ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, May 13, 2009


சுயம்பு


இருட்டில் எல்லாம் அடிக்க வேண்டாம் என்று பார்க்கின்றேன். சுயம்பு என்று அடிக்கும் போதே எயும்பு என்று வருகின்றது. அதனால் ஒன்றும் குறைவில்லை. சுயமாய் இருப்பது மேலா (கூனிக்குறுகாது... பாருங்கள் மீண்டும் படிக்கும் போது தான் எனக்கே இந்த நீட்டல் அழித்தல் ஐடியா வருகின்றது.. முதலில் வாசித்தவர் முக்காட்டைப் போட்டுக் கொள்ளட்டும்) எலும்போடு இருப்பது மேலா என்று படுகின்றது.

'விபச்சாரிக்குப் பிறந்தவன் நான்" என்று ஒரு 35 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் எழுதியது தான் என்னை நிம்மதியாகத் தூங்க விடாது செய்து கொண்டிருக்கின்றது. துட்டனாய் இருந்தால் தூர விலகிக்கொள்ளலாம். இந்த வாக்கு மூலம் உண்மையாய் இருந்தால்.. அந்தச் சூடு தான் என்னைத் தீய்த்துப் போக வைக்கின்றது. எடுத்த எடுப்பில் படிக்க முடியாது கோபப்படும் எழுத்து. நானாய் இருந்தாலும் யாராய் இருந்தாலும் .."அட கோவேறு கழுதையே .." என்று...அப்படித்தான் கோபப்பட வைக்கும். கோவேறு கழுதை..பிரித்துப்பாருங்கள்..கோவை ஏறிய கழுதை.. கோ அர்த்தம் என்ன தெரியும் ,,கழுதை தெரியும்.. நீங்கள்... நான்... கோவேறு ..கழுதை .அர்த்தம் தெரியாத படியால்த் தான் இத்தனை பாடு...

கிட்டத்தட்ட சாரு நிவேதிதா... ரேஞ்சுக்கு வந்து விட்டோம். இது வரை அவர் நூல்கள் ஒன்றும் படித்திருக்கவில்லை. 35 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறாராம்.. ஒதுக்கப்பட்ட பாமரனின் குரல். வாசிப்பில் ஒன்றிம் சோடை போனவனல்ல.. இருந்தாலும்

சீடனின் முதிர்ச்சி அறிந்து தான் குரு காட்சி கொடுப்பாராம் ..ஒரு உதாரணம் தான்..அதாவது தேவைப்படும் போது தான் காட்சிகள் உண்டாகும். நமக்கும் அப்படித்தான் போலும். சாருவின் "பயணக் கட்டுரைகள்" பற்றி ஒரு பதிவர் எழுதியிருந்தார் நண்பன் ஒருவன் சொன்னானாம் "அதிலென்ன இருக்கப்போகின்றது எங்கெங்கே -க் பண்ணினேன் எங்கெங்கு குடித்தேன் என்று மட்டும் தான் இருக்கும்" என்று . இதையெழுதவா "சாருவின் பயணக் கட்டுரைகள்" தலைப்பு

நானும் எழுதியிருந்தேன் "சாருவும் நானும்" என்று அத்தனை தூரம் அந்த "நான்" என்னை துரத்தியடித்திருக்கின்றது. தன்னை வழி படும் "நான்"களால்... என்னைப்போல ..தாங்கிக் கொள்ள முடியாது என்று தான் தெரிகின்றது. இவ்வளவிற்கும் என்னுடைய"நான்களை" முழுவதுமாக உடைக்கப் பயந்திருக்கும் "நான்" உண்மையிலேயே கோழையே...


அவர் சொல்வது அத்தனையும் உண்மையாய் இருந்தால்...கடவுளே அப்படியிருக்கக் கூடாது.. என்னை என் தவறுகளை ஒழித்து வைக்க ஒரு ஓட்டையும் இல்லாது போவதை என்னால்த் தாங்க முடியாது.... அவர் தன் தங்கையைப் பற்றியும் .. குறைவாகத் தான் "ஒப்பீட்டு" வாக்கியம் கொடுக்கின்றார்.

அதுவே உண்மையாக அப்படியே இருந்தாலும் அதைப்போல.. என்னால் கொடுக்க முடியாது. எத்தனை விதமாக சப்பைக் கட்டு கட்டுவது என்பதிலேயே என் கவனம் இருந்திருக்கும்.

இன்னும் போக வேண்டிய தூரம் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. உள்ளத்தில் களவு வைத்திருக்கும் நாங்கள் எவ்வளவு தூரம் நேர்மையாக அல்லது வெளிப்படையாக இருப்பவர்களை விட மேன்மையானவர்கள். நிறைய எழுத ஆசை இருக்கின்றது. நேரமும் வசதியும் வாய்க்கட்டும்...

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil