்பன் பெயர் மட்டுந்தான் தெரியாது..கற்பை மெயிண்டெயின் பண்ணும் இந்திய ஆண்களின் பிள்ளைகளுக்கு அம்மா பெயரும் தெரியாது பாத்ரூம் கழிவுக்குழியில் அல்லவா வாசம் செய்கின்றார்கள்.
நம்முன்னோர் கோபுரத்தில் செதுக்கி வைத்த காமத்தை கற்பு என்ற கூடு போட்டு கழிவறையில் மட்டும் செலவு வைக்கின்றோம்। என்ன இது சின்னப்பிள்ளைத் தனமாய் அல்லவா இருக்கின்றது॥ இந்திய ஆண்கள் இருபத்தைந்து வயதுவரை சின்னப்பிள்ளையென்றால் இந்தியப்பெண்கள் முப்பதைத்தாண்டியும் சின்னப்பிள்ளைகள் தான். முப்பத்தைந்து வயதிலும் கன்னி கழியாத பெண்ணைத்தேடும் நாப்பது வயதுக்கிழவன் எத்தனை கன்னியறைக்குள் கழிவு போட்டிருப்பான். இது தான் நாம் கண்ட கற்பு...
குறளோவியம் கண்டவர்கள் கற்போவியம் எழுதினால் நன்றாக இருக்கும். அது இல்லாதவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும். அதனால் அவர் இதை எழுதப்பொருத்தமானவரே..
தொடையலுக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கு... இன்னும் தொடரும்.
Labels:
சமூகம்
Thursday, May 7, 2009
ஒரு செய்தியும் ஒரு வாழ்க்கையும்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் அவருக்கு நெருக்கமான ஒரு சில தளபதிகளும் இருப்பதாகக் கருதப்படும் கடைசி பதுங்கு குழியை வியாழக்கிழமை நெருங்கிவிட்டது இலங்கை ராணுவம். ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களுக்கும் இடையில் இப்போது இடைவெளி வெறும் 2,500 அடிகள்தான்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொலைப் படையாகச் செயல்படும் ""கரும்புலிகள்'' என்று அழைக்கப்படும் கடற்புலிகள் சுமார் 1,000 பேர் இப்போது அந்த இடத்தைச் சுற்றி அரணாக இருக்கின்றனர். இவர்கள் கமாண்டோ பயிற்சி பெற்றவர்கள். உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மனித குண்டாகச் செயல்படுகிறவர்கள். எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் போரிட்டு தங்களை மாய்த்துக்கொண்டு அவர்களையும் மாய்க்கத் தயங்காதவர்கள். இந்தக் காரணத்தாலும், அந்தப் பகுதியைச் சுற்றிலும் ஏராளமான கண்ணிவெடிகளை புலிகள் புதைத்து வைத்திருப்பதாலும் ராணுவத்தால் வேகமாக முன்னேற முடியவில்லை.
புலிகளின் கடைசிப் புகலிடம் இதுதான் என்பதால் போர் மிகக் கடுமையாக நடக்கிறது. புலிகள் தங்களிடம் எஞ்சியுள்ள தானியங்கி துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ராணுவத்தை மேற்கொண்டு முன்னேறவிடாமல் தடுத்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து கட்டிக்கொண்டே இருந்த மணல் தடுப்பு அரண்களையெல்லாம் இலங்கை ராணுவ தரைப்படை வீரர்கள் பீரங்கிகள் மற்றும் பலம்வாய்ந்த கவச வாகனங்களின் துணையோடு தகர்த்துவிட்டனர். இனி புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் தடுப்பு எதுவும் கிடையாது. அதே சமயம் அந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருப்பதால் இயற்கையான அரண் மட்டுமே புலிகளுக்குக் கேடயமாக இருக்கிறது.
புலிகளுக்கு வெளியிலிருந்து ஆயுத உதவியோ, ஆள் உதவியோ வருவதற்கு வழியில்லாமல் ராணுவம் சுற்றிவளைத்துவிட்டது. ராணுவத்தின் தரைப்படை, கடற்படை இரண்டும் அந்த இடத்தைச் சுற்றி வளைத்திருக்கிறது. விமானப் படையும் அவ்வப்போது அந்தப் பகுதி மீது பறந்து போர்க்கள நிலவரத்தைப் புகைப்படம் எடுத்து கொழும்பிலும் வன்னிப்பகுதியிலும் உள்ள ராணுவத் தலைமைக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இதைக் கொண்டுதான் ஒவ்வொரு தாக்குதலையும் ராணுவம் முடிவு செய்கிறது. கடைசி அரணும் தகர்ந்த இடத்தில் பிரபாகரன் இருக்கிறாரா என்ற சந்தேகமும் ராணுவத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் புலிகளின் தற்காப்பையும் தாக்குதலையும் பார்த்தால் ""மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய'' தலைவர் ஒருவர் அவர்களுடன் இருப்பது புலனாகிறது.
- இது செய்தி
இந்த நிலையில் தம்மைத்தானே தமிழினத்தலைவர் என்று தூக்கி நிறுத்த விழைபவர்களும் அவரைத்தாங்கி அப்பிப்பிடிக்க முனைபவர்களும் என்ன செய்வார்கள்? பெண்டில் பிள்ளையையும் விட்டு விட்டு ஓடி ஒளிவார்கள் அல்லது காலில் விழுந்து கதறி அழுது கெஞ்சுவார்காள். ஆ..ஊ.. என்றால் கவிதையெழுதி புலம்பும் பேர்வழிகள் இப்போது வாய் மூடி மெளனிக்கும் காலம்.
ஐந்து கோடி தமிழர்களின் தலைவன் தமிழினத்தலைவராகலாம் -வாயால்,.... பதினைந்து இலட்சம் மக்களின் தலைவன் தேசியத் தலைவனாகலாம் - செயலில்.
இது செயல் புதிது காலம். முறத்தால் புலி விரட்டிய பெண்ணும் முதுகில் ஈட்டி குத்தி இறந்தவன் தாய் முலை அறித்து எறிந்ததும் இந்தத் தமிழ் நாட்டில் தானா? நம்பவே முடியவில்லையே..
இத்தனை அராஜகம் நடக்கும் இடத்திலும் தமிழுணர்வுடன் சிறை செல்லும் சீமானை முட்டாள் என்கின்றது ஒன்று அதற்கு ஜால்ரா அடிக்கும் ஒன்று "களி தின்னும் காலம்" என்கின்றது. ஏன்யா..எதால் யோசிக்கின்றீர்கள்... தாய்த் தமிழகம் ஏன்யா இப்படி...
- இது வாழ்க்கை
இனியும் நீங்கள் சிந்திக்கவே மாட்டீர்களா?
Labels:
சமூகம்
Tuesday, May 5, 2009
மார்க்ஸிசம் , டோலர்கள் இன்ன பிற

சிறிலங்கா தொடர்பாக பாதுகாப்புச் சபையில் ஆராயப்படுவதை ரஷ்யா எதிர்க்கின்றதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "பாதுகாப்புச் சபையில் அதிகாரபூர்வமற்ற முறையில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஆராயப்படுவதை சபை எதிர்க்கவில்லை. இதில் சிறிலங்காவின் தூதுவரும் கலந்துகொள்ள வேண்டும்" என விற்றாலி சுர்கின் பதிலளித்தார்.
"இவ்வாறு அதிகாரபூர்வமற்ற முறையில் விவாதிக்கப்படுவதற்கான சாத்தியத்தை சிறிலங்காவின் தூதுவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்" எனக் குறிப்பிட்ட விற்றாலி சுர்கின், அங்கு உருவாகியிருக்கும் தீவிரமான மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக தாம் கவனத்தைச் செலுத்தியிருக்கும் அதேவேளையில், இந்த நிலைமைகளைச் சமாளிப்பதில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் தம்மால் முடிந்தளவு உதவிகளைச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
சுழற்சி முறையிலான தலைமைப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் பாதுகாப்புச் சபையின் மே மாதத்துக்கான திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்து ஊடகவியலாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை உரையாற்றிய போதே இந்தத் தகவல்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.
இந்தக் கூட்டங்களில் ஐ.நா. சபைக்கான சிறிலங்காவின் தூதுவரும் கலந்துகொள்வார் என ஐ.நா. பாதுகாப்புச் சபையின் மே மாதத்துக்கான தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் தூதுவர் விற்றாலி சுர்கின் தெரிவித்திருக்கின்றார்.
இது மார்க்ஸிஸம் பேசும் ரஸ்யாவின் ,அரச பயங்கரவாதத்தால் கொலைசெய்யப்படும் மக்களைக் கொண்ட மக்களைக்கொண்ட ஈழம் தொடர்பான மார்க்ஸிஸப் பார்வை.
அதாவது ஈழம் தொடர்பான மேற்குலகின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடத்துடிக்கும் ரஷ்யா அப்பாவிமக்களுக்கு எதிராக சிறிலங்கா சிங்களப்பேரினவாதிகளுக்கு முட்டுக்கொடுக்கும் பயங்கரவாதம். இதற்கும் மேலாக இன்னுமொரு கம்யூனிஸ நாடான சீனா செயற்படுகின்றது.
இன்று ஈழத்து மக்களைக்கொண்று போடும் ஆயுதங்களில் பெரும்பங்கு சீனாவுடையதாகும். பாதுகாப்புச் சபையில் ஈழப்பிரச்சினையை அதிகாரபூர்வமாக விவாதிக்க முடியாது தவிர்க்கப்படுவதில்இவ்விரண்டு நாடுகளுமே பெரும் பங்கு வகிக்கின்றன.
இத்தகைய மனவியாதியுள்ளவர்களின் கோஷங்களை உயர்த்திப் பிடித்தே நம் உள்ளூர் டோலர்கள் நம் மக்களிக்கு விடுதலை வேண்டிக்கொடுக்கப்போகின்றனராம். என்ன ஒரு வேடிக்கை இது. இந்நாடுகளின் தயவில் நாடு சுடுகாடாகிய பின்னர் டோலர்கள் யாருக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப்போகின்றார்கள். இந்த அரஜாகம் பற்றி மூச்சு விடவே டோலர்கள் யாரையும் காணோம்.
கம்பூனிஸம் எம்மண்ணில் ஓடும் இரத்தத்தைப்பூசிப்பூசியே இன்னும் சிவந்து கொண்டிருக்கின்றது.
* * *
இலங்கைக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பாராளுமன்ற தூதுக் கோஷ்டிக்கு கடும் எதிர்ப்பை சிங்கள கடுப்போக்காளர்கள் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
பிரிட்டிஸ் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்ப்பட்டு இத்தகைய கடும் எதிர்ப்பால் சாதா தூதராகிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஸ் பிறவுண் உம் இடம் பெற்றிருக்கின்றார்.
"பொதுமக்களுக்காக கண்ணீர் சிந்துவதற்கு முன்னர் 1818 இல் கொல்லப்பட்ட 1,00,000 க்கும் அதிகமான மக்களுக்கு நட்ட ஈட்டை வழங்குங்கள்" என சுவரொட்டிகள் ஒட்டி எதிர்ப்பிற்கு காரணம் தேடுகின்றார்கள்.
இலங்கைத் தீவை பிரித்தானியா முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி ஒன்று இடம்பெற்றதாகவும், அதனைக் கட்டுப்படுத்த பிரித்தானிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிங்களவர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கடந்த வாரம் கொழும்புக்கு வந்தபோதும் முன்வைக்கப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.
சிங்களர்களிடையே இருக்கும் நாட்டுப்பற்று மீதான ஒற்றுமையைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் ஒறிஜினலும் டூப்ளிக்கேற்றுமாக நாம் சிதறி நிற்போமா? எத்தனை தமிழ் மக்கள் இறந்தாலும் காரியமில்லை புலிகள் அழியவேண்டுமென்று இப்போதும் புலிப்பாசிசம் பற்றி பிதற்றுபவர்களை என்ன சொல்வது?
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யமுடியாது.
* * *
கனடாவின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான அமைச்சர் பிவேர்ளி ஜே.ஓடா, வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை இன்று காலை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார்.
வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பராமரிப்பது தொடர்பாகவுமே இந்தப் பேச்சுக்களின் போது முக்கியமாக ஆராயப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
புலம் பெயர் தேசத்தில் இருக்கும் தமிழ் மக்களால் நடாத்தப்பட்ட போராட்டங்கள் பயன் தரத்தொடங்கி விட்டன. இதே போக்கை முன்னகர்த்தி போர் நிறுத்தம் மற்றும் நியாயபூர்வமான நீதி சார்ந்த அதிகாரப்பரவலாக்கம் என விரிவு படுத்தி ச் செல்ல வேண்டும். அதன் மூலம் சுதந்திரமான வாழ்வை ஈழத்தமிழர்களால் இலங்கையில் நடாத்த முடியும். இதுவே இது வரை தம்முயிரையீந்த மக்களுக்கு மாவீரர்களுக்கும் கிடைக்கும் மரியாதையாகும்.
சக்கர நாற்காலியில் சென்றாலும், பதவியை விடமாட்டேன் என்கிறார். கருணாநிதிக்கு ஓய்வு தரும் சக்தி வாக்காளர்களுக்கு உண்டு.
வெளியுறவுக் கொள்கை என்றால் அது அமெரிக்க உடனான அணுசக்திக் கொள்கை எனச் செயல்பட்டதன் காரணமாக, சொந்த உறவானத் தமிழர்கள் இலங்கையிலும் மற்ற நாடுகளில் துன்பப்படும்போது, அவர்களது நலன் குறித்த வெளியுறவுக் கொள்கையை நம்மால் உருவாக்க முடியாமல் போனது.
ஜெயலலிதா சொல்லியிருக்கின்றார். அவர் சொல்வதில் என்ன தவறு? உலகம் முழுவதும் 65 வயதில் வேலை செய்வதிலிருந்து ஓய்வு எடுப்பதைக் கட்டாயமாக்கியிருக்கின்றார்கள்.
அரசியல்வாதிகளுக்கும் இப்படியொரு கட்டாயத்தைக்கொண்டு வரவேண்டும். முதுமை வந்து விட்டாலே காது கேட்பது குறைந்து விடுகின்றது.கண் பார்வை மங்கி விடுகின்றது.ஞாபக சக்தி அடியோடு ஒழிந்து விடுகின்றது. என்ணற்ற நோய்கள் வந்து விடுகின்றது. இது நான் சொல்லவில்லை.ஆய்வுகள் சொல்கின்றது.
இத்தகைய குறைபாடுகளை வைத்திருப்பவர்களால் எப்படி ஒரு துடிப்பான ஆட்சியைத் தர முடியும். இளைஞர்களுக்கு திறமையானவர்களுக்கு நாட்டில் என்ன பஞ்சமா வந்துவிட்டது?
வீட்டில் இருப்பவர்களை மட்டும் "பழசுகள்" என்று ஒதுக்கும் இளந்தலைமுறை இவர்களை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கின்றார்கள். இத்தகைய நடைமுறை கட்டாயமாக்கப்படும் போது பாராளுமன்றத்தில் நாலில் மூன்று பங்கு புது முகங்களைப் பார்க்க முடியும்.
Labels:
சமூகம்
Monday, May 4, 2009
புறம்போக்குகள் மற்றும் சிலவற்றிற்கும்

"ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனுசரைக் கடிப்பது" என்று ஒரு சொல்லடை இருக்கின்றது. போயஸ் கார்டன் அங்காள பரமேஸ்வரிக்கு ஒருவர் பதிவு போட்டிருக்கார். கருணாநிதி மகிமையே பிராப்தி என்று சாமியே வந்தது போல ஆடியிருக்கிறார்.
"ஏய்யா உங்க அரசியல் சித்து விளையாட்டுகளுக்கெல்லாம் அடிபட்டுச்செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தானா ..பலி.. உங்க ஐயா என்ன புடுங்கினார் அம்மா என்ன செய்தார் என்பதெல்லாம் .. உங்க அரசியலோடு இருக்கட்டும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் மக்கள் எல்லாம் தங்கள் உறவுகளுக்காகப் போராடுகின்றார்கள் ..உண்ணாவிரதமிருக்கின்றார்கள்.. மூன்று மணி முதுகுவலி விளையாட்டா இது? அவர்களைப்பற்றிப் பேசுவதற்கு நீ யார்?
ஜெ அப்படிச்சொன்னதால் சந்தோஷப்பட்டதில் என்னதவறு? துன்பப்பட்டு தண்ணீரில் இருந்து தத்தளிப்பவனுக்கு சிறு துரும்பு கிடைத்தாலும் மகிழ்வதில் என்னதவறு? கலைஞர் புடுங்குவார் என்று காத்திருந்து ஏமாந்தவர்கள் தானே நாங்கள்...இன்று முதுகில் குத்தியது யார்?
தமிழனை அழிக்கவென்று இந்தியப்படை அனுப்பிய சோனியாவின் முந்தானையைப் பிடித்து அலையும் கலைஞரைப்பார்த்து வெறுத்துப் போய் இருப்பதில் என்ன தவறு? யுத்தத்தை தொடர்ந்து மக்களை அழிப்பதற்கு வசதியாக த்ந்தி அடித்து தந்தி அடித்து காலம் கடத்தியது போதாதென்று மூன்று மணிநேர உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்த நாடகம் ஆடியது யார்?
மேனன் வகையறாக்கள் தூது போய் போர் நிறுத்தம் பற்றியே கேட்கவில்லை இந்தியா எப்போதும் எங்களைப் போர் நிறுத்தம் கேட்டு நிர்ப்பந்திக்கவில்லை..அதைபற்றியே பேசவில்லை என்று கோத்தபாய ராஜபக்ஸே அறிவித்திருக்கும் போது.. சிதம்பரம் சொல்லி விட்டார் .. சிறிலங்கா போர் நிறுத்தம் அறிவித்து விட்டது என்று துண்டைத்தூக்கி தோளில்ப்போட்டுக்கொண்டு நடையைக்கட்டியது யார்? எத்தனை சுத்த அயோக்கியத்தனம்...
சரி போர் நிறுத்தம் நடக்கவில்லை..தெரிந்துவிட்டது.. இந்தியா கேட்கவில்லை..அதனால் செய்யவில்லை என்று கோத்தபாய ராஜபக்ஸே சொல்லி விட்டார்.. சரி இப்போதாவது உண்மை தெரிந்ததே என்று மத்திய அரசை ஏன் போர் நிறுத்தம் கேட்டு இவர் நிர்ப்பந்திக்கவில்லை?
அவருக்கு மனமில்லை.. தமிழன் எக்கேடு கெட்டால் என்ன? தன் நலன் தன் குடும்ப நலன் மட்டுமே முக்கியம்.. தமிழன் செத்தால் என்ன? தொலைந்தால் என்ன என்பவரிடம் போய்க் கேட்பது தானே?
"ஐயா..நீ தானே தமிழன் தமிழன் என்று பேசுகிறாயே.. அதை நம்பித்தானே நாம் உன் பின்னால் வந்தோம்..எம் தமிழர் சாகிறார்களே..நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? மத்திய அரசை வற்புறுத்தி போர் நிறுத்தத்தைக் கொண்டு வா என்று கேட்பது தானே?
அங்காளபரமேஸ்வரிக்கு ஆராத்தி எடுக்கும் நேரத்தில் உங்க ஐயாவிற்கு ஒரு கோவணம் கொடுத்து அவர் மானத்தை காத்துக்கொள்ளச் சொல்லலாமே?
நாங்கள் அப்படித்தான் ஐயா..யாராவது உங்களைக்காப்பாற்றுகின்றோம் என்றால் அவர்களுக்கு நன்றி சொல்லுவோன்ம்..வாழ்த்துச் சொல்லுவோம்.. ஏனென்றால் எங்கள் உறவுகள் ஒவ்வொரு கணமும் செத்து மடிகிறார்கள்.. கண்ணீர் விட்டுக் கதறி அழுகின்றார்கள்.. எந்த தேவலோகத்திலிருந்தாவது ஒரு தேவன் வந்து காப்பாற்ற மாட்டானா என்று கதறித் துடிக்கிறார்கள் ஐயா...
உங்களைப்போல் தின்ற சோறு செரிக்க கதை எழுதவோ கவிதை எழுதவோ தந்தி அடிக்கவோ எங்களுக்கு நேரமில்லை... உங்களால் உணர்வு பெற முடியாவிட்டாலும் உங்கள் மனம் மரத்துப் போய் இருந்தாலும் எங்கள் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள்...
"தமிழீழம் வேண்டுமென்ற கனவோடு இருப்பவர்கள் அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்ஸர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வட அமெரிக்காவென அவரவர் இருக்கும் பகுதிகளில் மேடை போட்டு அங்காளப் பரமேஸ்வரியாம் அம்மன் ஸ்ரீ ஜெயாவை பூஜை செய்து வழிபட்டு.."
எவ்வளவு எகத்தாளம் உமக்கு... தமிழீழம் வேண்டுமென்பது கனவல்ல..
அப்படித்தான் செய்வோம் ஐயா ..ஜெயலலிதா மட்டுமல்ல ..நீங்களோ..அல்லது எந்த ஒரு நாய் .. சிறு ஆறுதல் வார்த்தை சொன்னால் கூட நாங்கள் ..கற்பூரம் கொழுத்தி பூசிப்போம் ஐயா.. எங்களுக்குத் தேவை போர் நிறுத்தம்..எங்கள் மக்கள் உயிர்கள் காக்கப்பட வேண்டும்.. அதுதான் எங்களுக்கு முக்கியம்..
உங்கள் அரசியலை உள் குத்துகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.. எங்கள் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.. இத்தனை தமிழ் உணர்வாளர்கள் கண்ணீர் விடுவது ....சும்மாவல்ல..உங்கள் குள்ள நரித்தலைவரின் தகிடுதத்தங்களைக் காப்பது உங்களுக்கு வேண்டுமானால் பெரிதாயிருக்கலாம்.. ஆனால் எம்மக்களின் துயரங்களை கேவலப்படுத்த வேண்டாம்..
இந்தியா சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்கிறது..ஆளணி அனுப்புகின்றது.. அதைக்கண்டித்து ஒரு பதிவு போடத் துப்பில்லை... தமிழனாக இருக்க வேண்டாம் ..ஒரு மனிதனாகவேனும் இருக்கலாம் தானே...அட்லீஸ்ட் அதற்காக முயற்சிக்கலாம் தானே...
Labels:
சமூகம்
Sunday, May 3, 2009
காமடி நாயகன் சரத்

சமத்துவ மக்கள் கட்சியாம். அது என்னங்கையா ..கம்யூனிஸ்ட் கட்சியா?..மார்க்ஸியக் கட்சியா...? அவங்க தானே சமதர்மம் எல்லாம் பேசுவாங்க..
இவரு சொல்லியிருக்கார் "பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவது ஜனநாயகத்தை விற்பதற்குச் சமம்னு "
இப்போ தான் புதிசாக் கண்டு பிடிச்சிருக்கார். அது சரி ஜனநாயகம் எங்கே இருக்கு. அப்படியிருந்தால் தி.மு.க அது போனால் அ.தி.மு.க அப்பிடின்னு வர முடியுமா?
வீட்டுக்காரம்மாவுக்கே ஜனநாயக உரிமை கொடுக்க மனசில்லாம தள்ளி வைச்சவர் இவர்.. இவர் ஜனநாயகம் பேசுறாரு..
சொந்தக் குடும்பத்தை பெற்ற மக்களைப் பற்றி சிந்திக்க முடியாத , விருப்பமில்லாத இவர்கள் மக்களைப் பற்றிச் சிந்திப்பார்கள் என்று எப்படி நம்புவது? தனி மனித ஒழுக்கமும் ஜனநாயகத்தில் ஒன்று...
கட்சிக்கு என்ன கொள்கைன்னே தெரியவில்லை. முதலில் கலைஞரோடு இருந்தார் பின்னர் ஜெயலலிதாவோடு இருந்தார்... இப்போது அவர் எங்கேயிருக்கார்னே தெரியவில்லை. காங்கிரஸை எதிர்கிறார். பா.ஜ.கவுக்கு ஓட்டுக் கேட்கிறார்.
எதை வைத்து மக்களிடம் ஓட்டுக் கேட்கின்றார்கள் இவர்களெல்லாம். இந்த சினிமா மாயையை முதலில் ஒழிக்கணும்... அது தான் ஜனநாயகம்னு அவரிடம் யாராவது சொல்லுங்கள்..
"தற்போது மக்களை பற்றி யாரும் சிந்திப்பதில்லை. பதவி சுகம் அனுபவிப்பதிலேயே குறியாக உள்ளனர். பணத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்."
இதுதானே உங்க நோக்கமும்... அப்போ உங்களுக்குத் தான் முதல் சவுக்கடி.. சரியாத்தான் சொல்லியிருக்கீங்க..
Labels:
சமூகம்
Friday, May 1, 2009
உடன் பிறப்புகளின் வேஷம்
கலைஞரின் உண்ணாவிரதம் சாதித்தது என்ன?
பலரும் அதன் சாதக பாதக அனியாயங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை கருணாநிதியும் ராஜபக்சவுமே அறிவர். சோனியா சூத்திரதாரி என்றால் இவர்கள் ஏவல் கம்புகள்.
கலைஞரின் பேச்சை மதிக்காத (இருக்காதா பின்னே? எத்தனை அவமானம். ஆனானப்பட்ட கலைஞரே மூக்குடைபட்டார் என்று தானே உடன் பிறப்புகள் எல்லாம் வெறுத்துப் போய் இருக்கின்றார்கள்)
காங்கிரஸுடன் கூட்டணியில் இன்னும் தன்மானத்தலைவன் கலைஞர் கருணாநிதி இருக்கின்றார் என்பதே ஒம்பதாவது உலக அதிசயமாக தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பேசப்படுகின்றது.
முறத்தால் புலி விரட்டிய வீரத்தமிழ்ப் பெண்ணின் பரம்பரையில் பால் குடித்து வளர்ந்த கலைஞர் இன்னும் கூட்டணியில் இருக்கின்றார் என்பதில் அரசியல் சாணக்கியம் ஒழிந்திருபதாக வாதிடும் உடன் பிறப்புகள் அந்த மர்மத்தை அறிந்திட ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உரிக்க உரிக்க ஒன்றுமில்லாது போகும் வெங்காயம் கலைஞரின் தந்திரங்கள் என்றறியாது அவர்கள் ஆயுளுக்கும் உரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.... பாவம் .
உழைத்த களைப்பில் உறங்கி விடாது கடுமையாக உழைத்திட வேண்டுமென்ற கலைஞரின் வேண்டுகோலை (இது எழுத்துப் பிழையல்ல) பிடித்து கழகப் பெருமைகள் பழைய பீற்றல்கள் பற்றி மொக்கைப் பதிவு போடுவது , கலைஞருக்கும் கழகத்திற்கும் எதிராக எழுதுபவர்களின் பதிவில் எதிர்ப் புள்ளடி குத்துவது, வயது போன பதிவர்கள் அந்த நாள் கலைஞரால் மண்டைக்குள் அடித்து அனுப்பிய மூளைச் சலவை சோப்பில் உதிர்ந்த மயிர்களை ஒவ்வொன்றாக வெளியெடுத்து பாலபாடம் நடத்திக் கொண்டிரு்ப்பது போன்ற இன்னோரன்ன காரியங்களில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் யாருமே இதுவரை இறந்து கொண்டிருக்கும் எம் ஈழத்துச் சகோதரர்களுக்கு கலைஞர் இவ்வாறு துரோகம் செய்வது சரியில்லை என்று கூறவில்லை. அவர்களின் பகுத்துணரும் தன்மையைத் தானே உணர்ச்சி ஏற்றி ஏற்றி கலைஞரும் மற்றவரும் வற்றக் காய்ச்சி விட்டார்களே. இப்போது இருப்பது உடன் பிறப்புகள் என்ற பெயரில் வெற்றுப் பித்தளைப் பாத்திரம் தானே.
வெற்றுப் பாத்திரத்தில் எதைப்போட்டாலும் ஏற்றுக்கொள்ளும். அதனுள் போடப்படும் பொருளின் கார அமிலத்தன்மைகளை அது எப்படி அறியும். அது உணர்வற்ற வெற்றுப் பித்தளைப் பாத்திரம் தானே. சமயத்தில் குப்பைகளையும் சுமந்து வந்து அவை கொட்டும். அதைப்பற்றியும் அவற்றிற்கு ஏது கவலை.
எல்லாப்பொழுதிலும் ஒன்றை நாம் சிந்திக்க மறந்து விடுகின்றோம். தலையிடியும் காச்சலும் தனக்குத் தனக்கு வந்தால்த் தெரியும் என்று தமிழில் வழக்கு ஒன்று உண்டு. ஈழத்தின் துயரங்கள் எதிரிக்கும் வேண்டாம் விட்டுவிடுவோம். மும்பையில் நடந்தது போலவோ டில்லியில் நடந்தது போலவோ ஒன்று தமிழகத்தில் நடந்தால் அப்போது எமக்கெல்லாம் உணர்வு வரும்.
இரத்தம் சிவப்பு என்பதுவும் இழப்பு பெருந்துயரம் என்பதுவும் அப்போது உறைக்கும். கண்டு கொள்ளாத அரசு பற்றியும் ஆட்சி பற்றியும் கோபம் வரும். மனிதச் சங்கிலி நடத்துவதும் ,தந்தி அடிப்பதுவும் , மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருப்பது பற்றியும் கிலாகித்துப் பதிவு எழுதவா முடியும்?
எல்லாவற்றையும் விட்டுவிட்டு உடனே நடவடிக்கை எடுங்கள் என்று கேட்கத் தோன்றாது? வீதியில் இறங்கிப்போராடத் தோன்றாது? ஏன் இப்போது மட்டும் அவ்விதம் தோன்றவில்லை. அவர்கள் வேறு நாங்கள் வேறா? தொப்பூள் கொடி உறவு ,சகோதரர்கள் என்பதெல்லாம் எங்களை மற்றவர்கள் மெச்ச வேண்டுமென்பற்காகவா?
கிழச்சிங்கம் உறுமியதா இந்த உண்ணாவிரதம்? அது ஈழத்துச் சகோதரர்களை வயிறு முட்டத் தின்றுவிட்டு ஏப்பம் விட்டது போலல்லவா எனக்குப் பட்டது. இன்னும் இன்னும் இரத்தத்தின் சுவை தேடி ஊளையிட்டது போலல்லவா தோன்றியது.
எப்படி உங்களால் இப்படியெல்லாம் காரியமே இல்லாத ஒன்றிற்கான காரணத்தைக் கற்பிதம் செய்ய முடிகின்றது. தலை கிழிந்து கிடந்ததும் இரத்தம் இறைந்து இறந்ததும் எம் சொந்தமில்லதவிடத்து இது தானா நமது பிரதி பலிப்பு.
இது தானா நாம் வாய் கிழயப் பேசும் மனிதாபி மானம். இது தானா? வேதங்களும் ஆகமங்களும் தோன்றிய மண்ணின் செயற்பாடு. அஹிம்சையைப் போதித்த நிலம் தானா இது?
கலைஞரோடு ஏனிந்தக் கோபம்? நிறையக் காரணங்கள் இருக்கின்றது. இன்றைய தமிழகத்தின் அதிகாரம் அவரிடம் இருக்கின்றது. மத்தியில் இருக்கும் காங்கிரஸின் கடிவாளம் அவரிடம் இருக்கின்றது. ஏதாவது செய்து கலைஞர் எங்களைக்காப்பார் என்ற நம்பிக்கை ஈழத் தமிழ் மக்களிடம் இருக்கின்றது. இத்தனை இருந்தும் கலைஞர் ஒரு துரும்பைத்தன்னும் தூக்கிப் போடவில்லை.
உடன்பிறப்புகளோடு ஏன் இந்தக் காய்ப்பு? அதற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றது. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. மறுதலையாக குடிகள் எவ்வழி அரசன் அவ்வழி. உடன் பிறப்புகள் கலைஞரின் வாக்கு வங்கிகள். அவர் எப்போதும் மக்களை நம்புவதில்லை. உடன்பிறப்புகளிற்கு காயடித்து கடைசிச் சொட்டு இரத்தம் காயும் வரை வேலை வாங்கும் தந்திரம் தெரிந்தவர் கலைஞர். அடுத்த ஐந்தாண்டுகள் அவர்களை மறந்திருக்கவும் பின் நினைத்துக் கொள்ளவும் தெரிந்தவர்.
அதனாலேயே அவர் தலைவராய் இருக்கின்றார். உடன்பிறப்புகள் கைத்தடிகளாக இருக்கின்றார்கள்.
ஆனால் இன்றுள்ள பிரச்சினை உங்களைப்போல இரத்தமும் சதையும் உள்ள சகமனிதனின் சாவு. இது கட்சிப்பிரச்சினை அல்ல. தேர்தல் விடயமும் அல்ல. மனிதாபிமானப் பிரச்சினை.
தேவை உடனடி யுத்த நிறுத்தம். அனியாய உயிர் இழப்பின் நிறுத்தம். கலைஞரால் இதைச் செய்ய முடியும் . அதுவும் உடனடியாகவே. கலைஞர் நிர்ப்பந்தம் செய்தால் காங்கிரஸ் மீற முடியாது. வடக்கில் கூட்டணிக்கட்சிகளும் காங்கிரஸைப் பெருமளவில் கை விட்ட நிலையில் தெற்கு மாநிலங்களின் ஆதரவின்றி காங்கிரஸ் ஆட்சியில் இருக்க முடியாது என்ற நிலையில் இது இன்னும் சாதகமானது.
கலைஞருக்கு கருணை இருக்கவில்லை. அதைத்தட்டிக்கேட்க உடன் பிறப்புகளுக்கு மனமிருக்கவில்லை.
இது இன்றும் இறந்து கொண்டிருப்பவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வு. அதை பார்க்கத்தான் அதிகம் பேர் உயிருடன் இல்லை. உயிருடன் இருப்பவர்களும் இங்கு உணர்வுடன் இல்லை.
பலரும் அதன் சாதக பாதக அனியாயங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை கருணாநிதியும் ராஜபக்சவுமே அறிவர். சோனியா சூத்திரதாரி என்றால் இவர்கள் ஏவல் கம்புகள்.
கலைஞரின் பேச்சை மதிக்காத (இருக்காதா பின்னே? எத்தனை அவமானம். ஆனானப்பட்ட கலைஞரே மூக்குடைபட்டார் என்று தானே உடன் பிறப்புகள் எல்லாம் வெறுத்துப் போய் இருக்கின்றார்கள்)
காங்கிரஸுடன் கூட்டணியில் இன்னும் தன்மானத்தலைவன் கலைஞர் கருணாநிதி இருக்கின்றார் என்பதே ஒம்பதாவது உலக அதிசயமாக தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பேசப்படுகின்றது.
முறத்தால் புலி விரட்டிய வீரத்தமிழ்ப் பெண்ணின் பரம்பரையில் பால் குடித்து வளர்ந்த கலைஞர் இன்னும் கூட்டணியில் இருக்கின்றார் என்பதில் அரசியல் சாணக்கியம் ஒழிந்திருபதாக வாதிடும் உடன் பிறப்புகள் அந்த மர்மத்தை அறிந்திட ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உரிக்க உரிக்க ஒன்றுமில்லாது போகும் வெங்காயம் கலைஞரின் தந்திரங்கள் என்றறியாது அவர்கள் ஆயுளுக்கும் உரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.... பாவம் .
உழைத்த களைப்பில் உறங்கி விடாது கடுமையாக உழைத்திட வேண்டுமென்ற கலைஞரின் வேண்டுகோலை (இது எழுத்துப் பிழையல்ல) பிடித்து கழகப் பெருமைகள் பழைய பீற்றல்கள் பற்றி மொக்கைப் பதிவு போடுவது , கலைஞருக்கும் கழகத்திற்கும் எதிராக எழுதுபவர்களின் பதிவில் எதிர்ப் புள்ளடி குத்துவது, வயது போன பதிவர்கள் அந்த நாள் கலைஞரால் மண்டைக்குள் அடித்து அனுப்பிய மூளைச் சலவை சோப்பில் உதிர்ந்த மயிர்களை ஒவ்வொன்றாக வெளியெடுத்து பாலபாடம் நடத்திக் கொண்டிரு்ப்பது போன்ற இன்னோரன்ன காரியங்களில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் யாருமே இதுவரை இறந்து கொண்டிருக்கும் எம் ஈழத்துச் சகோதரர்களுக்கு கலைஞர் இவ்வாறு துரோகம் செய்வது சரியில்லை என்று கூறவில்லை. அவர்களின் பகுத்துணரும் தன்மையைத் தானே உணர்ச்சி ஏற்றி ஏற்றி கலைஞரும் மற்றவரும் வற்றக் காய்ச்சி விட்டார்களே. இப்போது இருப்பது உடன் பிறப்புகள் என்ற பெயரில் வெற்றுப் பித்தளைப் பாத்திரம் தானே.
வெற்றுப் பாத்திரத்தில் எதைப்போட்டாலும் ஏற்றுக்கொள்ளும். அதனுள் போடப்படும் பொருளின் கார அமிலத்தன்மைகளை அது எப்படி அறியும். அது உணர்வற்ற வெற்றுப் பித்தளைப் பாத்திரம் தானே. சமயத்தில் குப்பைகளையும் சுமந்து வந்து அவை கொட்டும். அதைப்பற்றியும் அவற்றிற்கு ஏது கவலை.
எல்லாப்பொழுதிலும் ஒன்றை நாம் சிந்திக்க மறந்து விடுகின்றோம். தலையிடியும் காச்சலும் தனக்குத் தனக்கு வந்தால்த் தெரியும் என்று தமிழில் வழக்கு ஒன்று உண்டு. ஈழத்தின் துயரங்கள் எதிரிக்கும் வேண்டாம் விட்டுவிடுவோம். மும்பையில் நடந்தது போலவோ டில்லியில் நடந்தது போலவோ ஒன்று தமிழகத்தில் நடந்தால் அப்போது எமக்கெல்லாம் உணர்வு வரும்.
இரத்தம் சிவப்பு என்பதுவும் இழப்பு பெருந்துயரம் என்பதுவும் அப்போது உறைக்கும். கண்டு கொள்ளாத அரசு பற்றியும் ஆட்சி பற்றியும் கோபம் வரும். மனிதச் சங்கிலி நடத்துவதும் ,தந்தி அடிப்பதுவும் , மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருப்பது பற்றியும் கிலாகித்துப் பதிவு எழுதவா முடியும்?
எல்லாவற்றையும் விட்டுவிட்டு உடனே நடவடிக்கை எடுங்கள் என்று கேட்கத் தோன்றாது? வீதியில் இறங்கிப்போராடத் தோன்றாது? ஏன் இப்போது மட்டும் அவ்விதம் தோன்றவில்லை. அவர்கள் வேறு நாங்கள் வேறா? தொப்பூள் கொடி உறவு ,சகோதரர்கள் என்பதெல்லாம் எங்களை மற்றவர்கள் மெச்ச வேண்டுமென்பற்காகவா?
கிழச்சிங்கம் உறுமியதா இந்த உண்ணாவிரதம்? அது ஈழத்துச் சகோதரர்களை வயிறு முட்டத் தின்றுவிட்டு ஏப்பம் விட்டது போலல்லவா எனக்குப் பட்டது. இன்னும் இன்னும் இரத்தத்தின் சுவை தேடி ஊளையிட்டது போலல்லவா தோன்றியது.
எப்படி உங்களால் இப்படியெல்லாம் காரியமே இல்லாத ஒன்றிற்கான காரணத்தைக் கற்பிதம் செய்ய முடிகின்றது. தலை கிழிந்து கிடந்ததும் இரத்தம் இறைந்து இறந்ததும் எம் சொந்தமில்லதவிடத்து இது தானா நமது பிரதி பலிப்பு.
இது தானா நாம் வாய் கிழயப் பேசும் மனிதாபி மானம். இது தானா? வேதங்களும் ஆகமங்களும் தோன்றிய மண்ணின் செயற்பாடு. அஹிம்சையைப் போதித்த நிலம் தானா இது?
கலைஞரோடு ஏனிந்தக் கோபம்? நிறையக் காரணங்கள் இருக்கின்றது. இன்றைய தமிழகத்தின் அதிகாரம் அவரிடம் இருக்கின்றது. மத்தியில் இருக்கும் காங்கிரஸின் கடிவாளம் அவரிடம் இருக்கின்றது. ஏதாவது செய்து கலைஞர் எங்களைக்காப்பார் என்ற நம்பிக்கை ஈழத் தமிழ் மக்களிடம் இருக்கின்றது. இத்தனை இருந்தும் கலைஞர் ஒரு துரும்பைத்தன்னும் தூக்கிப் போடவில்லை.
உடன்பிறப்புகளோடு ஏன் இந்தக் காய்ப்பு? அதற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றது. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. மறுதலையாக குடிகள் எவ்வழி அரசன் அவ்வழி. உடன் பிறப்புகள் கலைஞரின் வாக்கு வங்கிகள். அவர் எப்போதும் மக்களை நம்புவதில்லை. உடன்பிறப்புகளிற்கு காயடித்து கடைசிச் சொட்டு இரத்தம் காயும் வரை வேலை வாங்கும் தந்திரம் தெரிந்தவர் கலைஞர். அடுத்த ஐந்தாண்டுகள் அவர்களை மறந்திருக்கவும் பின் நினைத்துக் கொள்ளவும் தெரிந்தவர்.
அதனாலேயே அவர் தலைவராய் இருக்கின்றார். உடன்பிறப்புகள் கைத்தடிகளாக இருக்கின்றார்கள்.
ஆனால் இன்றுள்ள பிரச்சினை உங்களைப்போல இரத்தமும் சதையும் உள்ள சகமனிதனின் சாவு. இது கட்சிப்பிரச்சினை அல்ல. தேர்தல் விடயமும் அல்ல. மனிதாபிமானப் பிரச்சினை.
தேவை உடனடி யுத்த நிறுத்தம். அனியாய உயிர் இழப்பின் நிறுத்தம். கலைஞரால் இதைச் செய்ய முடியும் . அதுவும் உடனடியாகவே. கலைஞர் நிர்ப்பந்தம் செய்தால் காங்கிரஸ் மீற முடியாது. வடக்கில் கூட்டணிக்கட்சிகளும் காங்கிரஸைப் பெருமளவில் கை விட்ட நிலையில் தெற்கு மாநிலங்களின் ஆதரவின்றி காங்கிரஸ் ஆட்சியில் இருக்க முடியாது என்ற நிலையில் இது இன்னும் சாதகமானது.
கலைஞருக்கு கருணை இருக்கவில்லை. அதைத்தட்டிக்கேட்க உடன் பிறப்புகளுக்கு மனமிருக்கவில்லை.
இது இன்றும் இறந்து கொண்டிருப்பவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வு. அதை பார்க்கத்தான் அதிகம் பேர் உயிருடன் இல்லை. உயிருடன் இருப்பவர்களும் இங்கு உணர்வுடன் இல்லை.
Labels:
சமூகம்
Thursday, April 30, 2009
பதிவுலகமும் தேர்தலும்

பதிவுலகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கின்றது. ஈழத்துப்பிரச்சினை முழு அளவில் இத்தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது. அது பற்றிய நம்பிக்கையும் பயமும் நம்பிக்கையீனமும் கொண்டதாக அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது. மகிழ்ச்சியும் காழ்ப்பும் வெறுப்பும் கொண்டதான உணர்ச்சிகள் காட்டமாகவும் மிதமாகவும் வெறுப்பாகவும் வெளிக்காட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நமக்கேன் வம்பென்று ஒதுங்கிப்போபவர்களையும் காணமுடிக்கின்றது. அப்படிப்பட்டவர்கள் கும்மி கும்மாளம் அவியல் தொவையல் என்று பதிவுகளைப்போட்டு காலந் தள்ள நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள்.
ஒரு காலத்தில் தேனீக்கள் போல மொய்க்கப்பட்டவர்கள் எல்லாம் ஈயடிக்கும் பரிதாபம் எலக்ஷன் வரை நீடிக்கும் என்றே தோன்றுகின்றது. அந்தளவிற்கு உணர்ச்சிகளின் குவியலாகப் பார்க்கப் படும் இந்த எலக்ஷன் காலத்தில் ஈழத்திலும் தமிழகத்திலும் இழந்த உயிர்கள் மிக அதிகம்.
அதுமட்டுமில்லாத சிறப்பு குற்றச்சாட்டு இந்தப் போரின் பின்னணியில் இந்தியா பங்கு கொண்டிருக்கின்றது என்பது. இந்தியாவின் பங்களிப்பை தேர்தலின் பொருட்டு மறைத்தும் உயர்த்தியும் வெளிப்படுத்தும் தலைவர்களால் தேர்தல் மேடைகளில் சூடு பறக்கின்றது. தமிழக மக்கள் பிரச்சினையெல்லாம் அடிபட்டுப்போகும் அளவில் ஈழப்பிரச்சினை என்ற ஒரே அச்சிலேயே இந்தத்தேர்தல்க் களம் சுற்றிக்கொண்டிருக்கின்றது.
பதிவர்களில், கட்சிகளின் நீண்ட நாள் தொண்டர்கள் நம்பிய கொள்கைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்க பொதுவில் இருப்பவர்கள் கள நிலைக்கேற்ப கட்சி மாறிக்கொண்டிருக்கின்றார்கள். கட்சித் தொண்டர்களுக்கு அடித்து ஆட இடமில்லாது அரைத்தமாவை அரைக்கும் துர்ப்பாக்கியம் நேர்ந்திருக்கின்றது.
இன்றைய நிலை மட்டுமில்லாது அன்றைய "மகிழ்ச்சிக்கால" கட்சி அனுபவங்களையும் இரை மீட்ட முற்படுகின்றார்கள். அவர்களுடைய மனமும் நிறமும் ஒரே இடத்தில் ஊறியிருப்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியது தான். கட்சி நிலைகளை செயற்பாடுகளை வக்காலத்து வாங்குவதற்கு முன்னால் ஈழத்தமிழர் பிரச்சினையில் அவர்கள் நிலைப்பாடு எடுக்க வேண்டிய அதிமுக்கிய நடவடிக்ககள் பற்றிய அபிப்பிராயங்களை முன் வைத்தால் கட்சி தாண்டிய உண்மை முகத்தைப்புரிந்து கொள்ள முடியும். அப்படி யாரும் வெளிவரத் தயங்குவது அவர்களைப் பற்றிய புரிதலில் மயக்கத்தை ஏற்படுத்துகின்றது.
பதிவர்களுக்குத் தீனி போடும் வகையிலேயே அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. காங்கிரஸ்-தி.மு.க, அ.தி.மு.க-ம.தி.மு.க கூட்டணியே பதிவுகளில் முழுமையான தாக்கம் செலுத்துகின்றன. பா.ஜ.க, விஜய காந்த் மற்றும் உதிரிகளாக தேர்தல் களம் காண்போர் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையே இங்கு காணப்படுகின்றது.
உதிரிக்கட்சிகளின் தாக்குதலும் குற்றச்சாட்டுகளும் அவர்களைப்போலவே இடையிடையே எரியும் தீக்குச்சிகளைப்போல எரிந்து அணைந்து போகின்றன செய்திகளில்.
சுவாரஸ்யம் இரு பெரும் கூட்டணிக்கட்சிகளைச் சுற்றியே ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் மேலுள்ள ஈழ யுத்தம் சார்ந்த குற்றச்சாட்டானது அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க வை சுதந்திரமாக தேர்தல் யுத்தத்தைச் சந்திக்க முடியாது முடக்கிப் போட்டிருக்கின்றது. தமிழர்களோடு எப்போதும் "தமிழால்" பேசும் கலைஞர் இப்போது தேசியத்தை அடைகாக்கும் வேலையைச் செய்யும் இக்கட்டில் மாட்டிக்கொண்டிருக்கின்றார். அப்படியில்லையாயின் கலைஞரை அடிக்க இங்கு ஆளே இருக்க மாட்டார்கள். காங்கிரஸ் என்ற மறைப்பைக் கண்ணில் கட்டிய குதிரையின் வேகம் போல நிதானமாக ஓடுவதே கலைஞருக்கு விதிக்கப்பட்டிருக்கின்றது.
தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிய காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட "பிரபாகரன் என் நண்பர்"போன்ற சாணக்கிய ராஜதந்திர தொலை நோக்கு ஆயுதங்களைப் பறியில் போட வைத்து விட்டது காங்கிரஸ். "தனித்தமி்ழீழம் " அமைத்துக் கொடுப்பேன் என்று கர்ஜித்துக் களம் இறங்கியுள்ள ஜெயலலிதா என்ற புலியைக் களத்தில் சந்திப்பதற்கு கலைஞரிடம் ஆயுதங்கள் இல்லாது தற்காப்புச் சண்டையில் இறங்கியுள்ளார்.
ஆயுதங்கள் வேண்டுமெனின் தடைக்கல்லாய் இருக்கும் காங்கிரஸைக் கழட்டி விடவேண்டும் .அதற்கு காலமும் நேரமும் மனமுமில்லாது விதியின் வழியில் கலைஞர் செல்ல முடிவு செய்திருப்பது உடன் பிறப்புகளை கலக்கமடையச் செய்திருக்கின்றது.
அந்தக்கலக்கமே அபி அப்பா போன்ற பதிவர்களை "உடன் பிறப்புகளுக்கு உற்சாக பாடம்" போன்றவற்றை பாகம் பாகமாக எழுத வைத்திருக்கின்றது. தி.மு.க வின் கல்தோன்றாக் மண்தோன்றாக் காலத்துப் பெருமைகளை தூசு தட்ட வைத்திருக்கின்றது. வழமையாக கலஞர் தான் இவ்வகை "ஞாபகப் படுத்தும் " கடிதங்களை எழுதுவார். இப்போது தொண்டர்களும் கடிதம் எழுதப் பழகிக் கொள்கின்றார்கள். அவ்வளவிற்கு அவர்கள் "சைடு வீக்கு".
அ.தி.மு.க விற்கு அந்தமானில காத்தடிச்சா கோடியாக் கரையில மழை பெய்யிற மாதிரி தி.மு.க விற்கு எதிரான மழை போயஸ் கார்டனில் கொட்டி செழிப்பூட்டிக் கொண்டிருக்கின்றது. அதற்கு சசி ,ரோசாவசந் , நிலவுப் பாட்டு போன்றோரின் பதிவுகளே சாட்சி. ஏன் அ.தி.மு.க விற்கு வாக்குப் போட வேண்டுமென்ற கேள்வியை முன் வைத்து இவர்களில் யாரும் வாக்கு கேட்கவில்லை. ஆனால் காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டிய காரணங்களை அடுக்கி வைத்திருக்கின்றார்கள். கழுதையோடு சேர்ந்த வாலாக தி.மு.க விற்கும் இது எதிராகப் போய் விடுகின்றது.
அதே நேரம் ஈழத்தமிழ் பதிவர்களான பருத்தியன், கவிஷன் போன்றோரின் தம் மக்கள் கொல்லப்படும் நேரத்திலும் "கண்டு கொள்ளாது" இருந்த கலைஞர் மீது ஏற்பட்ட மனக்குறை ஜெயலலிதாவிற்கு ஆதரவாகப் பதிவுக் களத்தை அதிரடித்துக் கொண்டிருக்கின்றது.
பதிவுலகமும் இன்று பிரச்சாரத்தில் நடுத்தர மேல்தட்டு மக்களால் கண்டு கொள்ளப்படும் பிரச்சார ஊடகம் என்ற அளவில் இதன் தாக்கமும் பெரிதாக இருக்கும். எழுதுபவர்களை விட பதிவுலக பதிவுகளை வாசிக்கும் மக்கள் தொகை மிக அதிகம் என்பதால் இதன் தாக்கமும் பெரிய அளவில் இருக்கும். பெரும் பத்திரிகை ஊடகங்களும் பெரும் எழுத்தாளர்களும் பதிவுலகில் கால் வைத்து இந்த ஜோதியில் கலந்திருப்பதே இதை உறுதி செய்கின்றது.
உலகத்தின் எந்தப்பகுதியில் இருப்பவரும் இன்று தமிழகத் தேர்தலில் கருத்தும் அபிப்பிராயமும் சொல்லமுடிந்ததே பதிவு்லகின் ஆளுமைக்கும் அது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்திற்கும் சான்றாகும்.
குறிப்பு: இங்கு குறிப்பிடப் பட்டிருக்கும் பதிவர்களின் பெயர்கள் நட்பு அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. விருப்பமற்றவர்கள் தெரிவித்தால் மன்னிப்புடன் பெயர்கள் அகற்றப்படும். பலரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லையென்பதால் அவர்கள் பங்களிப்புகள் குறைத்து மதிப்பிடப்படுவதாக கொள்ளல் ஆகாது.
Labels:
சமூகம்
Wednesday, April 15, 2009
மு.க. அழகிரியும் மன உழைச்சலும்

கடைசி வரை ரெளடியாக வாழ் நினைத்தவர் இடையில் நல்ல பிள்ளையாக மாற அல்ல நடிக்க முன்வந்தாலே அதிலுள்ள சிரமம் கொடுமையானது। இன்று அதுதான்அழகிரியின் நிலை.
குண்டர்களை ஏவி விட்டு காரியமாற்றிப் பழக்கப்பட்டவர், இன்று வளைந்து குழைந்து என்னவெல்லாமோ செய்ய வேண்டியிருக்கின்றது. குவாட்டரிலும் பிரியாணியிலும் வாக்குகளைக் குவிக்கலாம் என்கின்றது ஜால்ரா தரப்பு .
ஆனால் இந்தத் தேர்தல் அழகிரியைப் பொறுத்தளவில் மிக முக்கியமானது। ரெளடீயிஸத்தில் பெற்றுக்கொண்ட மேல் நிலையையும் அதிகாரத்தையும் சட்டரீதியில் தக்க வைத்தல் மற்றும் பாகப் பிரிவினைக்கு முகம் கொடுக்க முற்படும் கட்சியில் அதிக பங்கு பெறுதல்... என்ற இந்த இரண்டு நிலையிலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி இந்த தேர்தல் வெற்றிக்கு உண்டு।
நல்லவனாக நடிக்கும் இந்தப் புது அவதாரத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்களோ என்ற தயக்கம் தேர்தலில் குதிப்பதை இது வரை தள்ளிப்போட வைத்தது। ஆனால் இனி மேலும் தள்ளிப்போடும் அவகாசத்தை கலைஞரின் உடல் நலம் அவருக்கு விட்டு வைக்கவில்லை।
அடுத்த மாநிலத் தேர்தலை கலைஞர் இல்லாது எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தி।மு।க விற்கு எழலாம் என்ற சமிக்ஞை இப்போதே கிடைத்திருக்கின்றது। கலைஞரின் வயதும் உடல் நிலையும் அவ்வாறான முடிவிற்கு வர தி। மு।க வின் பங்காளிகளைத் தூண்டியுள்ளது।
அரசியல் அநாமதேயமாக இருப்பதில்லை என்ற முடிவு நேரடி அரசியலில் குதிக்க வைத்திருக்கின்றது।
பட்டி தொட்டி எங்கும் தேர்தல் பிச்சாரம் முடுக்கி விடப்பட்டிருக்கின்றது। பணப்பட்டுவாடாவும் ஜோராக நடைபெறும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை। மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தைக் காட்டுவதன் மூலம் மண்ணுக்கும் விண்ணுக்குமான பிரமாண்ட அவதாரம் எடுப்பதற்குமான முஸ்தீபுகளில் மதுரை தி।மு।க அழகிரி வட்டாரம் இறங்கியுள்ளது। இது வருங்கால அரசியலில் பலரை அடிபணிய வைக்க உதவும்.
முதல் ஜனநாயக வழியாக தந்தை வழியில் "அன்பான வேண்டுகோள் " தலைப்பிட்டு "உங்கள் வீட்டு பிள்ளை" என்று பிட் நோட்டீஸ் மதுரை எங்கும் வினியோகிக்கப்படுகின்றது।
அடுத்து தன் கட்சிக்காரர்களையே தாக்கி விட்டு எதிர்த்தரப்பில் பழியைப் போட்டு தந்தை வழியில்த் தான் இதுவும்- "ஐயோ என்னைக் கொல்லுராங்களே"- பாணியில் அனுதாப அலையைத் திரட்டுவது। ஏற்கனவே கட்சி அலுவலம் ஒன்று தீயிடப்பட இரண்டு மூன்று தி। மு।க அனுதாபிகளுக்கு தர்ம அடியும் விழுந்திருக்கின்றது। மக்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள் என்பதைப் புரிந்து வைத்திருக்கின்றார்கள்.
"தங்கள் வீட்டு ரெளடி" ஆக இருந்தவரை "தங்கள் வீட்டு பிள்ளை" ஆக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று பார்ப்போம்।
வாக்காளர் பட்டியலுடன் கிராமவலம் வரத் தொடங்கியிருக்கின்றார்। மதுரை தொகுதியில் இருப்பவர்கள் உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கின்றது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்। கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் நேரம் ... உங்கள் பெயர் தவறி விடப் போகின்றது.
மு।க। அழகிரியுடனான நேரடிப் போட்டியிலிருப்பவர்கள் படு வீக்। இதுவும் சேர்ந்து மதுரையை உதய சூரியனுக்கு தாரை வார்த்துக் கொடுக்கக் கூடும்।
பாடம் 1: நல்லவராய் இருப்பதென்பது ரெளடியாய் இருப்பதை விட கொடுமையானது। மதுரையையே ஆளும் சொக்கநாதருக்கு வந்த சோதனையைப் பார்த்தீர்களா?
பாடம்2: மக்களுக்கு ! இப்படிப்பட்டவர்களை தெரிவு செய்யாது விடுவது அரசியலைச் சுத்தப்படுத்தும்। செய்வார்களா? ........ அல்ல செய்ய வேண்டும்
Labels:
சமூகம்
Subscribe to:
Posts (Atom)