ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, May 22, 2009


அரசியலும் அழுக்குச் சாமிகளும்


அரசியல் எழுதி எழுதியே போரடித்துப் போயிருக்கின்றது. அரசியல் என்பது ஒன்றுமில்லை அது தான் சார்ந்த வாழ்க்கை குறித்தான ஒரு பிரக்ஞை என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். அதை பர்றி எழுதப்போக என்னையும் தீர்க்கதரிசியாக்கி விட்டது ஒரு அனானி. நல்ல காலம் ஒரு சாமியாராக்காது விட்டதில் சந்தோஷம்.

சாதாரண குடி மக்களின் நிம்மதியைக் குலைக்க வேண்டு மென்றே திட்டமிட்டு வேலை செய்யும் இந்தச் சாமியார்களை என்ன செய்வது. இருக்கும் ஒன்றையும் வெட்டியெடுத்து விட்டு சாமியாராகப் போக வேண்டுமென்று இந்தியாவில் சட்டம் போட வேண்டும்.

உழைத்துக் களைத்திருக்கும் சாதாரண மனிதரின் குடும்பத்தில் திட்டம் போட்டு பிரிவினை செய்யும் இவர்களுக்கு இதை விடப் பெரிய தண்டனை கிடையாது. வீட்டில் சும்மா இருந்து மதர்த்துப் போயிருக்கும் பெண்கள் இவர்கள் வலையில் விழுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் வெள்ளி மட்டும் தான் சாமிகளுக்கானது ..சைவம் என்று இருந்தது..இப்போது செவ்வாய்.. வியாழன் ஞாயிறு என்று ஏகப்பட்ட வாழ் நாளை இந்தச் சாமிகள் அள்ளிக்கொண்டிருக்கின்றார்கள். வீட்டில் பூசை புனஸ்காரம் என்றால் ..எழுதப்படாத தொட முடியாத .. தடா தானே அது.

உலகாதியாய இம்சைகளில் இருந்து விடுபட என்னைப்போல் உங்களைப்போன்ற சாதாரண அப்பிராணிகளின் பொழுது போக்கிற்கும் தடை என்றால் என்ன செய்வது. இதை அமுல்படுத்திய பெருமையெல்லாம் இந்த அடாவடி சாமியார்களுக்கே போய்ச் சேர வேண்டும். போதாக் குறைக்கு சின்னத்திரை முடிவடையா சீரியல்களும் புகழைப்பங்கு போட்டுக் கொண்டிருக்கின்றன.

நிறையக் கோபம் இருக்கின்றது இந்த நடை முறையின் மேல். சாதாரணமாக மறந்து விடுகின்றார்கள்... மனிதன் ஒரு பாலூட்டி விலங்கு என்பதை.

இதைப் புரிந்து கொள்ளும் போது பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்..

2 comments:

கலையரசன் said...

நல்ல பதிவு ..
இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம்.
{முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள்
வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்}
நம்ம பக்கமும் வாங்க..

இட்டாலி வடை said...

வாங்க கலையரசன்!
தொடர்ந்தும் சந்திப்போம்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil