ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 31, 2009


பதில் தேடும் பத்துக் கேள்விகள்உலகெங்கும் வாழும் தமிழர்கள் உறுதி கொல்ள வேண்டிய நேரம் இது. அடிமைகள் போல அழிந்து போகும் இனமல்ல நாம். அராஜகங்களைக் கண்டு துவண்டு போகக்கூடியவர்களும் அல்ல நாம். தணியாத சுதந்திர தாகம் கொண்டவர்கள். தனிப்பெருமைகளைக் கொண்ட இனம். இந்து சமுத்திரத்தில் ஒரு இஸ்ரேல் போல வலிமையுடன் எழப் பிறந்தவர்கள் நாம். இந்தியா அல்ல எந்த வல்லரசு வந்து எதிர்த்து நின்றாலும் எங்கள் சொந்த மண்னை விட்டுக்கொடுக்க மறுப்பவர்கள் நாங்கள்.

சிங்களச் சிறிலங்காவின் அராஜகம் எங்களைத் துவைத்துப் போட்டிருக்கலாம். ஆனால் துவண்டு போகாதவர்கள் நாம். இந்தியாவின் இறுமாப்பை உடைக்கவென்றே பிறந்தவர்கள் நாம். இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் அது நடந்தே தீரும்.

எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அதை இழைத்தவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். சோனியாவின் சீலை முந்தானையில் முடியப்பட்டவர்கள் அல்ல நாம்.எங்களை அழிக்க இரசாயன, தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொடுத்துதவிய இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவும் அந்த வலியை உணர வேண்டும்.

சர்வதேச நாடுகளின் மனிதாபிமானப் பார்வையை எங்களை நோக்கி கொண்டு வரவேண்டும். தூங்கிக் கிடப்பதற்கு இதுவல்ல நேரம். 'கௌண்டர் கரண்ட்ஸ்'என்ற இந்தியப் பத்திரிகை எழுப்பிய பத்துக் கேள்விகள் இவை. இன்னும் பதில் இல்லாத கேள்விகள். எங்கள் ஒற்றுமையும் முயற்சியுமே பதிலைக் கொண்டு சேர்க்கக் கூடியன.


1. இறுதி வாரங்களில் மோதல் தவிர்ப்பு வலயப்பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் எவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் உடலங்களுக்கு என்ன நடந்தது?

2. நோயாளர்களுக்கும், காயமடைந்த மக்களுக்கும் பாதுகாப்பு வலயப் பகுதியில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைகளை ஏன் சிறிலங்கா இராணுவம் மீண்டும் மீண்டும் எறிகணைகளால் தாக்கினார்கள்?, உலகின் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கிய மருத்துவர்களின் நிலை என்ன?

3. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா இராணுவம் எத்தகைய தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது, அதனை வழங்கிய நாடுகள் எவை?

4. போர் முடிந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றபோதும் ஏன் அவர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களையும், மனிதாபிமான பணியாளர்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் அங்கு அனுமதிக்க மறுத்து வருகின்றனர்?

5. ஏன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம்களுக்குள் பலிகொடுக்க தடுத்து வைக்கப்படும் மிருகங்களை போன்று தடுத்துவைக்கப்ட்டுள்ளனர்?, அந்த முகாம்களில் உள்ள இளைஞர்கள் ஏன் கடத்திச் செல்லப்படுகின்றனர்?

6. விசாரணைகளின்போது தமிழ்ப் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக ஏன் மீண்டும் மீண்டும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன?

7. அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை என்றால் போரில் கொல்லப்படுபவர்கள், துன்புறுத்தப்படுபவர்கள் தொடர்பாக ஏன் ஊடகவியலாளர்கள் விசாரணைகள் செய்யப்படுகின்றனர்?

8. ஒரு சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாரிய வன்முறைகளை மேற்கொண்ட இனவாத அரசாங்கத்தினால் உடனடியான புனர்வாழ்வையும், நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வையும் முன்வைக்க முடியும் என எவ்வாறு நம்பமுடியும்?

9. போரியல் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அனைத்துலகத்தின் நீதிமன்றத்தின் முன் மகிந்த ராஜபக்சவையும், அவரின் கீழ் இயங்கிய உயர் கட்டளைப் பீடங்களின் அதிகாரிகளையும் நிறுத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?

10. தற்போது விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டுள்ளனர் எனவே மிகவும் மோசமான சிங்கள சிங்கங்கள் மீது உலகம் அக்கறை கொள்வதற்குரிய நேரம் இதுவா?

ஈழத்தமிழன் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர் எவரும் இத்திசை நோக்கி நடக்கலாம். அவன் இந்தியனாய் இருக்கட்டும் தமிழனாய் இருக்கட்டும் அடிப்படையில் மனிதனாக இருந்தாலே போதுமானது.

மனிதம் இன்னும் உலகில் மிஞ்சி இருக்கின்றது என்ற இறுதி நம்பிக்கையுடன் செத்துப் போன அந்த மனிதர்களுக்காக....

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil