ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, May 22, 2009


புலிகளின் வீழ்ச்சி எழுச்சி இன்ன பிற


புலிகளின் வீழ்ச்சி எழுச்சி பற்றியெல்லாம் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் எழுச்சி வீழ்ச்சி என்று தான் எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் இப்படி எழுதுவது தான் சரியாயிருக்கும். புலிகளின் எழுச்சி என்பது தனி மனிதர்களின் அல்லது ஒரு இயக்கத்தின் எழுச்சியல்ல. அது ஒரு இனத்தின் எழுச்சி .. அதை அவரவர் எண்ணங்கள் கருது கோளுக்கு இயல்பாக இலகுவாக மறந்து விடுகின்றார்கள். அல்லது மறந்ததாகக் காட்ட முயல்கின்றார்கள். ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கின்றது. ஒரு நூற்றாண்டு அடிமைத்தனத்தின் வெறுப்பில் இருந்து இது வெளிப்படுகின்றது.

அது எத்தனை ஏகாதிபத்தியங்களின் ஆயுத பலத்தாலோ உலக ஒழுங்கை நேர்கோட்டில் கொண்டு வர முயலும் சில முதலாளித்துவப் போக்கிரிகளாலோ கட்டுப்படுத்தமுடியாது. அப்படித்தான் மனிதத்தின் வெளிப்படுகை இருக்கின்றது. முடிந்தால் அடக்குவது முடியாவிட்டால் அனுசரிப்பது ..அப்படித்தான் முதலாளித்துவம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதை உணர்ந்தவர்கள் தான் வாழத் தகுந்தவர்கள்.

பதிவுகளைப் படித்தபோது மிகப்பெரிய ஆச்சரியமும் முட்டாள்த்தனமுமான ஒரு விடயத்தைக் காண நேரிட்டது. மேற்கு நாடுகளுக்கு வரும் அகதிகளைக் கட்டுப்படுத்தவும் இருக்கும் அகதிகளைத் திருப்பி அனுப்பவும் அவை எடுத்த நடவடிக்கைதான் இந்த புலிகளின் முடக்கம் என்ற கண்டு பிடிப்பை வெளியிட்டிருக்கின்றார் கலையரசன். எனக்கு எதால் சிரிப்பது என்று தெரியவில்லை.

மலிவு விலைத் தொழிலாளர்களை இறக்கும் ஒரு நோக்கமே இவ்வாறான இன குழு மோதல்களை ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாக்குவதும் ஆயுத விற்பனையை அமோகமாக்குவதும் இந்த மேற்கு நாடுகள் தான் என்ற திறந்த உண்மையை மறைத்து பொய் பேசவும் ஒரு திராணி வேண்டும்.அது கலையரசனிடம் நிறையவே இருக்கின்றது. இனி அவரின் புழுகுகளைப் படிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றேன்.

அதைப்போலவே புலிகளின் வீழ்ச்சி பற்றியும் அடுத்தது என்னவென்பது பற்றியும் விளாசலும் கிழித்தலுமாகக் காலம் நகர்கின்றது. நம் தோழர்களும் இன்னும் பெட்டி படுக்கையைக் கட்டவில்லை போலிருக்கின்றது. நான் நினைத்தேன் இதற்குள் மாக்ஸிஸத்தின் சிவப்பு ஓசோன்கள் ஈழமெங்கும் பரவிப் படிந்திருக்குமென்று. ஆனால் அவர்கள் இன்னும் இங்கு தான் இருக்கின்றார்கள். சிலரின் பதிவுகள் ஓரிரு பொழுதுகளில் தட்டுப்படுகின்றது. புலிகள் இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற மறுபரிசீலையில் மூழ்கியிருக்கின்றார்கள் போல் இருக்கின்றது. புலிகள் இல்லாத பொழுதில் இவர்கள் வெறும் ஜீரோக்கள் என்பது தான் உண்மை. சுயமான அரசியல் இல்லாதவர்கள் இப்படித்தான் ..பலதிசைகளிலும் நசுக்கப்படுவார்கள்.

கலைஞரின் சாணக்கியம் தோற்றதில் எனக்கும் அளவில்லாத சந்தோஷம். சாணக்கியம் எதைப்பற்றியது .. தன் சொந்தக் குடும்பம் சார்ந்தது.. அதைத்தாண்டிவரும் கொடுப்பினை கறுப்புக்கண்ணாடி கழட்டாத கருணாநிதிக்கு இந்த ஜென்மத்தில் வாய்க்கப்போவதில்லை. அதை உணராத அப்பி போன்றவர்களுக்கு இருக்கின்றதே 2 ரூபா மலிவு விலை அரிசி வாய்க்கரிசியாகப் போடுவதற்கு. அந்த ஆப்பு எப்படி வைக்கப் போகின்றார் என்று சொல்லி விட்டால் பரவாயில்லை. ஏனென்றால் ஏற்கனவே பலபேர் இறுக்கிய ஆப்பில் பின்பக்கம் வீங்கி இருக்கின்றது. அவருக்கும் ஒரு இடம் ஒதுக்குவது பற்றி எனக்கொன்றும் ஆட்சேபனையில்லை.

கருணாநிதியின் எதிர்பார்ப்புக்களை தகர்த்துப்போட்ட பெருமைக்குரியவர்கள் ..இந்தியாவின் "குடி மகன்"கள் தான். அவர்களின் அரசியல் நேர் கோட்டிலானது. இன்றைய பொழுது இன்றைய வாழ்வு.. அதற்கப்பால் சிந்திக்க ஏதுமில்லை. இந்தியாவின் எதிர்காலம் இவர்களின் கைகளில். எனக்கும் ஒரு பிஸினஸ் கனவு இருக்கின்றது. எப்படியாவது ஒரு டாஸ்மாக் கடைக்கு ஓனராகி விடவேண்டும். என் தலை முறையே உட்கார்ந்து சோறு திங்கும்.

கலைஞரின் சாண (ம் ந)க்கியத்திற்கே மீண்டும் வருகின்றேன். ஏழு எட்டு என்று விமானம் புக்பண்ணி டில்லி போனதற்கு ஒன்றும் வாய்க்கவில்லை. இன்னும் அரசியல் கத்துக்குட்டி தான் கருணாநிதி. தமிழனின் தலையில் அரைக்கும் மிளகாய்க்கும் டில்லி வாலாவிற்கு வைக்க வேண்டிய உறைப்பிற்கும் வித்தியாசம் இருக்கின்றது என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை இந்தக் கிணற்றுத் தவளை.. காங்கிரஸ் தப்பிப்பிழைத்ததில் கருணாநிதியைத்தவிர மற்றவர்கள் பெருமூச்சு விடுவார்கள். முக்கியமாக சோனியா. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பெரும்பான்மைக்கு கிட்ட வந்ததில் சோனியாவின் பருப்பு ஈரமாகியிருக்கின்றது.

இத்தனைக்கும் பிறகு பிளைட் பிடித்து போக முதல் ஒரு தந்தி அடித்திருக்கலாம் மு.க.... பேஸ்த்தடித்துப்போன முகத்தைகாப்பாற்றிக்கொள்ள ஏதாவது சமிக்ஞை கிடைத்திருக்கலாம். தி.மு.க விற்குப்போட்டியாக மம்தாவின் திரிணமூல் கிடைத்ததில் சோனியாவிற்கு அதீத மகிழ்ச்சி . மு.க போல பேரன் பூட்டன் வம்சாவளிக்கெல்லாம் அமைச்சு கேட்கும் பிடுங்கல் மம்தாவிடம் இல்லை என்பதே அந்த ஆறுதல்.

தி.மு.க செயற்குழு கூட்டம் என்றார்கள். செயற்குழு எங்கே இருக்கின்றது.கிச்சன் காபினட் தானே முடிவுகளை எப்போதும் எடுப்பது. இப்போதும் அது தான் நடக்க வேண்டும். அது தான் தாமதம். புதிய நட்சத்திரம் அழகிரியை மத்திக்கு தள்ளிவிடுவதே தன் பிள்ளைக்கு மாநிலத்தில் செளயன்யம் என்று ஆண்டாளு யோசிப்பதில் தவறே இல்லை. தளராத தொங்காத ஒரு தோட்டம் என்றால் அது ராஜாத்தி முகாம் தான். இத்தனை நாள் தொண்டு கிழவனுடன் குப்பை கொட்டியதற்கு கனி மொழியை உயர்த்தி அழகு பார்ப்பதில் உள்ள ஆசையையும் புரிந்து கொள்ள வேண்டியது தான். அக்கா மகள் அத்தியந்த நண்பனின் மகன் பேரன் என்று எத்தனையோ பாசப் பிடிகளால் இறுக்கி வைத்திருக்கும் தயாநிதியையும் ஒதுக்கி விடமுடியாது. இனி ஸ்பெக்ரம் புகழ் ..எக்ஸட்ரா ..எக்ஸட்ரா.. வகை தேவைகள் இருக்கின்றது.

தி.முக விற்கு இருக்கும் தேவைகள் போல் காங்கிரஸிற்கு அடுத்த 5 வருடத்திற்கு எந்தத் தேவையுமில்லை. தி.மு.க போனால் அ.தி.மு.க எப்போதும் அவைலபில் ..அட்டாக் விளைவு கூட்டணி...அதனாலேயே காங்கிரஸின் அதிரடி ஆட்டங்கள் இதைப்போல இன்னும் தொடரும்..இது ஏன் இப்படி என்று சாணக்கியம் தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்.

சாதாரண மக்களுக்குத் தான் இது எதுவும் புரியவில்லை...

3 comments:

ஜனகன் ஞானேந்திரன் said...

கலையரசனின் கட்டுரையில் பல்வேறு காரணங்கள், அரசியற் போக்குகள் அலசப்பட்டு கடைசிப்பத்திகளில் மேலதிக காரணங்களில் ஒன்றாகத்தானே அகதிப்பிரச்சினை சொல்லப்பட்டுள்ளது?

அகதிப்பிரச்சினைதான் புலிகளை ஒழிக்கக்காரணம் என்று அவர் சொல்லியிருப்பதாக நீங்கள் சொல்வது ஏன்?

அந்த பந்தியை மட்டும்தான் கலையரசனின் கட்டுரையில் படித்தீர்களா, இல்லை வேண்டுமென்றே அப்பதிவு சொல்லும் கருத்துக்களைத் திரிக்க முயல்கிறீர்களா?


புலிகளை நிபந்தனையற்று ஆதரித்து கொடிபிடித்த புலம்பெயர் தமிழகக்கூட்டம்கூடத்தான் இன்னும் பெட்டி படுக்கை கட்டவில்லை. பாதுகாப்பாக"அங்கே" இருந்துகொண்டு தொடர்ந்து கொடிபிடிக்க வழி தேடுகிறது

இட்டாலி வடை said...

வாருங்கள் ஜனகன் !

நான் மீன்றும் ஒரு முறை படித்துப் பார்த்தேன்..நீங்கள் சொல்வதைப்போல "பல்வேறு காரணங்கள், அரசியற் போக்குகள்.." என்னால் காண முடியவில்லை.

அகதி பிரச்சினை தவிர்ந்த அவர் குறிப்பிட்டிருக்கும் "காத்திரமான பிரச்சினைகளை.." நீங்கள் பட்டியல் இட வேண்டும். எங்களை போன்ற சாதாரணர்கள் புரிந்து கொள்ள பேருதவி செய்த காருண்யத்தை நீங்கள் அள்ளிக் கொள்வீர்கள்...

Unknown said...

ITALY VADAI NOW SUPERB.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil