ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, May 4, 2009


ஆப்படிக்கிறார் அப்பி


அ.தி.மு.க தலைமைக்கு மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் ஸ்டண்ட் அடிப்பதில் இவர்களை அடிக்க ஆளே கிடையாது. அது என்ன தேர்தல் சமயத்தில் மட்டும் வெடிகுண்டு மிரட்டல்..

"உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கும், போலீஸாருக்கும் இடையிலான மோதலைத் தூண்டிவிட்டதன் மூலம் தமிழக மக்களுக்கும் அரசுக்கும் மாபெரும் அநீதியை இழைத்துள்ளீர்கள். இதற்காக உங்களை இந்த உலகத்திலிருந்து அழித்திட முடிவு செய்துள்ளோம். இதற்காக உங்கள் வீட்டு வாயிலில் பயங்கர வெடி குண்டுகளை வைத்துள்ளோம்; நீங்கள் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது அவை வெடிக்கும்."

புலிகளையும் இழுத்து விடவும் முயற்சி செய்யப்பட்டுள்ளது. "ராஜீவ் காந்தியின் மரணத்தைப் போல உங்கள் இறப்பும் அமையும். மே 1-ம் தேதியிலிருந்து 4-ம் தேதிக்குள் இது நிகழும்' என அதில் டைப் செய்யப்பட்டுள்ளது."

எழுதியவன் காங்கிரஸ் காரனாகவும் இருக்கலாம். ஜெயலலிதா புலிக்கெதிராக ஏதாவது சொல்லித்தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுவிட மாட்டாரா என்ற நப்பாசையும் தொக்கி நிற்கின்றது.

பால் பொங்கி வரும் போது ..பானையை உடைக்க ஜெயலலிதா என்ன ஏமாளியா?

மக்கள் எல்லாம் வெறும் கேணையன் என்று நினைத்து விட்டார்கள் போலும். தி மு.க வின் மீது பழி போட வேண்டும் என்ற நோக்கமும் இருக்கலாம் 'தமிழக மக்களுக்கும் அரசுக்கும் மாபெரும் அநீதியை இழைத்துள்ளீர்கள்.." என்பதிலேயே தி.மு.க அரசின் மீது பழி போடும் நோக்கம் தெரிகின்றது. இதையெல்லாம் மக்கள் நம்புவார்கள் என்று கிறுக்குத் தனமாக யாரோ நினைத்து விட்டார்கள்.

உண்மையிலேயே வெடி குண்டு வெடிக்க வைப்பவன் சொல்லிப்போட்டா வெடிக்க வைப்பான்.அதுவும் "உங்கள் வீட்டு வாயிலிலேயே பயங்கர வெடிகுண்டுகள் வைத்துள்ளோம்..'' கேணைப்பயல்கள்... ஜெயலலிதா இனி புழக்கடை வழியாகப் போய் வரவேண்டியது தான்.

அ.தி.மு.க வின் உட்கட்சி உடான்ஸ் என்றால் பாவம் அவர்கள்..
புலிகளின் மீதும் பழி போட முடியாது ..ஜெயாவின் நாடகங்கள் எல்லாம் புஸ்வாணமாகப் போய்க்கொண்டு இருக்கின்றது. புலி ஆதரவு அல்லது எதிர்ப்புத் தான் ஆட்சியையே தீர்மானிக்கும் வங்குரோத்துத் தனத்தில் தமிழக அரசியல் இருக்கின்றது.

பட்ட காலிலே படும் என்பார்கள். எடுத்த காரியம் எல்லாம் சறுக்கலாகிப்போக அந்த மனக்கவலையிலேயே ஹாஸ்பிட்டலில் படுத்திருக்கும் கலைஞரையும் சும்மா விட்டு விடுவதாக இல்லை.

மதுரையிலிருந்து அடுத்த "டோக்கன் " பூகம்பம் கிளம்பியிருக்கின்றது. விடாரணை அறிக்கை டெல்லி வரை போய்விட்டது. ஆரத்தி எடுத்த பெண்களிலிருந்து அனைவருக்கும் டோக்கன் கொடுக்கின்றார் முதல்வரின் மகன். டெல்லியில் தி.மு.க கூட்டாளி் காங்கிரஸ் இருப்பதனால் இப்போதைக்கு நெருக்கடி இல்லை. திருமங்கலத்தில் ஸ்டாலினும் ஐநூறு ரூபா நோட்டும் நாடு முழுவதும் உள்ள டி.விக்களுக்குத் தீனி போட்டடன. அதனாலேயே டோக்கன் சிஸ்டம். விஞ்ஞான வளர்ச்சி அவ்வளவு முன்னேறியிருக்கின்றது.

தி.மு.க காங்கிரஸ் இடையே மாநிலத்தில் விரிசல் தொடங்கியிருக்கின்றது.."டில்லியிலே கருணாநிதி வாய்ஸ் தான் பலமாக ஒலிப்பதாக" வெட்கத்தை விட்டுச் சொல்லியிருக்கின்றார் இளங்கோவன்.
மத்தியில் இருப்பவர்களுக்கு மத்தியில் ஆட்சியைப் பிடிக்க கூட்டணி பலம் தேவை. மாநிலத்தில் இருப்பவர்கள் செருப்புத் துடைத்தால் என்ன? மானத்தை விட்டு அம்மணமாய்த் திரிந்தால் என்ன?

கலைஞர் செய்யாத தியாகத்தையா இவர்கள் செய்து விட்டார்கள்? அவர் தானே இவர்களுடன் கூட்டுச் சேர்ந்து நாற்பதையும் ஜெயலலிதாவிற்கு விட்டுக்கொடுத்து விட்டாரே?

வாய் பேசாத 'ரோபோ'பொம்மை ஒன்று தமிழகத்திற்கு வருகின்றது. மன்மோகன் சிங்கைத் தான் சொல்லுகின்றேன். பிரதமர் வேட்பாளராக அவரை முன் நிறுத்துகின்றார்கள். அது சரி அவர் எந்தத் தொகுதியில் கேட்கின்றார்? அல்லது வழமைபோல பின் வாசல் வழிதானா?

காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது பற்றி மேலிடத்திற்கே நம்பிக்கையில்லை. நம்பிக்கையிருந்திருந்தால் துணிந்து ராகுலின் பெயரை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பார்கள். அப்படியே தப்பித் தவறி வென்றாலு்ம் மன்மோகனால் முழு ஆட்சிக்காலமும் இருக்க முடியாது. ராகுலிற்கு இடத்தைக் கொடுத்து விட்டு வாலண்டியர் ரிட்டயமன்ற் எடுத்துக்கொண்டு போய் பொற்கோவிலில் செருப்பு துடைக்க வேண்டியது தான்.

இந்திராகாந்தி என்ற ஆலமரம் சரிந்ததில் ஏற்பட்ட நில அதிர்வில் கொல்லப்பட்ட சீக்கியர்களை புதைத்துப்போட்ட ஜக்தீஸ் டைலரை விடுதலை செய்யும் உத்தரவிற்கு தலையாட்டிய பாவம் காத்திருக்கின்றது. இந்திராகாந்தியின் "புளூ ஸ்டார் ஒப்பரேஷன் "நாடகத்தில் தலையாட்டிய ஜெயில்சிங்கும் இதேபோல செருப்புத் துடைத்தவர் தான்.

இரண்டு இலட்சம் பேர் தேசியத் தலைவன் என்று சொல்லலாம்.. ஒண்ணரைக் கோடி தமிழங்க தமிழினத்தலைவர்னு சொல்லக்கூடாதா? என்று ஒருவர் கிளம்பியிருக்கின்றார். சொல்லலாம் ..நம்ம கிட்டேயும் ஒரு வார்த்தை கேக்கணும்.. தெரியாத் தனமா நாமளும் தமிழ்ச்சாதியாகப் பிறந்து விட்டோம். தமிழகத்தில அரைவாசிப்பேர் கலைஞரை சாதா தலைவராகக் கூட ஏத்துக்க தயாரில்லை...

வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஆப்பு அடிக்கப்போகின்றாராம். இவர் ஆப்படிக்க மத்தவனெல்லாம்... அட போங்கடா நீங்களும் உங்க நெனைப்பும்...

3 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே !
என்ன தான் சண்டை போட்டாலும் இந்த விசயத்தில் இரண்டு கட்சிகளுமே ஒன்று தான் !!
திரு. ஸ்டாலின் அவர்களை தாக்க வந்ததாக கூறி அவரின் பாதுகாப்பை பலப்படுத்தியது, சில நாட்கள் முன் மதுரை மாநகரில் தி மு க கட்சி அலுவலகம் அவர் தம் கட்சி மூலமே தீ வைக்கப்பட்டது போன்றதே இந்த மிரட்டல் கடிதம் ..

ஆனாலும் இந்த அம்மா கட்சியினர் மற்றவர்களை இந்த அளவிற்கு முட்டாள் ஆக நினைக்க கூடாது !!!

பதி said...

//தமிழகத்தில அரைவாசிப்பேர் கலைஞரை சாதா தலைவராகக் கூட ஏத்துக்க தயாரில்லை...//

முதலில், அண்ணா கண்ட அந்த அருமையான இயக்கத்தினை கழிசடையாக மாற்றிய ஈனப் பிறவியினை மனிதனாக எத்தனை பேர் ஒப்புக் கொள்கின்றனர் என ஆராய்ச்சி செய்வோம்..

ஒரு சிறிய திருத்தம், அவர்களின் கணக்குப்படியே பார்த்தாலும் முக்கால்வாசிக்கும் மேலானோர் ஒப்புக் கொள்ள தயராக இல்லை.. :)))))

//வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஆப்பு அடிக்கப்போகின்றாராம். இவர் ஆப்படிக்க மத்தவனெல்லாம்...//

மனநிலை பாதிக்கப்பட்டோர் பிதற்றுவதை எல்லாம் பதிவிலேற்றுவதை ஆட்சேபிக்கின்றேன்... !! நாளையே இவர்களின் ஈனத் தலைமை ஒரு யூ டர்ன் அடிக்கும் பட்சத்தில் கொஞ்சமும் வெக்கமில்லாமல் ஒரு பதிவை முதல் ஆளாக போட்டு வைப்பர்.. கொள்கை என்று ஏதாவது இருந்தால் தானே... இருப்பது பக்தி அள்ளவா...

அன்பு said...

அம்மையார் தனக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் என்று இந்த தேர்தல் சமயத்தில் கூட அடிக்கடி சொல்லி வருகிறாரே, தீவிரவாதின்னா யாரு எலிகளா :-))

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil