ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, May 18, 2009


இந்திய -மேற்கு இராஜதந்திரத் தோல்வி


இன்றைய ஈழத் தமிழ் மக்களின் பின்னடைவு என்பதையும் விட இது இந்திய- மேற்குலகின் இராஜ தந்திரத் தோல்வியாகத்தான் பார்க்கப்படுகின்றது. இதற்குள் ஏன் இந்தியா என்ற கேள்வி இப்போது எழுகின்றது. இந்தியாவின் கையை விட்டு இலங்கையும் ஈழப்பிரச்சினையும் நழுவி நாளாகி விட்டது.அப்போது ஏன் இந்தியா பாய்ந்து பாய்ந்து ஆயுத உதவி செய்தது என்ற கேள்வி எழுகின்றது. குற்றுயிரும் குறையுயிருமாக சேடம் இழுத்துக் கொண்டிருந்த இலங்கை -இந்திய உறவை ஒட்டுப்போட தோற்று விட்ட இந்திய இராஜதந்திரிகள் செய்த கடைசி முயற்சி ..அவ்வளவே.

அதுவும் இன்றுடன் முடிவிற்கு வந்து விட்டது. இன்று இலங்கைப் பிரச்சினையில் மாஸ்டர் மைண்ட் - அது சீனாதான். அவ்வளவிற்கு சீனாவின் பிடி வலுவாக இறுகியிருக்கின்றது. பொருளாதார நெருக்கடிகளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மேற்கு நாடுகளின் பிடியில் இருந்து உலக நாடுகளின் மீதான ஆதிக்கம் நழுவிப் போவதன் ஆரம்பம் இது.



அமெரிக்காவின் ஆலோசனைக்கிணங்க பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லிபாண்ட்டும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னரும் எடுத்த இறுதி முயற்சியும் அடைந்த தோல்வியின் பின்னால் இருந்தது சீனாவே தான். ஐ.நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸில் பூச்சாண்டிகளையெல்லாம் இலங்கை ஒதுக்கித் தள்ளியதன் பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாதுகாப்புக் கவுன்ஸிலில் திறந்த ஒரு விவாதத்திற்கே இலங்கைப் பிரச்சினை எடுக்கப்படுவதில் இருந்து இலங்கையைக் காத்து நின்றது சீனாவே தான். ஒரு முறையல்ல இரு முறையல்ல மூன்று முறை தன் வீட்டோ அதிகாரத்தை அது பாவித்தது. கடந்த புதன்கிழமை ஐ. நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸிலில் நடைபெற்ற மூடிய விவாதத்தில் கூட இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை எடுக்கவிடாது மேற்கு நாடுகளின் கையை கட்டிப்போட்டது.

அதனால் தான் போர்க்குற்றவாளியாக இலங்கையை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தும் புது அஸ்திரத்துடன் பிரிட்டன் களமிறங்கியுள்ளது. அதைப்போன்ற அடுத்த அஸ்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையை நிறுத்தி வைக்கும் கிளாரி கிளிண்டனின் கூக்குரல். அதுவும் தமிழ் மக்களின் மீது கொண்ட காதலினால் அல்ல. இலங்கையில் தன் பிடியை இறுக்கிக் கொள்ளவே.ஆனாலும் சீனா பின்னணியில் இருக்கும் வரை மேற்கின் ஜம்பம் ஒன்றும் எடுபடப்போவதில்லை.

கடந்த வருடம் இலங்கைக்கு வழங்கப்பட்ட சீன உதவி 660 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண். அத்துடன் ஆறு போயிங் எவ்-7 ஜெற் சண்டை விமானங்களும் 25 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான யுத்த தளபாடங்கள் மேலதிகமாகவும் வழங்கப்பட்டது.

இத்துடன் ஒப்பிடும் போது இந்தியாவின் ராடாரும் அர்ச்சுனா ரக தாங்கிகளும் பிச்சைக்காசு பெறாத உதவி.

மேற்குலகாலேயே தடுத்து நிறுத்தமுடியாது ஆச்சரியத்துடன் பார்க்கமட்டுமே முடிந்தபோது கலைஞராலும் பிரணாப் சோனியா வகையறாக்களாலுமா ? தடுத்து நிறுத்தி விட முடிந்திருக்கும்.

இந்த நன்றிக்கடனுக்காக சீனாவிற்கு என்ன கிடைத்தது. இலங்கையின் தென்பகுதியில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் துறை முகம் எதிர் காலத்தில் சீனாவின் கடற்படை முகாமாகச் செயல்படுத்தும் உத்தரவாதம். அதன் மூலம் மத்திய தரைக்கடலில் இருந்து சீனாவிற்கு எண்ணை செல்லும் கடற்தடங்கள் பாதுகாக்கப்படும்.

இதே தேவையும் ஆர்வமுமே ஜப்பானின் இலங்கை மீதான கரிசனைக்கும் காரணமாகும். சீனாவின் இலங்கை மீது இறுகிச் செல்லும் பிடி இலங்கையில் இருக்கும் மற்றைய சக்திகளை வெளியேற்றி இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை வளர்த்துச் செல்லும்.

அப்போது இந்தியாவும் அமெரிக்காவின் உதவியை நாடி ஓடும். சீனாவை எதிக்கும் முன்னோடித் திட்டம்தான் இந்திய-அமெரிக்க அணு ஆயுத உதவி ஒப்பந்தம். இன்னும் 5 வருடங்களுக்குள் சீனா இந்தியா மீது நேரிடையாகவே தலையிடத் தொடங்கும். இதில் என்ன துரதிர்ஷ்டமென்றால் இவர்களின் ஆக்கிரமிப்புப் போரில் முதல் பலியானது ஈழத் தமிழினம் என்பது துரதிர்ஷ்டமே.

President Mahinda Rajapaksa's government has won China's financial, military and diplomatic support – along with the confidence to brush off Western protests about its behaviour.

In the closing stages of the assault on the Tamil Tigers, the army surrounded about 50,000 civilians inside a tiny enclave. Other governments would have found it difficult to resist outside calls for a unilateral ceasefire, at least to allow the evacuation of wounded innocents. If the Security Council had thrown its weight behind these demands, backing them with a United Nations Resolution, they would have become still harder to ignore.

But Mr Rajapaksa dismissed all calls for restraint and Sri Lanka's army duly pressed on until final victory. His only gesture to outside opinion was a promise to refrain from turning heavy artillery on thousands of people trapped inside the enclave. Evidence gathered by Human Rights Watch, including satellite imagery and eyewitness accounts, suggests this pledge was quickly broken.

Less fortunate governments would have paid a diplomatic price for this behaviour. But China has consistently shielded Sri Lanka, notably by keeping the crisis off the agenda at the UN. Until last Wednesday, Beijing had managed to prevent the Security Council from even discussing the situation. When a debate was conceded, Chinese objections ensured there was no resolution and the Council took the minimalist option of releasing a statement of concern.


What has Sri Lanka given in return? The answer is that China has acquired a strategic ally near the crucial Indian Ocean shipping lanes which carry energy supplies from the Middle East. Beijing is now building a port on Sri Lanka's southern coast which could serve as a future naval base

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil