ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Wednesday, May 20, 2009
காக்கா மூக்காக்களும் முனகானவும்
இலங்கை விவகாரத்தில் இப்போது ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கின்றது. ஒலிம்பிக்கில் சீனா தங்கப்பதக்கங்களைக் குவித்துக்கொண்டிருக்கின்றது. நாம் கடந்த கட்டுரையொன்றில் குறிப்பிட்டது போல இலங்கை விவகாரம் இந்தியாவின் கையை விட்டு நழுவி எப்போதோ சீனாவின் சீனக்கடலில் கலந்து விட்டது.
சீனாவின் வற்றாத மஞ்சள் ஆறு தமிழனின் சிவப்பு இரத்தத்தை கழுவிக்கழுவி சிவந்து கொண்டிருக்கின்றது. இப்போது இரண்டு காக்கா மூக்கா இந்தியாவில் இருந்து கொழும்புக்கு விஜயம் செய்திருக்கின்றது. க்டந்த முறை போர் நிறுத்தம் வேண்டி விஜயம் என்று கண்துடைப்பு நாடகம் ஆடி காலிக்கடல் உணவும் சிங்களப் பெண்களின் தேங்காய் துருவலிலும் ஆனந்தப்பட்டு கேரளாவுக்குத் திரும்பி புட்டு சாப்பிட்டு ஆனந்தித்து இருந்தன. இப்போது மீண்டும் ஒரு விஜயம் நழுவிப்போகும் இந்தியப்பிடியை இறுக்கிக் கொள்ள இந்த இரு கோவேறு கழுதைகளும் மூனாக்கானாவுக்கு சொல்லிப்போட்டுப் போயிருக்கின்றதாம்.
ஏண்டா உங்களுக்கு அறிவாளிகளுக்கா பஞ்சம் இந்த இரண்டு மலையாளி செம்படவனும் இல்லையென்றால் இந்தியா என்ன வ்ங்காள விரிகுடாவில்
மூழ்கியா போவிடும்? இந்த இரண்டு பேரும் சிங்களச் சிறுக்கிகளின் பிடியில் என்ன இந்தியாவை அடகு வைத்து விட்டார்களா?
இவர்கள் போய் புலிகள் முழுதாக அழிந்து விட்டார்களா என்று பார்க்கப் போகின்றார்களாம். புலிகள் அழிவார்கள்.. உலகெங்கும் இருக்கும் ஈழத்தமிழன் ஒன்றுவிடாமல் அழியும் போது. அப்போது சொல்லியனுப்புகின்றோம் வந்து கணக்கெடுத்துக் கொள்.
கறுப்புக் கண்ணாடி கழட்டாத மூனாக் கானா என்ன இன்னும் செய்து தொலைப்பதற்கு இந்த அவதந்திர நாடகம். ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளை கனவுகளை சுதந்திர தாகத்தை பூண்டோடு அழித்ததில் உன் இதயம் இன்னும் இனிக்கவில்லையா? உன் கண்கள் இன்னும் பனிக்கவில்லையா?
இன்னும் ஏன் இந்த நாடகம். மக்கள் உணர்வு உன் மனோகரா நாடக போலிப் பம்மாத்துக்களா? போதும் எங்களை விட்டுவிடு... எங்கள் சுதந்திரமாச்சுது எங்கள் உயிராச்சுது... விட்டு விடு எங்களை கொன்றது போதும் விட்டு விடு..
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எம்.கே.நாராயணனுக்கு பதிலா கே.ஆர். நாராயணனைப் போட்ருக்கேள்...
படத்த மாத்துங்கோ...
இதிலே பார்க்கவும்.
http://transcurrents.com/tc/2008/06/post_3.html
வாருங்கள் அனானி!
மாத்தி விட்டேன்...நன்றி
Post a Comment