
"விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவரது தலைமையில் இலங்கையில் 5ம் கட்ட போர் வெடிக்கும், தமிழ் ஈழம் வென்றே தீரும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்.
மிகவும் கேவலமாய் இருக்கின்றது. தமிழக அரசியலில் நக்கித்தின்ன ஆசைப்படும் அரசியல்வாதிகளின் கேவலங்களின் உச்சம் இது. இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப் பட்டபோது துடிக்காத இந்த தெருமா இப்போது ..புதிய வியூகம் வகிக்கின்றது. கருணாநிதியின் வால் பிடித்து சோனியாவின் உள்பாவாடை துவைத்த இது இப்போது 5 ஆம் கட்டப் போர் பற்றி சவடால் விடுக்கின்றது.
தேர்தலில் திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம். தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. இலங்கை தமிழர்களுக்காக ஓர் தனி அணி அமைப்போம் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், பா.ம.க.நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரிடம் மன்றாடினேன். ஆனால் அவர்கள் எல்லாம் அ.தி.மு.க. அணியில் சேர்வதில் தான் குறிக்கோளாக இருந்தனர்.
இந்நிலையில் தான், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்பிறகு தான் நாங்கள் தி.மு.க.கூட்டணியில் இடம் பெற்றோம். இதில் எந்த குற்றமும் இல்லை.
தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றிப் பெற்றோம். இந்த வெற்றி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழவும், தமிழர்கள் தலை நிமிரவும் பாடுபட உதவும் என்று நம்புகிறேன்.
இலங்கையில் போரை நிறுத்தும்படி சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த சோனியாவிடம் மன்றாடினேன். ஆனாலும் கடைசி நிமிடம் வரை இந்திய அரசு நமது வேண்டுகோளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிப்பு வெளியான பின்னர், அங்கு சென்றுவந்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன், 'இலங்கையில் இருப்பது போன்ற மோசமான முகாம்கள் வேறு எங்கும் இல்லை' என்று சொல்கிறார். இதை, போருக்கு முன்னரே சென்று பார்வையிடாதாது ஏன்?
போரின் போது, வெள்ளைக்கொடி ஏந்தி சமாதானம் பேச செய்ய சென்ற நடேசன், பூலித்தேவன் ஆகியோரை, போர் தர்மத்தை மீறி சிங்களப்படைகள் சுட்டுக்கொன்றுள்ளன. எல்லோரும் பலியான பின்னர் தான் எம்.கே.நாராயணன் இலங்கை செல்கிறார்.
இலங்கை அரசுகு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, வங்கதேசம் என சர்வதேச நாடுகள் அனைத்தும் உதவி செய்கின்றன. ஒரு நாடு கூட விடுதலைப் புலிகளுக்கு உதவ முன்வரவில்லை. சிங்களப் படைகள் நான்கு திசைகளில் இருந்தும், 5வது திசையாக வான்வழியாகவும் கிளாஸ்டர் என்னும் கொத்தணிக் குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக மக்களை கொன்று குவித்தது.
என்றாலும், மனம் தளராமல் அத்தனைப் படைகளையும் எதிர்த்து போரிட்ட மாவீரன் அண்ணன் பிரபாகரன் மட்டுமே. அவரது தம்பிகள் நாங்கள். நாங்களும் ஆயுதம் ஏந்தாத புலிகள் தான்.
இலங்கையில் கடைசியாக நடந்த சண்டையில் கூட, சுமார் 12 சிங்களப் படையினரை அழித்துவிட்டுதான் அண்ணன் பிரபாகரனை காப்பாற்றி இருக்கிறார்கள்
விடுங்கையா..எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்.உங்களைப் போல நக்கித் தின்பதும் நயவஞ்சகம் செய்வதும் நாமறியோம்.கறுபுக்கண்ணாடி கழட்டாத கருணாநிதியுடன் கூட்டிச் சேர முன்னர் இது பற்றி எண்ணியிருக்க வேண்டும். முதுகில் குத்திய நயவஞ்சகத்தை நாங்கள் பார்த்தாயிற்று. உங்கள் சுயநலத்திற்காய் வன்னியைச் சுடுகாடாக்கியது போதும். பொத்திக்கொண்டு போங்கடா போக்கிரிகளா?
இதற்கு மேல் உங்களால் ஒரு இனத்தைக் கொல்ல முடியாது. நீங்கள் வாழும் வாழ்க்கையைப்போல கேவலமான வாழ்க்கையை ஆதி மனிதனும் வாழ்ந்திருக்க முடியாது. கற்காலத்தின் காட்டுமிராண்டிகள் கூட ஏதாவது ஒரு நியாயத்திற்கு கட்டுப்பட்டிருப்பார்கள்.
போதும் உங்கள் உயிர் வாழ்தலுக்காக இன்னும் ஈழத்துத் தமிழன் சாவது. கடிதம் எழுதுவது தந்தி அடிப்பது எல்லாவற்றையும் உங்கள் கண்மணிகளுடனும் வைப்பாட்டிகளுடனும் வைத்திருங்கள்.
இந்தியாவை நம்பியிருக்கும் முதுகெலும்பற்ற கோழைகளே ! நீங்களும் வன்னியில் செத்திருக்கலாம். இன்னும் என்ன இருக்கின்றது... வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லாது...