ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 16, 2009


ஐயையோ மறுபடியும் தந்தியா?"என்னப்பா பேக் எல்லாம் எடுத்திட்டியா ? "
"எடுத்துட்டேம்பா.."
"சர்டிபிக்கேட்.."
"எடுத்தாச்சப்பா.."
"ஸ்டேஷன் வரைக்கும் வரட்டுமாப்பா? "
"வாணாம்பா நா பாத்துக்கிரேன்"
"போய்ச் சேந்த உடனே ஒரு தந்தியடிச்சுடு.."
"ஐயையோ.."
"ஏம்பா.."
"தந்தியெல்லாம் கட்டணங் கூட்டிட்டாங்கப்பா.. 28 ரூபாயாம்.."
"அதனால என்னாப்பா"
"என்னப்பா நாட்டு நடப்பெல்லாம் தெரியாதா.."
"என்னா சொல்ல வாராய்"
"கோடி கோடியாய் சம்பாதிக்கிர கலைஞரே கட்டுப்படியாகாதுன்னு கடிதம் எழுத ஆரம்பிச்சிட்டார்.."
"அவர் யாருக்கப்பா எழுதுரார்"
"சோனியாவுக்கும் மன்மோகன் சிங்குக்கும் தான்"
"என்னத்தை பற்றி.."
"வழமையான ஈழத்தமிழர் விவகாரம் தான்"
"அவங்க இன்னும் உயிரோடு இருக்காங்களா?"
"யாரு"
"ஈழத்தமிழர் தான்"
"?!?!..."


குறிப்பு:

சென்னை, மே 16: இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அவர் சனிக்கிழமை கடிதம் எழுதினார்.

1 comment:

ரங்குடு said...

இலங்கைப் பிரச்சனை கார்டு விலை கூட பெறாதுன்னு முடிவுக்கு வந்துட்டார் கலஞர்.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil